என் மலர்
விளையாட்டு
மெல்போர்னில் நடைபெறும் உலக டி20 கோப்பை கிரிக்கெட் போட்டியி இந்தியா வெற்றி பெற 185 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது ஆஸ்திரேலியா.
மெல்போர்ன்:
மகளிர் 20 ஓவர் உலக கோப்பையின் இறுதிப் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. இதில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீராங்கனைகளாக அலிசா ஹீலி, பெத் மூனி களமிறங்கினர்.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால் அணியின் ரன் வேகம் கணிசமாக உயர்ந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 115 ரன்களை சேர்த்தது. அதிரடியாக ஆடிய ஹீலி அரை சதமடித்தார். அவர் 75 ரன்னில் அவுட்டானார்.
அதன்பின்னர், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தது. ஆனாலும் மூனி சிறப்பாக ஆடி அரை சதமடித்தார்.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை எடுத்துள்ளது. மூனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 78 ரன்களை சேர்த்தார்.
ஒலிம்பிக் தகுதிச்சுற்று குத்துச்சண்டை போட்டியில், மேரிகோம், அமித் பன்ஹால் ஆகியோர் காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.
அம்மான்:
ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்டு 9-ம் தேதி வரை நடக்கிறது. இந்தப் போட்டிக்கான ஆசிய தகுதிச்சுற்று குத்துச்சண்டை போட்டி ஜோர்டானில் உள்ள அம்மான் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில், பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் 6 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மேரி கோம் 5-0 என்ற கணக்கில் நியூசிலாந்தின் தாஸ்மைன் பென்னியை விரட்டியடித்து காலிறுதியை எட்டினார். மேரிகோம் அடுத்து பிலிப்பைன்சின் ஐரிஷ் மாக்னோவை எதிர்கொள்கிறார்.
இதேபோல், ஆண்களுக்கான 52 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் பன்ஹால், மங்கோலியா வீரர் எங்மனாடாக் கார்குவை சந்தித்தார். இதில், அமித் பன்ஹால் 3-2 என்ற கணக்கில் எங்மனாடாக்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் அமித் பன்ஹால் பிலிப்பைன்ஸ் வீரர் கார்லோ பாலமை எதிர்கொள்கிறார்.
குரோஷியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பெயஸ்-போபண்ணா ஜோடி போராடி வெற்றி பெற்றது.
ஜாக்ரெப்:
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா-குரோஷியா இடையிலான ஆட்டம் ஜாக்ரெப் நகரில் நடந்தது. முதல் நாளில் நடந்த இரண்டு ஒற்றையர் ஆட்டங்களிலும் இந்திய வீரர்கள் தோல்வி அடைந்தனர். இதில் தமிழகத்தை சேர்ந்த ராம்குமார் 6-7 (8), 6-7 (8) என்ற செட் கணக்கில் குரோஷியாவின் மரின் சிலிச்சிடம் தோற்றதும் அடங்கும்.
நேற்று நடந்த இரட்டையர் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ்-ரோகன் போபண்ணா ஜோடி 6-3, 6-7 (9), 7-5 என்ற செட் கணக்கில் மாட் பவிச்- பிராங்கோ சுகுகோர் (குரோஷியா) இணையை 2 மணி 21 நிமிடங்கள் போராடி வீழ்த்தியது. 46 வயதான லியாண்டர் பெயஸ் டேவிஸ் கோப்பை இரட்டையர் பிரிவில் ருசித்த 45-வது வெற்றி இதுவாகும்.
இந்த போட்டியில் 1-2 என்று பின்தங்கி உள்ள இந்திய அணி எஞ்சிய இரு மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றை எட்ட முடியும்.

கோவாவில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் கோவா அணியை வீழ்த்தி சென்னையின் எப்சி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
கோவா:
6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் லீக் சுற்று முடிவில் எப்.சி.கோவா, அட்லெடிகோ டி கொல்கத்தா, நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி., சென்னையின் எப்.சி. ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
ஒவ்வொரு அரையிறுதியும் இரண்டு ஆட்டங்கள் கொண்டதாகும். சென்னை நேரு ஸ்டேடியத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி நடந்த அரையிறுதி முதல் சுற்று ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி 4-1 என்ற கோல் கணக்கில் எப்.சி.கோவாவை தோற்கடித்து லீக் ஆட்டங்களில் சந்தித்த தோல்விக்கு சரியான பதிலடி கொடுத்தது.
