search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய சுழற்பந்து வீச்சு வீராங்கனை பூனம் யாதவ்
    X
    இந்திய சுழற்பந்து வீச்சு வீராங்கனை பூனம் யாதவ்

    ஐசிசி-யின் பெண்களுக்கான டி20 உலக கோப்பை அணியில் ஒரேயொரு இந்திய வீராங்கனை

    உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகளை கொண்டு ஐசிசி வெளியிட்டுள்ள அணியில் ஒரேயொரு இந்திய வீராங்கனை மட்டுமே இடம் பிடித்துள்ளார்.
    பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. நேற்று மேல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகளை கொண்டு ஐசிசி உலக கோப்பை லெவன் அணியை அறிவித்துள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த லெக்-ஸ்பின்னர் பூனம் யாதவ் மட்டும் இடம் பிடித்துள்ளார்.

    ஐசிசி வெளியிட்டுள்ள அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. அலிசா ஹீலி (ஆஸ்திரேலியா- விக்கெட் கீப்பர்), 2. பெத் மூனி (ஆஸ்திரேலியா), 3. நாட் ஸ்கிவர் (இங்கிலாந்து), 4. ஹீதர் நைட் (இங்கிலாந்து), 5. மெக் லானிங், 6. லாரா வால்வார்த் (தென்ஆப்பிரிக்கா), 7. ஜெஸ் ஜொனாஸ்சன் (ஆஸ்திரேலியா), 8. சோபி எக்லெஸ்டோன், 9. அன்யா  ஷ்ருப்சோல், 10. மேகன் ஸ்கட், 11. பூனம் யாதவ் (இந்தியா), 12. ஷபாலி வர்மா (இந்தியா).
    Next Story
    ×