என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்தியா - ஆஸ்திரேலியா பெண்கள் அணி விளையாடிய டி20 உலக கோப்பை இறுதி போட்டியை மெல்போர்ன் மைதானத்தில் 86,174 பேர் பார்வையிட்டது சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
    இந்தியா - ஆஸ்திரேலியா பெண்கள் அணி மோதிய டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. பொதுவாக ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டிதான் மெல்போர்ன் மைதானத்தில் நடத்தப்படும். டிசம்பர் 26-ந்தேதி தொடங்கும் முதல் நாளில் ரசிகர்களால் மைதானம் நிரம்பி வழியும்.

    மைதானத்தின் முழு இருக்கைகளான 86,1764-ம் நிரம்பிவிடும். அதேபோல் இன்று மைதானம் நிரம்பி இருந்தது. ஆஸ்திரேலியாவில் இதற்குமுன் பெண்கள் மோதும் எந்தவொரு போட்டிக்கும் இதுபோன்று ரசிர்கள் கூடியது கிடையாது. தற்போதுதான் இவ்வாறு கூடியுள்ளது. இதன்மூலம் இந்த  போட்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
    திருடப்பட்ட தனது கிரிக்கெட் பேட்டை கண்டுபிடித்து தருமாறு தனியார் விமான நிறுவனத்துக்கு ஹர்பஜன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    திருடப்பட்ட தனது கிரிக்கெட் பேட்டை கண்டுபிடித்து தருமாறு தனியார் விமான நிறுவனத்துக்கு ஹர்பஜன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். விமானம் மூலம் நேற்று ஹர்பஜன் சிங் மும்பையில் இருந்து கோவை வந்துள்ளார்.

    அப்போது அவரது பையில் இருந்த கிரிக்கெட் பேட் திருடப்பட்டுள்ளது. இது தொடர்பான டுவிட்டர் பதிவில் தனது கிரிக்கெட் மட்டையை திருடிய நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு ஹர்பஜன் சிங் விமான நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார்.
    ரஞ்சி டிராபி இறுதி போட்டியில் சவுராஷ்டிரா அணியின் முக்கிய பேட்ஸ்மேனான புஜாராவை வீழ்த்துவது எப்படி என்று எங்களது பந்து வீச்சாளர்களுக்கு தெரியும் என சகா தெரிவித்துள்ளார்.
    ரஞ்சி டிராபி இறுதி போட்டி நாளை தொடங்குகிறது. இதில் சவுராஷ்டிரா - பெங்கால் அணிகள் மோதுகின்றன. சவுராஷ்டிரா அணிக்காக புஜாராவும், பெங்கால் அணிக்காக சகாவும் விளையாட இருக்கின்றனர்.

    13 ஆண்டுகளாக முதல்-தர கிரிக்கெட்டில் விளையாடி வரும் சகாவுக்கு இதுதான் முதல் இறுதி போட்டியாகும். இறுதி போட்டியில் விளையாட ஆர்வமாக இருக்கும் சகா, புஜாரா மிகப்பெரிய சவாலாக இருப்பார் என்று நினைக்கிறார். என்றாலும் புஜாராவை எப்படி வீழ்த்த வேண்டும் என்று எங்களது பந்து வீச்சாளர்களுக்கு தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சகா கூறுகையில் ‘‘ஒவ்வொருவரும் வெற்றிக்காக போராடுவார்கள். பெங்கால் அணி வீரர்கள் சர்வதேச போட்டிகள் எல்லாவற்றையும் பார்த்து இருப்பார்கள். அவர்கள் புஜாராவை எப்படி வீழ்த்த வேண்டும் என்று அறிந்திருப்பார்கள்.

    முன்னதாக பெங்கால் அணி நாக்அவுட் சுற்றுக்கு சில வீரர்களின் அடிப்படை பெர்பார்மன்ஸ்-ஐ வைத்து முன்னேறி இருந்தது. உதாரணத்திற்கு எதிர்பக்கம் எந்தவொரு ஆதரவும் இன்றி ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்த டிண்டாவை பயன்படுத்தியிருப்போம். இது அணிக்கு சற்று பாதகமாக அமைந்தது. தற்போது ஒவ்வொரு வீரர்களும் அணிக்காக தங்களது பங்களிப்பை கொடுக்கிறார்கள்.

    பந்து வீச்சாளர்கள் தற்போது பேட்டிங்கிலும் பங்களிப்பை கொடுக்கிறார்கள். பேட்டிங் துறையில் இருந்துதான் வெற்றிக்கான திறன் வரும். சிறந்த நட்புணர்வு அணிக்கு வெற்றி தேடிக்கொண்டு உதவியாக இருக்கும்.

