என் மலர்
விளையாட்டு
ஜோர்டானில் நடைபெற்று வரும் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
ஜோர்டான் நாட்டின் அம்மான் நகரில் ஒலிம்பிக் ஆசிய தகுதி குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான 69 கிலோ எடைபிரிவு அரையிறுதியில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் சீனாவைச் சேர்ந்த ஜியான்குயன் ஹுவை எதிர்கொண்டார். இதில் விகாஸ் கிருஷ்ணன் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
52 கிலோ எடைபிரிவு அரையிறுதி போட்டியில் அமித் பங்கல் தோல்வியடைந்தார். இதனால் வெண்கல பதக்கம் வென்றார். இதேபோல் 69 கிலோ எடைபிரிவில் லோவ்லினா போர்கோகைன் தோல்வியடைந்து வெண்கல பதக்கம் வென்றார். மூன்று பேரும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

கடைசி டி20 ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் 8 ரன்னை சேஸிங் செய்து ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது அயர்லாந்து.
ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி கிரேட்டர் நொய்டாவில் இன்று நடைபெற்றது. அயர்லாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ஓ'பிரைன் 26 ரன்னும், டெலனி 37 ரன்னும், டெக்டர் 31 ரன்னும் அடிக்க அயர்லாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 143 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் 29 பந்தில் 42 ரன்கள் அடித்தார். ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் 12.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்திருந்தது. 47 பந்தில் 50 ரன்கள் மட்டுமே தேவையிருந்தது. கைவசம் 8 விக்கெட் இருந்ததால் ஆப்கானிஸ்தான் எளிதாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்பின் ஆப்கானிஸ்தான் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. ரஷித் கான் முதல் பந்தில் ஒரு ரன் அடித்தார். அடுத்த பந்தில் ஆப்கன் அஸ்கர் இரண்டு ரன்கள் அடித்தார். ஆனால் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி மூன்று பந்தில் 13 ரன்கள் தேவைப்பட்டது.
4-வது பந்தில் வைடு மூலம் ஒரு ரன் கிடைத்தது. அதற்குப் பதிலாக வீசப்பட்ட பந்தை சிக்சருக்கு தூக்கினார் ரஷித் கான். இதனால் கடைசி இரண்டு பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்டது. ஐந்தாவது பந்தில் வைடு மூலம் ஒரு ரன் கிடைத்தது. ஆனால் அதற்குப் பதிலாக வீசிய பந்தில் ரன்ஏதும் கிடைக்கவில்லை.
ஆகவே கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டது. ரஷித் கானால் அந்த பந்தை பவுண்டரிக்குதான் துரத்த முடிந்தது.
இதனால் ஆப்கானிஸ்தான் அணியும் 142 ரன்கள் அடித்ததால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தானால் 8 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. பின்னர் 9 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய அயர்லாந்து கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து வெற்றி பெற்றது.
ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதால் ஆப்கானிஸ்தான் தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.

பெங்காலுக்கு எதிராக ரஞ்சி டிராபி இறுதி போட்டியில் வசவாதா சதமும், புஜாரா அரைசதமும் அடிக்க சவுராஷ்டிரா 2-வது நாள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 384 ரன்கள் சேர்த்துள்ளது.
ரஞ்சி கோப்பை இறுதி போட்டி ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது. பெங்கால் அணிக்கெதிராக டாஸ் வென்ற சவுராஷ்டிரா பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தேசாய், விக்கெட் கீப்பர் பேரோட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தேசாய் 38 ரன்னிலும், பேரோட் 54 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஜடேஜா 54 ரன்னில் வெளியேறினார்.
நட்சத்திர வீரரான புஜாரா 6-வது வீரராக களம் இறங்கினார். ஆனால் ஐந்து ரன்கள் எடுத்த நிலையில் உடல்நலக்குறைவால் வெளியேறினார். சவுராஷ்டிரா நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்திருந்தது. வசவாதா 29 ரன்களுடன் களத்தில் இருந்தார். பெங்கால் அணி சார்பில் ஆகாஷ் தீப் 3 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. வசவாதா உடன் நேற்று உடல்நலக்குறைவால் வெளியேற புஜாரா ஜோடி சேர்ந்தார். ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதால் இன்று சவுராஷ்டிரா அணியை 300 ரன்னுக்குள் சுருட்டி விடலாம் என்ற நோக்கத்தில் பெங்கால் அணி களம் இறங்கியது. ஆனால், வசவாதா - புஜாரா ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெங்கால் கனவை தகர்த்தது.
