என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்திய சுற்றுப்பயணத்தில் டுபெலிசிஸ் அனுபவம் அணிக்கு பெரிதும் உதவும் என தென்ஆப்பிரிக்க அணி பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.

    முதல் போட்டி வருகிற 12-ந்தேதி தர்மசாலாவிலும், 2-வது போட்டி 15-ந்தேதி லக்னோவிலும், 3-வது போட்டி 18-ந்தேதி கொல்கத்தாவிலும் நடக்கிறது.

    குயின்டன் டிகாக் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி நேற்று டெல்லி வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து முதல் போட்டி நடக்கும் தர்மசாலாவுக்கு சென்றது.

    இந்த நிலையில் இந்திய சுற்றுப்பயணம் குறித்து தென்ஆப்பிரிக்க அணி பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கூறியதாவது:-

    இந்தியா போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும்போது, அணியில் அனுபவ வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் சம அளவில் இருக்க வேண்டும்.

    டுபெலிசிஸ் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார் என்று நினைக்கிறேன். கடைசியாக விளையாடிய போட்டியில் அவர் சதம் அடித்து இருந்தார். அவர் இந்திய சூழ்நிலையை நன்கு அறிந்து வைத்து இருக்கிறார்.

    இந்திய சுற்றுப்பயணத்தில் டுபெலிசிஸ் அனுபவம் அணிக்கு பெரிதும் உதவும். அவர் அணிக்கு ஏன் தேவை என்றால் இந்திய சூழ்நிலையில் டுபெலிசிஸ் நன்றாக விளையாடி இருக்கிறார். அணியில் இளம் மற்றும் அனுபவ வீரர்கள் உள்ளனர்.

    இதனால் மைதானத்தின் சூழ்நிலையை பார்த்து அணியை சமஅளவில் தேர்வு செய்வோம்.

    இந்திய அணி கடும் சவால் அளிக்கும். வித்தியாசமான சூழ்நிலை உள்ள இங்கு அணியில் பல்வேறு வீரர்கள் விளையாடியது இல்லை.

    பேட்டிங், பவுலிங்கில் செயல்பாடு குறித்து வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவர்கள் மைதானத்தில் எவ்வாறு செயல்படுவார்கள் என்பதை காண ஆவலுடன் உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    டாக்காவில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் லிட்டோன் தாஸ், சவுமியா சர்கார் அரைசதம் விளாச ஜிம்பாப்வேயை 48 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்காளதேசம்.
    வங்காளதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான தமிம் இக்பால் (33 பந்தில் 41 ரன்), லிட்டோன் தாஸ் (39 பந்தில் 59 ரன்) சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தனர். அடுத்து வந்த சவுமியா சர்கார் ஆட்டமிழக்காமல் 32 பந்தில் 62 ரன்கள் விளாசினார்.

    பின்னர் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களம் இறங்கியது. வங்காளதேசம் பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக பந்து வீசி ஜிம்பாப்வே 69 ரன்கள் சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்தது.

    கடைநிலை வீரர்கள் திரிபானோ (13 பந்தில் 20 ரன்), கார்ல் மும்பா (16 பந்தில் 25 ரன்), முடும்பாமி (13 பந்தில் 20) ரன்கள் அடிக்க 152 ரன்கள் எடுத்து ஜிம்பாப்வே அணி ஆல்அவுட் ஆனது. இதனால் வங்காளதேசம் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்காளதேசம் அணி சார்பில் முஷ்டாபிஜுர், அமினுல் இஸ்லாம் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
    கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக இந்திய தொடரின்போது தென்ஆப்பிரிக்கா வீரர்கள் கை குலுக்க மாட்டார்கள் என மார்க் பவுச்சர் தெரிவித்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தபோட்டிகள் வருகிற 12-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடக்கிறது.

    கொரோனா வைரஸ் தொற்றாத வண்ணம் இருக்க எங்கள் வீரர்கள் போட்டியின்போது கை குலுக்க மாட்டார்கள் என்று தென்ஆப்பிரிக்கா அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் தெரிவித்துள்ளார்.