இந்நிலையில், கோவாவில் உள்ள ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் அரைஇறுதியின் 2-வது சுற்று ஆட்டத்தில் எப்.சி.கோவா-சென்னையின் எப்.சி. அணிகள் மீண்டும் பலப்பரீட்சை நடத்தின.
தொடக்கத்தில் இருந்தே கோவா அணி ஆக்ரோஷமாக விளையாடியது. அந்த அணி 10, 21 வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்தது. இதனால் முதல் பாதி முடிவில் கோவா அணி 2-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் சென்னை அணியினர் 52, 59வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் ஆட்டம் பரபரப்பாக சென்றது.
தொடர்ந்து, 81, 83வது நிமிடங்களில் கோவா அணியின்ர் தலா ஒரு கோல் அடித்தனர்.
இறுதியில், கோவா அணி மொத்தம் 4 கோல்களும், சென்னை அணி 2 கோல்களும் அடித்தது. முதல் அரையிறுதியில் சென்னை அணி 4 கோல்களும், கோவா அணி ஒரு கோலும் அடித்திருந்தது.
இதையடுத்து, இரு ஆட்டங்களிலும் சேர்த்து சென்னை அணி 6-5 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் விளையாட தென் ஆப்பிரிக்க அணியில் ஜேன்மேன் மாலன் சேர்க்கப்பட்டு உள்ளார்.
புதுடெல்லி:
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தியாவின் தர்மசாலா, லக்னோ மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன.
முதல் போட்டி வருகிற 12-ந்தேதி தர்மசாலாவில் உள்ள இமாசல பிரதேச கிரிக்கெட் கூட்டமைப்பு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. 2வது போட்டி 15ந்தேதி லக்னோவில் உள்ள ஏ.பி. வாஜ்பாய் ஏகனா கிரிக்கெட் ஸ்டேடியத்திலும், 3வது போட்டி கொல்கத்தா நகரில் உள்ள ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியத்திலும் நடைபெற உள்ளன.
இதற்கான 16 பேர் கொண்ட தென்ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜேன்மேன் மாலன் சேர்க்கப்பட்டு உள்ளார். தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நாளை காலை இந்தியாவுக்கு புறப்படுகிறது.
தென்ஆப்பிரிக்க அணி விவரம்:
குயின்டன் டி காக் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தெம்பா பவுமா, ராஸ்ஸி வான் டெர் டஸ்சென், டூ பிளெஸ்சிஸ், கைலே வெர்ரெய்னி, ஹெய்ன்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், ஜோன் ஸ்மட்ஸ், ஆண்டில் பெலுக்வாயோ, லண்டி கிடி, லுத்தோ சிபம்லா, பியூரன் ஹெண்ட்ரிக்ஸ், ஆன்ரிச் நார்ஜே, ஜார்ஜ் லிண்டே, கேசவ் மகாராஜ்.

தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 3-0 கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது.
தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து பேட்டிங் செய்த ஆஸ்தி்ரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்தது. அதிக பட்சமாக லாபஸ்சாக்னே 108 ரன்கள் எடுத்திருந்தார்.
255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேன்மேன் மாலன், டி காக் ஆடினர். அதிரடியாக விளையாடி டி காக் 2 சிக்சர் 2 பவுண்டரி எடுத்து மிரட்டினார். இந்நிலையில் இந்த 2 பேரையும் ஹசில்வுட் வெளியேற்றினார்.
இதனையடுத்து ஸ்மட்ஸ், வெர்ரெய்ன் ஜோடி சிறப்பாக விளையாடினர். வெர்ரெய்ன் அவ்வப்போது சிக்சர் மழையும் பொழிந்தார். இந்த ஜோடி 3 விக்கெட்டுக்கு 96 ரன்கள் எடுத்தனர். 150 ரன்கள் இருக்கும் போது இந்த ஜோடியை ஆடம் சம்பா பிரித்தார். வெர்ரெய்ன் 50 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் ஆனார்.
இந்நிலையில் ஸ்மட்ஸ்சுடன் கிளாசன் ஜோடி சேர்ந்து வெற்றியை நோக்கி பயணித்தனர். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஸ்மட்ஸ் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். அவர் 84 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி 45.3 ஓவரில் 258 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை களத்தில் இருந்த கிளாசன் 63 பந்துகளில் 68 ரன்களும் மில்லர் 3 ரன்களிலும் எடுத்திருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்தது.