சிறப்பாக விளையாடிய வசவாதா சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 106 ரன்னில் ஆட்டமிழந்தார். இவர் அரையிறுதியில் குஜராத் அணிக்கெதிராக சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புஜாரா 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்தது. அதன்பின் வந்த மன்கட் ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறி சவுராஷ்டிரா 2-வது நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 384 ரன்கள் குவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவராக இருந்த உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மஹிம் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்கிறார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக சவுரவ் கங்குலி உள்ளார். துணைத் தலைவராக உத்தரகாண்ட்-ஐ சேர்ந்த மஹிம் வர்மா உள்ளார்.
இவர் உத்தரகாண்ட் மாநில கிரிக்கெட் சங்க தேர்தலில் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சஞ்சய் குசைனை 31-14 என தோற்கடித்து வெற்றி பெற்றார்.
ஒருவர் ஒரு பதவியை மட்டுமே வகிக்க முடியும் என்பதால் பிசிசிஐ-யின் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார். இவர் கடந்த ஆண்டுதான் பிசிசிஐ துணைத் தலைவராக பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 463 பேர் உயிரிழந்த நிலையில் ‘செரி ஏ’ உள்பட அனைத்து விளையாட்டுகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் உலக நாடுகளுக்குப் பரவியது. சீனாவையடுத்து இந்த வைரஸ் இத்தாலியில்தான் கோரத்தாண்டவம் ஆடியுள்ளது. இதுவரை 463 பேர் உயிரை குடித்துள்ளது.
இதனால் பொது இடங்களில் கூட வேண்டாம் என்று அறிவித்த இத்தாலி அரசு, பொதுமக்கள் அதிக இடங்களில் கூடும் தேவாலயங்கள், திரையரங்குகள் போன்றவற்றை மூடியது.
இத்தாலியின் முன்னணி கால்பந்து தொடரான ‘செரி ஏ’ லீக்கின் ஆட்டங்கள் ரசிகர்கள் ஏதுமின்றி மூடிய மைதானத்திற்குள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் ஏப்ரல் 3-ந்தேதி வரை ‘செரி ஏ’ உள்பட எந்தவொரு விளையாட்டும் நடைபெறக் கூடாது என இத்தாலி அரசு அறிவித்துள்ளது.

தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான முதல் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணியைச் சேர்ந்த சில வீரர்கள் தரம்சலா சென்றடைந்துள்ளனர்.
தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்காக தென்ஆப்பிரிக்கா அணி ஏற்கனவே இந்தியா வந்துவிட்டது.
முதல் ஆட்டம் 12-ந்தேதி இமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலாவில் நடக்கிறது. இதில் விளையாடுவதற்காக இந்திய அணி வீரர்கள் தரம்சாலா சென்ற வண்ணம் உள்ளனர்.
இந்திய அணியில் இடம் பிடித்துள்ள ஷுப்மான் கில், தவான், நவ்தீப் சைனி , குல்தீப் யாதவ் ஆகியோர் தரம்சாலா சென்றடைந்துள்ளனர்.

ரஞ்சி டிராபி இறுதி போட்டியில் சக நடுவர் காயம் அடைந்ததால் ஆனந்த பத்பநாபன் தனிநபராக அம்பயர் பணியை தொடர்ந்தார்.
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது. இதில் சவுராஷ்டிரா - பெங்கால் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஆன்-பீல்டு அம்பயர்களான ஆனந்த பத்பநாபன், ஷாம்சுதீன் ஆகியோர் பணியாற்றினர்.
நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின்போது பெங்கால் அணி வீரர் வீசிய பந்து லெக் அம்பயராக நின்ற ஷாம்சுதீன் வயிற்றுப் பகுதியை தாக்கியது. இதனால் அவர் உடனடியாக வெளியேறினார். இன்றும் அவர் அம்பயராக பணியாற்ற வரவில்லை.
