என் மலர்tooltip icon

    செய்திகள்

    சதம் அடித்த சவுராஷ்டிர வீரர் வசவாதா
    X
    சதம் அடித்த சவுராஷ்டிர வீரர் வசவாதா

    வசவாதா, புஜாராவின் அபார ஆட்டத்தால் 2-வது நாள் முடிவில் சவுராஷ்டிரா 384/8

    பெங்காலுக்கு எதிராக ரஞ்சி டிராபி இறுதி போட்டியில் வசவாதா சதமும், புஜாரா அரைசதமும் அடிக்க சவுராஷ்டிரா 2-வது நாள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 384 ரன்கள் சேர்த்துள்ளது.
    ரஞ்சி கோப்பை இறுதி போட்டி ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது. பெங்கால் அணிக்கெதிராக டாஸ் வென்ற சவுராஷ்டிரா பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தேசாய், விக்கெட் கீப்பர் பேரோட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தேசாய் 38 ரன்னிலும், பேரோட் 54 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஜடேஜா 54 ரன்னில் வெளியேறினார்.

    நட்சத்திர வீரரான புஜாரா 6-வது வீரராக களம் இறங்கினார். ஆனால் ஐந்து ரன்கள் எடுத்த நிலையில் உடல்நலக்குறைவால் வெளியேறினார். சவுராஷ்டிரா நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்திருந்தது. வசவாதா 29 ரன்களுடன் களத்தில் இருந்தார். பெங்கால் அணி சார்பில் ஆகாஷ் தீப்  3 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. வசவாதா உடன் நேற்று உடல்நலக்குறைவால் வெளியேற புஜாரா ஜோடி சேர்ந்தார்.  ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதால் இன்று சவுராஷ்டிரா அணியை 300 ரன்னுக்குள் சுருட்டி விடலாம் என்ற நோக்கத்தில் பெங்கால் அணி களம் இறங்கியது. ஆனால், வசவாதா - புஜாரா ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெங்கால் கனவை தகர்த்தது.

    சிறப்பாக விளையாடிய வசவாதா சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 106 ரன்னில் ஆட்டமிழந்தார். இவர் அரையிறுதியில் குஜராத் அணிக்கெதிராக சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    புஜாரா 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்தது. அதன்பின் வந்த மன்கட் ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறி சவுராஷ்டிரா 2-வது நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 384 ரன்கள் குவித்துள்ளது.
    Next Story
    ×