    இலங்கை சென்றுள்ள இங்கிலாந்து அணி ஏற்கனவே கை குலுக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து மார்க் பவுச்சர் கூறுகையில் ‘‘வைரஸ் போன்ற தொற்று கிரிமிகள் கை குலுக்குவதனால் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, கை குலுக்காமல் இருப்பது சிறந்தது என்றால், அதை நாங்கள் செய்வோம். இந்த தொடரில் எங்கள் வீரர்கள் அதை கடைபிடிப்பார்கள். முன்னெச்சரிக்கை காரணமாக எங்களது கிட் பேக்கில் அதிக அளவில் ஹேண்ட்வாஷ் பாதுகாப்பான்கள் உள்ளன’’ என்றார்.
    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடர் தள்ளிப் போகலாம் என்று மகாராஷ்டிரா மாநில மந்திரி கூறிய நிலையில், நாட்கள் உள்ளன என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
    சீனாவில் கண்டறியபட்ட கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை.

    இந்தியாவில் 40-க்கும் மேற்பட்டோரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபிஎல் போட்டி தள்ளிப் போகலாம் என மகாராஷ்டிர மாநில மந்திரி தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் அதுபோன்ற முடிவுகளை எடுக்கவில்லை என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ சார்பில் கூறப்பட்டதாக வந்த செய்தியில் ‘‘நாங்கள் சூழ்நிலையை நன்றாக கவனித்து வருகிறோம். அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுப்போம்.

    எல்லா விஷயங்களும் எங்களுடைய மனதில் உள்ளது. தற்போது வரை ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்புகள்தான் உள்ளன. எந்தவித அச்சமும் கொள்ள தேவையில்லை. தற்போது வரை எந்த முடிவும் எடுக்கவில்லை. பிசிசிஐ கூடுதல் மருத்துவக்குழுவை மைதானத்தி அனுப்பும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
    ரஞ்சி டிராபி இறுதி போட்டியில் களம் இறங்கிய புஜாரா உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெளியேறினார்.
    ரஞ்சி கோப்பை இறுதி போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. பெங்கால் அணிக்கெதிராக டாஸ் வென்ற சவுராஷ்டிரா பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தேசாய், விக்கெட் கீப்பர் பேரோட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தேசாய் 38 ரன்னிலும், பேரோட் 54 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஜடேஜா 54 ரன்னில் வெளியேறினார்.

    நட்சத்திர வீரரான புஜாரா 6-வது வீரராக களம் இறங்கினார். ஆனால் ஐந்து ரன்கள் எடுத்த நிலையில் உடல்நலக்குறைவால் வெளியேறினார். சவுராஷ்டிரா முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்துள்ளது. வசவாதா 29 ரன்களுடன் களத்தில் உள்ளார். பெங்கால் அணி சார்பில் ஆகாஷ் தீப்  3 விக்கெட் வீழ்த்தினார்.
    உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகளை கொண்டு ஐசிசி வெளியிட்டுள்ள அணியில் ஒரேயொரு இந்திய வீராங்கனை மட்டுமே இடம் பிடித்துள்ளார்.
    பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. நேற்று மேல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகளை கொண்டு ஐசிசி உலக கோப்பை லெவன் அணியை அறிவித்துள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த லெக்-ஸ்பின்னர் பூனம் யாதவ் மட்டும் இடம் பிடித்துள்ளார்.