    நான் முதன்முறையாக இறுதி போட்டியில் விளையாட இருக்கிறேன். இது அடிக்கடி வருவதல்ல. எங்கள் அணியில் மனோஜ் திவாரிக்கு மட்டும் இறுதி போட்டியில் விளையாடிய அனுபவம் உள்ளது. நியூசிலாந்தில் இருக்கும்போது அணியின் திறனை நானும் ஷமியும் கண்காணித்துக் கொண்டிருந்தோம்’’ என்றார்.
    மோர்தசா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து தமிம் இக்பால் வங்காளதேசம் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    வங்காளதேசம் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் மோர்தசா. இவர் ஜிம்பாப்வே தொடருடன் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அறிவித்திருந்தார். மூன்று போட்டிகள் கொண்ட ஜிம்பாப்வே தொடர் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.

    இந்நிலையில் இன்று தமிம் இக்பால் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மோர்தசா தலைமையில் வங்காளதேசம் அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 50 வெற்றிகளை பெற்றுள்ளது.

    30 வயதாகும் தமிம் இக்பால் 207 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7202 ரன்கள் குவித்துள்ளார்.
    ஜோர்டானில் நடைபெற்று வரும் ஆசிய ஒலிம்பிக் குவாலிபையர் குத்துச்சண்டை போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய விகாஸ் கிருஷ்ணன், பூஜா ராணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
    ஜோர்டானில் உள்ள அம்மான் நகரில் ஆசிய ஒலிம்பிக் குவாலிபையர் குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான 69 கிலோ எடைபிரிவில் இந்தியாவை சேர்ந்த விகாஸ் கிருஷ்ணன் ஜப்பானை சேர்ந்த மென்ஷா ஒகாஜாவாவை எதிர்கொண்டார். இதில் விகாஸ் கிருஷண்ன் வெற்றி பெற்றார். இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு முன்னேறினார்.

    பெண்களுக்கான 75 கிலோ எடைபிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பூஜா ராணி தாய்லாந்து வீராங்கனை போம்னிப்பா சுட்டீயை எதிர்கொண்டார். இதில் வெற்றி பெற்றதால் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். குத்துச்சண்டையில் 2020 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை இவராவார்.
    ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரரான ஆண்டி பிளவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    ஐபிஎல் தொடரில் விளையாடும் எட்டு அணிகளில் ஒன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப். ஜிம்பாப்வே அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி துணைப் பயிற்சியாளராக நியமித்துள்ளது.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆலோசகராக அனில் கும்ப்ளே உள்ளார். சுனில் ஜோஷி இந்திய அணியின் தேர்வு குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால் அவருக்குப் பதிலாக ஆண்டி பிளவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார்.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் வாசிம் ஜாபர், லாங்க்வெல்த், ஜான்டி ரோட்ஸ் ஆகியோர் முறையே பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளராக உள்ளனர்.
    பெண்களுக்கான டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை இழந்துள்ள நிலையில, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
    பெண்களுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி இன்று மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 184 ரன்கள் குவித்தது. பின்னர் 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 99 ரன்னில் சுருண்டு 85 ரன்னில் மோசமான தோல்வியை சந்தித்தது.

    இந்நிலையில் சில நேரங்களில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போய்விடுகிறது என இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார்.

    இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இதுகுறித்து கூறுகையில் ‘‘லீக் ஆட்டங்களில் எங்களது ஆட்டம் மிகவும் அற்புதமாக இருந்தது. இன்று இறுதி போட்டியில் சில கேட்ச்களை விட்டது துரதிருஷ்டமானது. வரும் ஒன்றரை ஆண்டுகள் மிக முக்கியமானது. எங்களுக்கான எதிர்காலம் மிகவும் சிறப்பாக உள்ளது. எங்கள் மீது நாங்கள் நம்பிக்கை வைக்க வேண்டியது அவசியம்.

    முதல் போட்டி எங்களுக்கு முக்கியமானது. அது அதிக அளவில் நம்பிக்கையை கொடுத்தது. நாங்கள் இணைந்து அதிக நேரங்களை செலவிட்டோம். இன்று துரதிருஷ்டவசமாக தோல்வியை சந்தித்தோம்.

    நாங்கள் கடினமான வகையில் பயிற்சி மேற்கொண்டோம். சரியான திசையில் ஒவ்வொரு வருடமும் முன்னேற்றம் அடைந்து வந்தோம். இன்னும் அதிக கவனத்துடன் விளையாடுவது அவசியம். சில நேரங்களில் எங்களது சிறந்த ஆட்டத்தை கொடுக்க முடியவில்லை’’ என்றார்.
    கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் அயர்லாந்தை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்.
    ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி கிரேட்டர் நொய்டாவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. கேப்டன் அஸ்கர் ஆஃப்கன் 28 பந்தில் 49 ரன்களும், குர்பாஸ் 35 ரன்களும் விளாசினர்.

