search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவுச்சர் - டுபெலிசிஸ்
    X
    பவுச்சர் - டுபெலிசிஸ்

    இந்திய சுற்றுப்பயணத்தில் டுபெலிசிஸ் அனுபவம் அணிக்கு உதவும் - பவுச்சர்

    இந்திய சுற்றுப்பயணத்தில் டுபெலிசிஸ் அனுபவம் அணிக்கு பெரிதும் உதவும் என தென்ஆப்பிரிக்க அணி பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.

    முதல் போட்டி வருகிற 12-ந்தேதி தர்மசாலாவிலும், 2-வது போட்டி 15-ந்தேதி லக்னோவிலும், 3-வது போட்டி 18-ந்தேதி கொல்கத்தாவிலும் நடக்கிறது.

    குயின்டன் டிகாக் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி நேற்று டெல்லி வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து முதல் போட்டி நடக்கும் தர்மசாலாவுக்கு சென்றது.

    இந்த நிலையில் இந்திய சுற்றுப்பயணம் குறித்து தென்ஆப்பிரிக்க அணி பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கூறியதாவது:-

    இந்தியா போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும்போது, அணியில் அனுபவ வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் சம அளவில் இருக்க வேண்டும்.

    டுபெலிசிஸ் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார் என்று நினைக்கிறேன். கடைசியாக விளையாடிய போட்டியில் அவர் சதம் அடித்து இருந்தார். அவர் இந்திய சூழ்நிலையை நன்கு அறிந்து வைத்து இருக்கிறார்.

    இந்திய சுற்றுப்பயணத்தில் டுபெலிசிஸ் அனுபவம் அணிக்கு பெரிதும் உதவும். அவர் அணிக்கு ஏன் தேவை என்றால் இந்திய சூழ்நிலையில் டுபெலிசிஸ் நன்றாக விளையாடி இருக்கிறார். அணியில் இளம் மற்றும் அனுபவ வீரர்கள் உள்ளனர்.

    இதனால் மைதானத்தின் சூழ்நிலையை பார்த்து அணியை சமஅளவில் தேர்வு செய்வோம்.

    இந்திய அணி கடும் சவால் அளிக்கும். வித்தியாசமான சூழ்நிலை உள்ள இங்கு அணியில் பல்வேறு வீரர்கள் விளையாடியது இல்லை.

    பேட்டிங், பவுலிங்கில் செயல்பாடு குறித்து வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவர்கள் மைதானத்தில் எவ்வாறு செயல்படுவார்கள் என்பதை காண ஆவலுடன் உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×