search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாபஸ்சாக்னே
    X
    லாபஸ்சாக்னே

    லாபஸ்சாக்னே சதத்தால் தென் ஆப்பிரிக்காவுக்கு 255 ரன்கள் வெற்றி இலக்கு

    3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு 255 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா அணி நிர்ணயித்தது.


    தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலிய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.

    இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் 4 ரன்னிலும் பிஞ்ச் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த சுமித்தும் நிலைக்கவில்லை அவர் 26 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஆஸ்திரேலியா அணி ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுகளை இழந்து 55 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது.

    இந்நிலையில் டி ஆர்சி ஷார்ட் மற்றும் மார்னஸ் லாபஸ்சாக்னே ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். டி ஆர்சி ஷார்ட் 44 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து கேட்ச் என்ற முறையில் வெளியேறினார், அடுத்த வந்த மிட்செல் மார்ஸ் ரன் அவுட் என்ற முறையிலும் (32 ரன்கள்) அலெக்ஸ் கேரி பவுல்ட் (0) என்ற முறையிலும் அவுட் ஆனார்கள். பொறுப்புடன் ஆடி வந்த லாபஸ்சாக்னே தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவர் 108 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    கடைசியாக ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்தது.

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் அன்ரிச் நார்ட்ஜே, ஜே.ஜே ஸ்மட்ஸ் தலா 2 விக்கெட்டும் டேரியன், ஆண்டிலே தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    Next Story
    ×