search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜேன்மேன் மாலன்
    X
    ஜேன்மேன் மாலன்

    இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடர் - தென்ஆப்பிரிக்க அணியில் ஜேன்மேன் மாலன் சேர்ப்பு

    இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் விளையாட தென் ஆப்பிரிக்க அணியில் ஜேன்மேன் மாலன் சேர்க்கப்பட்டு உள்ளார்.
    புதுடெல்லி:

    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தியாவின் தர்மசாலா, லக்னோ மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன.

    முதல் போட்டி வருகிற 12-ந்தேதி தர்மசாலாவில் உள்ள இமாசல பிரதேச கிரிக்கெட் கூட்டமைப்பு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.  2வது போட்டி 15ந்தேதி லக்னோவில் உள்ள ஏ.பி. வாஜ்பாய் ஏகனா கிரிக்கெட் ஸ்டேடியத்திலும், 3வது  போட்டி கொல்கத்தா நகரில் உள்ள ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியத்திலும் நடைபெற உள்ளன.

    இதற்கான 16 பேர் கொண்ட தென்ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜேன்மேன் மாலன் சேர்க்கப்பட்டு உள்ளார்.  தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நாளை காலை இந்தியாவுக்கு புறப்படுகிறது.

    தென்ஆப்பிரிக்க அணி விவரம்:

    குயின்டன் டி காக் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தெம்பா பவுமா, ராஸ்ஸி வான் டெர் டஸ்சென், டூ பிளெஸ்சிஸ், கைலே வெர்ரெய்னி, ஹெய்ன்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், ஜோன் ஸ்மட்ஸ், ஆண்டில் பெலுக்வாயோ, லண்டி கிடி, லுத்தோ சிபம்லா, பியூரன் ஹெண்ட்ரிக்ஸ், ஆன்ரிச் நார்ஜே, ஜார்ஜ் லிண்டே, கேசவ் மகாராஜ்.
    Next Story
    ×