search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியூசிலாந்து வீராங்கனையை வீழ்த்திய மேரி கோம்
    X
    நியூசிலாந்து வீராங்கனையை வீழ்த்திய மேரி கோம்

    ஒலிம்பிக் தகுதிச்சுற்று குத்துச்சண்டை: மேரிகோம், அமித் பன்ஹால் கால்இறுதிக்கு தகுதி

    ஒலிம்பிக் தகுதிச்சுற்று குத்துச்சண்டை போட்டியில், மேரிகோம், அமித் பன்ஹால் ஆகியோர் காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.
    அம்மான்:

    ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்டு 9-ம் தேதி வரை நடக்கிறது. இந்தப் போட்டிக்கான ஆசிய தகுதிச்சுற்று குத்துச்சண்டை போட்டி ஜோர்டானில் உள்ள அம்மான் நகரில்  நடைபெற்று வருகிறது.

    இதில், பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் 6 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மேரி கோம் 5-0 என்ற கணக்கில் நியூசிலாந்தின் தாஸ்மைன் பென்னியை விரட்டியடித்து காலிறுதியை எட்டினார். மேரிகோம் அடுத்து பிலிப்பைன்சின் ஐரிஷ் மாக்னோவை எதிர்கொள்கிறார்.

    இதேபோல், ஆண்களுக்கான 52 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் பன்ஹால், மங்கோலியா வீரர் எங்மனாடாக் கார்குவை சந்தித்தார். இதில், அமித் பன்ஹால் 3-2 என்ற கணக்கில் எங்மனாடாக்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் அமித் பன்ஹால் பிலிப்பைன்ஸ் வீரர் கார்லோ பாலமை எதிர்கொள்கிறார்.
    Next Story
    ×