என் மலர்
செய்திகள்

பூஜா ராணி, விகாஸ் கிருஷ்ணன்
குத்துச்சண்டை: விகாஸ் கிருஷ்ணன், பூஜா ராணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
ஜோர்டானில் நடைபெற்று வரும் ஆசிய ஒலிம்பிக் குவாலிபையர் குத்துச்சண்டை போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய விகாஸ் கிருஷ்ணன், பூஜா ராணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
ஜோர்டானில் உள்ள அம்மான் நகரில் ஆசிய ஒலிம்பிக் குவாலிபையர் குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான 69 கிலோ எடைபிரிவில் இந்தியாவை சேர்ந்த விகாஸ் கிருஷ்ணன் ஜப்பானை சேர்ந்த மென்ஷா ஒகாஜாவாவை எதிர்கொண்டார். இதில் விகாஸ் கிருஷண்ன் வெற்றி பெற்றார். இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு முன்னேறினார்.
பெண்களுக்கான 75 கிலோ எடைபிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பூஜா ராணி தாய்லாந்து வீராங்கனை போம்னிப்பா சுட்டீயை எதிர்கொண்டார். இதில் வெற்றி பெற்றதால் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். குத்துச்சண்டையில் 2020 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை இவராவார்.

Next Story