    ஐசிசி வெளியிட்டுள்ள அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. அலிசா ஹீலி (ஆஸ்திரேலியா- விக்கெட் கீப்பர்), 2. பெத் மூனி (ஆஸ்திரேலியா), 3. நாட் ஸ்கிவர் (இங்கிலாந்து), 4. ஹீதர் நைட் (இங்கிலாந்து), 5. மெக் லானிங், 6. லாரா வால்வார்த் (தென்ஆப்பிரிக்கா), 7. ஜெஸ் ஜொனாஸ்சன் (ஆஸ்திரேலியா), 8. சோபி எக்லெஸ்டோன், 9. அன்யா  ஷ்ருப்சோல், 10. மேகன் ஸ்கட், 11. பூனம் யாதவ் (இந்தியா), 12. ஷபாலி வர்மா (இந்தியா).
    இடது கை வேகப்பந்து வீச்சாளரான முஷ்டாபிஜுர் ரஹ்மானை வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கியது வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு.
    வங்காளதேசம் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் மெஹ்முதுல்லா. அதேபோல் இளம் வேகப்பந்து வீச்சாளர் முஷ்டாபிஜுர் ரஹ்மான். இருவரையும் டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் ஒப்பந்த பட்டியிலில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது வங்காளதேசம் கிரிக்கெட்.

    தமிம் இக்பால், லிட்டோன் தாஸ், நஸ்முல் ஹொசைன், முஷ்பிகுர் ரஹிம், முகமது மிதுன், தைஜுல் இஸ்லாம், மெஹிதி ஹசன் ஆகியோர் மட்டுமே மூன்று வகை கிரிக்கெட் போட்டிக்கான ஒப்பந்தத்தில் இடம்பிடித்துள்ளனர்.
    குத்துச்சண்டை பிலிப்பைன்ஸ் வீரரை வீழ்த்தி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றார் அமித் பங்கல்.
    ஜோர்டானில் உள்ள அம்மான் நகரில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான ஆசிய தகுதிச் சுற்று குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது.

    இன்று ஆண்களுக்கான 52 கிலோ எடைபிரிவில் இந்தியாவைச் சேர்ந்த அமித் பங்கல் பிலிப்பைன்சின் புகிலிஸ்ட்-ஐ எதிர்கொண்டார். இதில் 4-1 என அமித் பங்கல் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். அத்துடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.

    பெண்களுக்கான 75 கிலோ எடைபிரிவில் சாக்‌ஷி சவுத்ரி காலிறுதி ஆட்டத்தில் கொரியாவைச் சேர்ந்த இம் ஏஜி-யை எதிர்கொண்டார். இதில் 0-5 என சாக்‌ஷி சவுத்ரி தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார். இவருடன் இதுவரை ஆறு இந்தியர்கள் ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற்றுள்ளனர்.
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான கடைசி டி20 போட்டியில் விளையாடும்போது காயம் ஏற்பட்டதால் இங்கிலாந்து தொடரில் இருந்து குசால் பெரேரா விலகியுள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. 2-வது போட்டியில் விளையாடிய இலங்கை வீரர் குசால் பேரேராவுக்கு வலது கையின் நடுவிரலில் காயம் ஏற்பட்டது.

    அவரது காயம் குணமடைய இரண்டு வாரங்கள் ஆகுமாம். இதனால் இங்கிலாந்துக்கு எதிராக காலேயில் வருகிற 19-ந்தேதி தொடங்கும் முதல் டெஸ்டில் இருந்து குசால் பெரேரா விலகியுள்ளார்.

    மற்றொரு வீரரான வனிந்து ஹசரங்காவுக்கு தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் குணமடைய குறைந்தது நான்கு வாரங்கள் ஆகுமாம். இதனால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட வாய்ப்பில்லை.

    இடது கை சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான இவர் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயத்தால் அவரது அறிமுக டெஸ்ட் போட்டி தள்ளிப்போகியுள்ளது.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக கோப்பை இறுதி போட்டியில் மோசமாக விளையாடியதால் 3-வது இடத்திற்கு சரிந்துள்ளார் ஷபாலி வர்மா.
    ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. நேற்று மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 184 ரன்கள் குவித்தது. பின்னர் 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. அனைத்து வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்தியா 99 ரன்னில் சுருண்டது.

    உலக கோப்பை தொடரில் லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் இளம் வீராங்கனையான ஷபாலி வர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஐசிசி டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறினார்.