ஆஸ்திரேலியாவில் நாளை நடைபெறவுள்ள உலக கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய, ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 21-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 10 நாடுகள் பங்கேற்றன. லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில் புள்ளிகளின் அடிப்படையில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் நேற்று முன்தினம் மோத வேண்டிய முதல் அரையிறுதி ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. லீக் சுற்றில் முதல் இடத்தைப் பிடித்ததால் இந்தியா முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. மற்றொரு அரை இறுதியில் ஆஸ்திரேலியா அணி 5 ரன்னில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.
மகளிர் 20 ஓவர் உலக கோப்பையின் இறுதிப் போட்டி மெல்போர்னில் நாளை நடக்கிறது. இதில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக உலக கோப்பையை வெல்லுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நாளை நடைபெறவுள்ள உலக கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடும் இந்தியா, ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியி, மகளிர் தினத்தில் சிறந்த இரு அணிகள் உலக கோப்பைக்காக விளையாட உள்ளன. இதில் தலைசிறந்த அணி வெற்றி பெறும். மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் நாளை நீலக்கலராக காட்சி அளிக்கும் என பதிவிட்டுள்ளார்.
3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு 255 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா அணி நிர்ணயித்தது.
தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலிய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.
இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் 4 ரன்னிலும் பிஞ்ச் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த சுமித்தும் நிலைக்கவில்லை அவர் 26 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஆஸ்திரேலியா அணி ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுகளை இழந்து 55 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது.
இந்நிலையில் டி ஆர்சி ஷார்ட் மற்றும் மார்னஸ் லாபஸ்சாக்னே ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். டி ஆர்சி ஷார்ட் 44 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து கேட்ச் என்ற முறையில் வெளியேறினார், அடுத்த வந்த மிட்செல் மார்ஸ் ரன் அவுட் என்ற முறையிலும் (32 ரன்கள்) அலெக்ஸ் கேரி பவுல்ட் (0) என்ற முறையிலும் அவுட் ஆனார்கள். பொறுப்புடன் ஆடி வந்த லாபஸ்சாக்னே தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவர் 108 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
கடைசியாக ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்தது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் அன்ரிச் நார்ட்ஜே, ஜே.ஜே ஸ்மட்ஸ் தலா 2 விக்கெட்டும் டேரியன், ஆண்டிலே தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஜிம்பாப்வேக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணி 123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.
சைல்ஹெட்:
வங்காளதேசம் - ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சைல்ஹெட்டில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த வங்காளதேச அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் தமிம் இக்பாலும், விக்கெட் கீப்பர் லிட்டான்தாசும் ரன்வேட்டை நடத்தி உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்தினர். 33.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 182 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்தது. இதனால் ஆட்டம் 43 ஓவர்கள் கொண்டதாக குறைக்கப்பட்டது.
தொடர்ந்து ரன்மழை பொழிந்த இவர்கள் சதத்தை கடந்தனர். லிட்டான் தாஸ் 3-வது சதத்தையும், தமிம் இக்பால் 13-வது சதத்தையும் எட்டினர். அணியின் ஸ்கோர் 292 ரன்களாக (40.5 ஓவர்) உயர்ந்த போது லிட்டான் தாஸ் 176 ரன்களில் (143 பந்து, 16 பவுண்டரி, 8 சிக்சர்) கேட்ச் ஆனார். ஒரு நாள் போட்டியில் வங்காளதேச வீரர் ஒருவரின் அதிகபட்ச ரன் இதுவாகும். முந்தைய ஆட்டத்தில் தமிம் இக்பால் 158 ரன்கள் எடுத்ததே இதற்கு முன்பு அதிகபட்சமாக இருந்தது. அச்சாதனையை லிட்டான் தாஸ் முறியடித்தார். மேலும் விக்கெட் ஒன்றுக்கு வங்காளதேச ஜோடி திரட்டிய மெகா பார்ட்னர்ஷிப்பாகவும் (292 ரன்) இது பதிவானது. ஒட்டுமொத்தத்தில் பார்த்தால் முதல் விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட 3-வது அதிகபட்சமாகும்.
நிர்ணயிக்கப்பட்ட 43 ஓவர்களில் வங்காளதேச அணி 3 விக்கெட்டுக்கு 322 ரன்கள் குவித்தது. தமிம் இக்பால் 128 ரன்களுடன் (109 பந்து, 7 பவுண்டரி, 6 சிக்சர்) களத்தில் இருந்தார்.
