search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹர்மன்பிரீத் கவுர்
    X
    ஹர்மன்பிரீத் கவுர்

    எங்களது சிறந்த ஆட்டத்தை கொடுக்க முடியவில்லை: இந்திய அணி கேப்டன்

    பெண்களுக்கான டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை இழந்துள்ள நிலையில, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
    பெண்களுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி இன்று மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 184 ரன்கள் குவித்தது. பின்னர் 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 99 ரன்னில் சுருண்டு 85 ரன்னில் மோசமான தோல்வியை சந்தித்தது.

    இந்நிலையில் சில நேரங்களில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போய்விடுகிறது என இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார்.

    இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இதுகுறித்து கூறுகையில் ‘‘லீக் ஆட்டங்களில் எங்களது ஆட்டம் மிகவும் அற்புதமாக இருந்தது. இன்று இறுதி போட்டியில் சில கேட்ச்களை விட்டது துரதிருஷ்டமானது. வரும் ஒன்றரை ஆண்டுகள் மிக முக்கியமானது. எங்களுக்கான எதிர்காலம் மிகவும் சிறப்பாக உள்ளது. எங்கள் மீது நாங்கள் நம்பிக்கை வைக்க வேண்டியது அவசியம்.

    முதல் போட்டி எங்களுக்கு முக்கியமானது. அது அதிக அளவில் நம்பிக்கையை கொடுத்தது. நாங்கள் இணைந்து அதிக நேரங்களை செலவிட்டோம். இன்று துரதிருஷ்டவசமாக தோல்வியை சந்தித்தோம்.

    நாங்கள் கடினமான வகையில் பயிற்சி மேற்கொண்டோம். சரியான திசையில் ஒவ்வொரு வருடமும் முன்னேற்றம் அடைந்து வந்தோம். இன்னும் அதிக கவனத்துடன் விளையாடுவது அவசியம். சில நேரங்களில் எங்களது சிறந்த ஆட்டத்தை கொடுக்க முடியவில்லை’’ என்றார்.
    Next Story
    ×