    பின்னர் 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களம் இறங்கியது. கேப்டன் பால்பிரைன் 35 பந்தில் 46 ரன்களும், டேக்டர் 29 பந்தில் 37 ரன்களும் அடித்தனர். என்றாலும் 6 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களே அடித்தது. இதனால் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியுள்ளது 3-வது மற்றும் கடைசி போட்டி நாளை நாளைமறுநாள் (10-ந்தேதி) நடக்கிறது.
    கொரோனா வைரஸ் காரணமாக ஐ.பி.எல். போட்டி தள்ளிவைக்கப்படலாம் என்று மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபெ தெரிவித்துள்ளார்.

    மும்பை:

    13-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் 29-ந்தேதி தொடங்குகிறது. மே 24-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.

    மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    கொரோனா வைரஸ் காரணமாக ஐ.பி.எல். போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. உயிர்கொல்லியான இந்த வைரஸ் காரணமாக ஏற்கனவே உலகம் முழுவதும் பல்வேறு போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், தள்ளி வைக்கப்படுவதுமாக இருந்து வருகிறது. ஆனால் ஐ.பி.எல். போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி தெரிவித்தார்.

    இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஐ.பி.எல். போட்டி தள்ளிவைக்கப்படலாம் என்று மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபெ தெரிவித்துள்ளார்.

    ஐ.பி.எல் போட்டிகளை பார்க்க ஓரு இடத்தில் அதிகமான மக்கள் கூடுவார்கள். இதன் காரணமாக கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த போட்டி தள்ளி வைக்கப்படலாம்.

    கொரோனா வைரஸ்

    இதன் காரணமாக ஐ.பி.எல் போட்டியை தள்ளி வைப்பது தொடர்பாக போட்டி அமைப்பாளர்கள் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போட்டியை தள்ளி வைப்பது தொடர்பாக விரைவில் முடிவு அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியாவில் 34 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த வைரஸ் தாக்கி உள்ளது. இதுவரை 3,600 பேர் பலியாகி உள்ளனர்.

    தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தியாவின் தர்மசாலா, லக்னோ மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன.

    முதல் போட்டி வருகிற 12-ந்தேதி தர்மசாலாவில் உள்ள இமாசல பிரதேச கிரிக்கெட் கூட்டமைப்பு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.  2வது போட்டி 15ந்தேதி லக்னோவில் உள்ள ஏ.பி. வாஜ்பாய் ஏகனா கிரிக்கெட் ஸ்டேடியத்திலும், 3வது  போட்டி கொல்கத்தா நகரில் உள்ள ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியத்திலும் நடைபெற உள்ளன.

    இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ஷிகர் தவான், ப்ரித்விஷா, ராகுல், மணீஷ் பாண்டே, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா  ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர், சாஹல், பும்ரா, நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், சுப்மான் கில் ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். 
    மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 5-வது முறையாக ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
    மெல்போர்ன்:

    மகளிர் 20 ஓவர் உலக கோப்பையின் இறுதிப் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. இதில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீராங்கனைகளாக அலிசா ஹீலி, பெத் மூனி களமிறங்கினர்.

    ஆட்டத்தின் தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால் அணியின் ரன் வேகம் கணிசமாக உயர்ந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 115 ரன்களை சேர்த்தது. அதிரடியாக ஆடிய ஹீலி அரை சதமடித்தார். அவர் 75 ரன்னில்  அவுட்டானார்.

    இறுதியில், ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை எடுத்துள்ளது. மூனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 78 ரன்களை சேர்த்தார்.

    பின்னர் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய மகளிர் அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் எடுத்தது. இதனால் 85 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 

    இந்திய மகளிர் அணியில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 33 வேதா 19, ரிச்ச கோஷ் 18 ரன்கள் எடுத்தனர்.
    மெல்போர்னில் நடைபெறும் உலக டி20 கோப்பை கிரிக்கெட் போட்டியி இந்தியா வெற்றி பெற 185 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது ஆஸ்திரேலியா.
    மெல்போர்ன்:

    மகளிர் 20 ஓவர் உலக கோப்பையின் இறுதிப் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. இதில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீராங்கனைகளாக அலிசா ஹீலி, பெத் மூனி களமிறங்கினர்.

    ஆட்டத்தின் தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால் அணியின் ரன் வேகம் கணிசமாக உயர்ந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 115 ரன்களை சேர்த்தது. அதிரடியாக ஆடிய ஹீலி அரை சதமடித்தார். அவர் 75 ரன்னில்  அவுட்டானார்.

    அதன்பின்னர், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தது. ஆனாலும் மூனி சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். 

    இறுதியில், ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை எடுத்துள்ளது. மூனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 78 ரன்களை சேர்த்தார்.
    ×