பின்னர் டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி 43 ஓவர்களில் 342 ரன்கள் எடுக்க வேண்டும் என்று ஜிம்பாப்வேக்கு இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. அதை நோக்கி ஆடிய ஜிம்பாப்வே 37.3 ஓவர்களில் 218 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் 123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்காளதேச அணி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வசப்படுத்தியது. இந்த ஆட்டத்துடன் வங்காளதேச அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மோர்தசா விலகினார். மோர்தசா தலைமையில் வங்காளதேச அணிக்கு கிடைத்த 50-வது வெற்றி இதுவாகும்.

மகளிர் 20 ஓவர் உலக கோப்பையில் முதல் முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்தியா அணி ஆஸ்திரேலியா அணியுடன் நாளை மோத உள்ளது.
மெல்போர்ன்:
மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் 21-ந் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 10 நாடுகள் பங்கேற்றன. 3-ந்தேதியுடன் ‘லீக் ‘ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளும், ‘பி ‘பிரிவில் இருந்து தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளும் அரை இறுதிக்கு முன்னேறின. நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம், வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் லீக் முடிவில் வெளியேறின.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் நேற்று முன்தினம் மோத வேண்டிய முதல் அரைஇறுதி ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. ‘லீக்‘ சுற்றில் முதல் இடத்தைப் பிடித்ததால் இந்தியா முதல் முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
மற்றொரு அரை இறுதியில் ஆஸ்திரேலியா 5 ரன்னில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.
மகளிர் 20 ஓவர் உலக கோப்பையின் இறுதிப் போட்டி மெல்போர்னில் நாளை (8-ந்தேதி) நடக்கிறது. இதில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக உலக கோப்பையை வெல்லுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
இந்த போட்டி தொடரில் இந்தியா மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. ‘லீக்‘ சுற்றில் 4 ஆட்டங்களிலும் வென்று முத்திரை பதித்தது. ஆஸ்திரேலியாவை 17 ரன்னிலும், வங்காளதேசத்தை 18 ரன்னிலும், நியூசிலாந்தை 3 ரன்னிலும், இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தி இருந்தது.
ஆஸ்திரேலியாவை ஏற்கனவே தோற்கடித்து இருந்ததால் இறுதிப்போட்டியில் நம்பிக்கையுடன் ஆடும்.
ஷபாலி வர்மாவின் பேட்டிங்கையும், சுழற்பந்து வீச்சையும் பொறுத்து இந்தியாவின் உலக கோப்பை நிலை இருக்கிறது.
உலகத் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ஷபாலி வர்மா 4 ஆட்டத்தில் 161 ரன் எடுத்துள்ளார். ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, மந்தனா, கேப்டன் ஹர்மன்பிரீத் கவூர் ஆகியோரும் சிறப்பாக விளையாடுபவர்கள்.
பந்து வீச்சில் பூனம் யாதவ் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அவர் 9 விக்கெட் கைப்பற்றி உள்ளார். இதேப்போல ஷிகா பாண்டே (7விக்கெட்), ராதா யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட் (தலா 5 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி லீக் ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்றதற்கு பதிலடி கொடுத்து 5-வது முறையாக உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி தொடர்ந்து 6-வது முறையாக இறுதிப் போட்டியில் ஆடுகிறது.
மெக் லேனிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் பெத் மூனி (181 ரன்), அலைஷா ஹீலே (161), மெகன் ஸ்கட் (9 விக்கெட்), ஜோனசென் (7) போன்ற சிறந்த வீராங்கனைகள் உள்ளனர்.
நாளைய இறுதிப்போட்டி இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வாசிம் ஜாபர் அறிவித்துள்ளார்.
மும்பை:
2000-ம் ஆண்டு நடைபெற்ற தென் ஆப்பிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக அறிமுகமானவர் வாசிம் ஜாபர் (42). 2006-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி 212 ரன்களை குவித்தது சர்வதேச டெஸ்ட் போட்டியில் இவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
ஒரு நாள் போட்டிகளில் அதிகம் விளையாடாத ஜாபர் 2000 முதல் 2008 வரை இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். வலது கை பேட்ஸ்மேனான இவர் 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 இரட்டை சதங்கள் உள்பட 5 சதங்களை விளாசி மொத்தம் ஆயிரத்து 944 ரன்கள் அடித்துள்ளார்.