    ஆனால் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் ஷபாலி வர்மா 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனால் டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் 3-வது இடத்திற்கு சரிந்துள்ளார். இந்தத் தொடரில் 259 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியாவின் பெத் மூனி முதல் இடத்தில் முன்னேறியுள்ளார்.

    இவர் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-வது இடத்திற்கு முன்னேறினார். அதன்பிறகு தற்போது முதல் இடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்து அணியின் பேட்ஸ் 2-வது இடத்திலேயே நீடிக்கிறார்.
    மகளிர் 20 ஓவர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த சோகத்தில் இந்திய வீராங்கனைகள் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதனர்.
    மெல்போர்ன்:

    மகளிர் 20 ஓவர் உலக கோப்பையை ஆஸ்திரேலியா 5-வது முறையாக கைப்பற்றியது.

    மெல்போர்னில் நடந்த மகளிர் உலக கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது பின்னர் ஆடிய இந்தியா 19.1 ஓவர்களில் 99 ரன்னில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலியா 85 ரன்னில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது.

    அந்த அணி 5-வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்பு 2010, 2012, 2014, 2018 ஆகிய ஆண்டுகளில் பட்டம் வென்று இருந்தது.

    இந்திய அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைந்து உலக கோப்பையை வெல்ல முடியாமல் போனது.

    இந்த தோல்வியால் இந்திய வீராங்கனைகள் மைதானத்தில் சோகமாக இருந்தனர். சில வீராங்கனைகள் சோகத்தை அடக்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதனர். ஜெமீமா ரோட்ரிக்ஸ், ராதாயாதவ் ஆகியோர் பரிசளிப்பு விழாவில் கண்ணீர் விட்டனர்.

    மைதானத்தில் கண்ணீர் விட்ட இந்திய வீராங்கனைகள்


    கேட்சை விட்டதற்காக தொடக்க வீராங்கனை ஷிபாலி வர்மா கண்ணீர் விட்டு கதறினார். அவரை சக வீராங்கனைகள் அமைதிப்படுத்தினர்.

    இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்மன் பிரீத் கவூர் கூறியதாவது:-

    ‘லீக்‘ சுற்றில் நாங்கள் சிறப்பாக ஆடினோம். இறுதிப் போட்டியில் கேட்ச்சுகளை தவற விட்டோம். இந்த தோல்வியில் இருந்து நாங்கள் பாடம் கற்றோம்.

    இந்திய அணி மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இனி வரும் ஆண்டுகளில் சிறப்பாக செயல்படுவோம். பெரிய போட்டிகளில் எவ்வாறு சிறப்பாக ஆட வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

    ‌ஷபாலி வர்மாவுக்கு 16 வயதுதான் ஆகிறது. அவருக்கு இது முதல் உலக கோப்பையாகும். அவர் இந்த தொடரில் மிகவும் சிறப்பாக ஆடினார். இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு அவரை குற்றம் சாட்ட வேண்டாம்.

    இவ்வாறு ஹர்மன்பிரீத் கவூர் கூறியுள்ளார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா பெண்கள் அணி விளையாடிய டி20 உலக கோப்பை இறுதி போட்டியை மெல்போர்ன் மைதானத்தில் 86,174 பேர் பார்வையிட்டது சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
    இந்தியா - ஆஸ்திரேலியா பெண்கள் அணி மோதிய டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. பொதுவாக ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டிதான் மெல்போர்ன் மைதானத்தில் நடத்தப்படும். டிசம்பர் 26-ந்தேதி தொடங்கும் முதல் நாளில் ரசிகர்களால் மைதானம் நிரம்பி வழியும்.

    மைதானத்தின் முழு இருக்கைகளான 86,1764-ம் நிரம்பிவிடும். அதேபோல் இன்று மைதானம் நிரம்பி இருந்தது. ஆஸ்திரேலியாவில் இதற்குமுன் பெண்கள் மோதும் எந்தவொரு போட்டிக்கும் இதுபோன்று ரசிர்கள் கூடியது கிடையாது. தற்போதுதான் இவ்வாறு கூடியுள்ளது. இதன்மூலம் இந்த  போட்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
    ×