என் மலர்
செய்திகள்

அமித் பங்கல்
குத்துச்சண்டை: அமித் பங்கல் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி- சாக்ஷி சவுத்ரி ஏமற்றம்
குத்துச்சண்டை பிலிப்பைன்ஸ் வீரரை வீழ்த்தி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றார் அமித் பங்கல்.
ஜோர்டானில் உள்ள அம்மான் நகரில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான ஆசிய தகுதிச் சுற்று குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது.
இன்று ஆண்களுக்கான 52 கிலோ எடைபிரிவில் இந்தியாவைச் சேர்ந்த அமித் பங்கல் பிலிப்பைன்சின் புகிலிஸ்ட்-ஐ எதிர்கொண்டார். இதில் 4-1 என அமித் பங்கல் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். அத்துடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.
பெண்களுக்கான 75 கிலோ எடைபிரிவில் சாக்ஷி சவுத்ரி காலிறுதி ஆட்டத்தில் கொரியாவைச் சேர்ந்த இம் ஏஜி-யை எதிர்கொண்டார். இதில் 0-5 என சாக்ஷி சவுத்ரி தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார். இவருடன் இதுவரை ஆறு இந்தியர்கள் ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Next Story