2008-க்கு பின்னர் இந்திய அணியில் இடம் கிடைக்காத நிலையில் உள்ளூர் போட்டிகளான ரஞ்சி கோப்பை உள்ளிட்ட போட்டிகளில் விளையாடிவந்தார். விதர்பா அணிக்காக விளையாடிவந்த இவர் ரஞ்சிக்கோப்பையில் 12 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்நிலையில், 42 வயது நிரம்பிய வாசிம் ஜாபர், அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
‘பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அதிரடி வீராங்கனைகள் ஷபாலி, மந்தனாவுக்கு எதிராக பவர்-பிளே சமயத்தில் பந்து வீச விரும்பவில்லை’ என்று ஆஸ்திரேலிய வீராங்கனை மேகன் கூறியுள்ளார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி ‘கிளைமாக்ஸ்’ கட்டத்துக்கு வந்து விட்டது.
மெல்போர்னில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு அரங்கேறும் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, 4 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. அரையிறுதி மழையால் பாதிக்கப்பட்டது போல் இறுதிஆட்டத்துக்கு மழை ஆபத்து இல்லை என்று அங்கு வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு வேளை மழை குறுக்கிட்டாலும் மாற்று நாள் (ரிசர்வ் டே) இருக்கிறது. நேற்று வரை இந்த ஆட்டத்துக்கு 75 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுள்ளன. இதனால் அதிக ரசிகர்கள் பார்க்கும் பெண்கள் போட்டியாக இது அமையும் என்று கருதப்படுகிறது.
இதையொட்டி நடப்பு தொடரில் இதுவரை 9 விக்கெட்கள் கைப்பற்றி இருக்கும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் 27 வயதான மேகன் ஷூட் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
சொல்லப்போனால் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதை நான் வெறுக்கிறேன். எனது பந்து வீச்சுக்கு எதிராக அவர்கள் வெகுவாக ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். குறிப்பாக இந்திய தொடக்க வீராங்கனைகள் மந்தனாவும், ஷபாலி வர்மாவும் எனது பந்து வீச்சை அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். சமீபத்தில் நடந்த முத்தரப்பு தொடரில் எனது பந்து வீச்சில் ஷபாலி பிரமாதமான ஒரு சிக்சர் தூக்கினார். அனேகமாக எனது பந்து வீச்சில் விரட்டப்பட்ட மிகப்பெரிய சிக்சராக அது இருந்தது.
அவர்களை மீண்டும் சந்திக்கும் நிலையில் சில திட்டங்களை வகுத்துள்ளோம். ஆனால் பவர்-பிளேயில் (முதல் 6 ஓவர்) மந்தனா, ஷபாலிக்கு எதிராக நான் பந்து வீசுவது சரியானதாக இருக்காது. ஏனெனில் அவர்கள் எனது பவுலிங்கை எளிதில் அடிக்க பழகி விட்டனர்.
இறுதிப்போட்டியில் இந்திய அணியை சந்திக்க நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாங்கள் நீண்ட காலமாகவே பேசிக்கொண்டு இருக்கிறோம். அதற்கு ஏற்றவாறு தான் முத்தரப்பு 20 ஓவர் தொடரை கருதி விளையாடினோம்.
அண்மை காலமாக குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக நிறைய போட்டிகளில் விளையாடி விட்டு அவர்களையே இறுதி ஆட்டத்திலும் சந்திப்பது ஒரு வகையில் நல்ல விஷயம் தான். அவர்களுக்கும் அப்படி தான் இருக்கும். உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் எங்களது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு மேகன் ஷூட் கூறினார்.
இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை புரட்டியெடுத்தது. இதில் மேகன் ஷூட்டின் முதல் ஓவரிலேயே ஷபாலி 4 பவுண்டரிகள் விரட்டியது குறிப்பிடத்தக்கது.
இறுதிப்போட்டியில் நியூசிலாந்தின் கிம் காட்டன், பாகிஸ்தானின் ஆசன் ராசா ஆகியோர் கள நடுவர்களாக பணியாற்றுவார்கள் என்று ஐ.சி.சி அறிவித்துள்ளது. டி.வி. நடுவராக வெஸ்ட் இண்டீசின் கிரிகோரி பிராத்வெய்ட் செயல்படுவார்.