அவருக்குப் பதில் தற்காலிகமாக பியூஷ் கக்கார் அம்பயராக பணியாற்றினார். ஆனால் இவர் லெக் அம்பயராக மட்டுமே செயல்பட்டார். இதனால் மற்றொரு அம்பயர் ஆன ஆனந்த பத்மநாபன் மெயின் அம்பயராக செயல்பட்டார்.
இன்று காலை அவருக்கு வயிற்றுப் பகுதியில் காயம் அதிகமாக இருந்ததால் அருகில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். ஆகவே, இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக மாற்று அம்பயர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 8 ஆண்டுகளாக திறக்கபடாமல் இருக்கும் மூன்று கேலரிகளுக்கும் அனுமதி தரக்கோரி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டு கடந்த எட்டு ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருக்கும் ஐ, ஜே, கே ஆகிய மூன்று கேலரிகளையும் திறக்க அனுமதி கோரி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பெருநகர வளர்ச்சி குழுமத்தில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ, ஜே, கே என கூடுதலாக மூன்று கேலரிகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அமைத்தது. இந்த மூன்று கேலரிகளிலும் சேர்த்து மொத்தம் 12 ஆயிரம் இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டன.
இந்த கேலரிகளை அமைப்பதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், அரசிடம் உரிய முறையான அனுமதி ஏதும் பெற வில்லை என்றும், விதிமுறைகளை மீறி அவை கட்டப்பட்டுள்ளன என்றும் கூறி சென்னை மாநகராட்சி, 3 கேலரிகளுக்கும் சீல் வைத்தது.
2013-ம் ஆண்டுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் ஒவ்வொரு முறையும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போதெல்லாம் கேலரி பிரச்சினையை தீர்க்க தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு இதுவரை விடிவு கிடைத்தபாடில்லை. இந்நிலையில்தான் தற்போது அனுமதி கோரி விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும், ஆனால் ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படாது என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதனால் பெரும்பாலான போட்டிகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக் ஆட்டங்கள் ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய மைதானத்திற்குள் நடைபெற்று வருகின்றன.
சில போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45-க்கும் மேலாக அதிகரித்துள்ளது. இதனால் ஐபிஎல் போட்டிகள் தள்ளிப்போகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் போட்டிகள் கட்டாயம் நடைபெறும் என பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை மார்ச் 29-ந்தேதிக்குள் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராவிடில் ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய மைதானத்திற்குள் போட்டி நடத்தப்படலாம் என்ற செய்தி உலா வந்தது.
ஆனால், அதற்கான வாய்ப்பு இல்லை என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த அதிகாரி கூறுகையில் ‘‘எஃப்சி இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் பிளே-ஆஃப் சுற்றில் ஏடிகே-பெங்களூரு எஃப்சி அணிகள் மோதிய ஆட்டத்தை பார்த்தீர்கள் என்றால், கிட்டதட்ட 60 ஆயிரம் ரசிகர்கள் மைதானம் வந்து போட்டியை ரசித்தனர். ஆகவே, ஏன் ரசிர்கள் வந்து பார்ப்பதை தடுக்க வேண்டும்?’’ என்றார்.
ஆனால் வீரர்கள் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொள்வது போன்ற நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் எனத் தெரிகிறது.

ஆசிய தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை மேரிகோம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடக்கிறது. இந்த போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடந்து வருகிறது.
பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் 6 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மேரிகோம் 5-0 என்ற கணக்கில் பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஐரிஷ் மாக்னோவை எளிதில் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
அத்துடன் அவர் ஒலிம்பிக் போட்டி வாய்ப்பையும் உறுதி செய்தார். 60 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்திய வீராங்கனை சிம்ரன்ஜித் கவுர் 5-0 என்ற கணக்கில் மங்கோலியாவின் மோங்ஹோர்ன் நமுனை தோற்கடித்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

போட்டி நடத்துவதற்கான கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என ஐ.பி.எல். நிர்வாகத்துக்கு அணி உரிமையாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
மும்பை:
8 அணிகள் பங்கேற்கும் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டித்தொடர் வருகிற 29-ந்தேதி தொடங்குகிறது. இந்த சீசனில் ஐ.பி.எல். போட்டிக்கான பரிசுத்தொகையை இந்திய கிரிக்கெட் வாரியம் பாதியாக குறைத்தது.
கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு 20 கோடி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பரிசுத்தொகை ரூ.10 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கான பரிசுத்தொகை ரூ.12½ கோடியில் இருந்து ரூ.6¼ கோடியாக குறைத்துள்ளது.
இதேபோல் 3-வது மற்றும் 4-வது இடத்தை பிடித்த அணிகளுக்கு கடந்த ஆண்டு தலா 8 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது இந்த தொகையை இந்த ஆண்டு தலா ரூ.4 கோடியே 37 லட்சமாக குறைத்து இருக்கிறது.
மேலும் ஐ.பி.எல். ஆட்டத்தை நடத்துவதற்கு மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு அணியின் உரிமையாளர்கள் ரூ.30 லட்சம் வழங்க வேண்டும் என்ற தொகையை ரூ.50 லட்சமாக கிரிக்கெட் வாரியம் உயர்த்தி இருக்கிறது.
பரிசுத்தொகை குறைப்பு, போட்டி நடத்துவதற்கான கட்டண உயர்வு ஆகியவற்றால் ஐ.பி.எல்.அணி உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக விரைவில் ஆலோசனை நடத்த இருப்பதாக அணி உரிமையாளர்களில் ஒருவர் தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையே ஐ.பி.எல். நிர்வாகத்துக்கு அணி உரிமையாளர்கள் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார்கள். அதில் பிளே ஆப் சுற்றுக்கான பரிசுத்தொகை குறைப்பு போட்டி நடத்துவதற்கு மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு வழங்கப்படும் தொகை உயர்வு உள்ளிட்ட மாற்றங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தங்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்திய சுற்றுப்பயணத்தில் டுபெலிசிஸ் அனுபவம் அணிக்கு பெரிதும் உதவும் என தென்ஆப்பிரிக்க அணி பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கூறியுள்ளார்.
புதுடெல்லி:
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.
முதல் போட்டி வருகிற 12-ந்தேதி தர்மசாலாவிலும், 2-வது போட்டி 15-ந்தேதி லக்னோவிலும், 3-வது போட்டி 18-ந்தேதி கொல்கத்தாவிலும் நடக்கிறது.
குயின்டன் டிகாக் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி நேற்று டெல்லி வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து முதல் போட்டி நடக்கும் தர்மசாலாவுக்கு சென்றது.
இந்த நிலையில் இந்திய சுற்றுப்பயணம் குறித்து தென்ஆப்பிரிக்க அணி பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கூறியதாவது:-
இந்தியா போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும்போது, அணியில் அனுபவ வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் சம அளவில் இருக்க வேண்டும்.
டுபெலிசிஸ் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார் என்று நினைக்கிறேன். கடைசியாக விளையாடிய போட்டியில் அவர் சதம் அடித்து இருந்தார். அவர் இந்திய சூழ்நிலையை நன்கு அறிந்து வைத்து இருக்கிறார்.
இந்திய சுற்றுப்பயணத்தில் டுபெலிசிஸ் அனுபவம் அணிக்கு பெரிதும் உதவும். அவர் அணிக்கு ஏன் தேவை என்றால் இந்திய சூழ்நிலையில் டுபெலிசிஸ் நன்றாக விளையாடி இருக்கிறார். அணியில் இளம் மற்றும் அனுபவ வீரர்கள் உள்ளனர்.
இதனால் மைதானத்தின் சூழ்நிலையை பார்த்து அணியை சமஅளவில் தேர்வு செய்வோம்.
இந்திய அணி கடும் சவால் அளிக்கும். வித்தியாசமான சூழ்நிலை உள்ள இங்கு அணியில் பல்வேறு வீரர்கள் விளையாடியது இல்லை.
பேட்டிங், பவுலிங்கில் செயல்பாடு குறித்து வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவர்கள் மைதானத்தில் எவ்வாறு செயல்படுவார்கள் என்பதை காண ஆவலுடன் உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.