என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • அல்காரஸ் 3-0 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
    • ஜோகோவிச் 3-1 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரரை வீழ்த்தினார்.

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் 2ஆம் நிலை வீரரான அல்காரஸ், 10 நிலை வீரரான செக்குடியரசின் ஜிரி லெஹெக்காவை எதிர்கொண்டார். இதில் அல்காரஸ் 6-4, 6-2, 6-4 என நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதியில் 7ஆம் நிலை வீரரான ஜோகோவிச், 4ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸை எதிர்கொண்டார். முதல் செட்டை ஜோகோவிச் 6-3 என எளிதில் கைப்பற்றினார். 2ஆவது செட்டை 7-5 என கைப்பற்றினார்.

     முதல் இரண்டு செட்களை இழந்த ஃப்ரிட்ஸ் 3ஆவது செட்டில் அபாரமாக விளையாடினார். இதனால் அந்த செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். என்றபோதிலும் 4ஆவது செட்டில் ஜோகோவிச்சின் சர்வீஸ்க்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 6-4 என ஜோகோவிச் 4ஆவது செட்டை கைப்பற்றி 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரைறுதிக்கு முன்னேறினார்.

    இந்திய நேரப்படி சனிக்கிழமை நடைபெறும் அரையிறுதில் ஜோகோவிச்- அல்காரஸ் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை பெகுலா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். மற்றொரு காலிறுதியில் இருந்து வோண்ட்ரோசோவா விலகியதால் முதல் தரநிலை வீராங்கனை சபலென்கா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை நடைபெறும் அரையிறுதியில் பெகுலா- சபலென்கா பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

    • ஆப்கானிஸ்தானின் செதிகுல்லா அடல், இப்ராகிம் ஜத்ரன் அரைசதம் விளாசினர்.
    • ரஷித் கான், நூர் அகமது, முகமது நபி, பரூக்கி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளுக்கு இடையில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

    நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் செதிகுல்லா அடல் 64 ரன்களும், இப்ராகிம் ஜத்ரன் 65 ரன்களும் விளாச 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது. பாகிஸ்தானின் பஹீம் அஷ்ஃரப் 4 விக்கெட் விழ்த்தினார்.

    பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க வீரர் சைம் ஆயுப் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் சகிப்ஜதா பர்ஹான் 18 ரன்களில் வெளியேறினார். இந்த இரண்டு விக்கெட்டுகளையும் பரூக்கி வீழ்த்தினார்.

    அதன்பின் பஹர் ஜமான் (25), சர்மான் ஆகா (20) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்களான ரஷித் கான், நூர் அகமது முகமது நபி ஆகியோர் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் பாகிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    10ஆவது வீரராக களம் இறங்கிய ஹாரிஸ் ராஃப் அதிரடியாக விளையாடி, ஆப்கானிஸ்தானை அச்சுறுத்தினார். அவரால் ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் (16 பந்தில் 4 சிக்கர்) எடுத்த போதிலும் பாகிஸ்தானால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் 18 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தில் வெற்றி பெற்றது. ரஷித் கான், நூர் அகமது, முகமது நபி, பரூக்கி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். முதலாவதாக மோதிய ஆட்டத்தில் பாகிஸ்தான் 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • போர்ச்சுகல் தேசிய அணியின் முக்கிய முன்கள வீரராக டியோகோ ஜோட்டா இருந்தவர்.
    • கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டாவுக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.

    போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். ஜோட்டாவின் மரணம் கால்பந்து உலகை உலுக்கியது.

    கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டாவுக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். லிவர்பூல் கிளப் மற்றும் போர்ச்சுகல் தேசிய அணியின் முக்கிய முன்கள வீரராக டியோகோ ஜோட்டா இருந்தவர். 28 வயதான அவர் 2019 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் UEFA நேஷன்ஸ் லீக்கை வென்ற போர்ச்சுகல் அணியில் இடம் பெற்றிருந்தார்.

    இந்நிலையில், டியாகோ ஜோட்டாவுக்கு போர்ச்சுகல் அணி வீரர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ ஜோட்டாவின் தந்தையை கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்தார். .

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 131 ரன்களுக்கு சுருண்டது.
    • ஜேமி ஸ்மித் பொறுப்புடன் ஆடி 54 ரன்னில் வெளியேறினார்.

    லீட்ஸ்:

    இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி லீட்சில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 24.3 ஓவரில் 131 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 54 ரன்கள் எடுத்தார்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் கேசவ் மகராஜ் 4 விக்கெட்டும், வியான் முல்டர் விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது.

    மார்கிரம், ரிக்கல்டன் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். மார்கிரம் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தார். அவர் 55 பந்துகளில் 86 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    முதல் விக்கெட்டுக்கு மார்கிரம்-ரிக்கல்டன் ஜோடி 121 ரன்கள் சேர்த்து அசத்தியது.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 20.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • தபாங் டெல்லி கேப்டன் அஷு மாலிக் 15 புள்ளிகள் பெற்றார்.
    • நீரஜ் நன்வால் 7 புள்ளிகள் பெற்றார்.

    புரோ கபடி 2025 சீசனின் முதல் வார போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முதல் போட்டியில் தபாங் டெல்லி கே.சி.- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. இதில் தபாங் டெல்லி கே.சி. 41-34 என வெற்றி பெற்றது.

    தபாங்க் டெல்லி அணியின் கேப்டன் அஷு மாலிக் 15 புள்ளிகள் பெற்றார். நீரஜ் நன்வால் 7 புள்ளிகளும், சுர்ஜீத் சிங், சவுரவ் நந்தல், பசேல் அட்ராசலி ஆகியோர் தலா 3 புள்ளிகளும் பெற்றனர்.

    பெங்களூரு புல்ஸ் அணி சார்பில் அலிரேசா மிர்சையான் 10 புள்ளிகளும், கணேசா 4 புள்ளிகளும் பெற்றனர். ஆகாஷ் ஷிண்டே 3 புள்ளிகள் பெற்றார்.

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து 131 ரன்களுக்கு சுருண்டது.

    லீட்ஸ்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி லீட்சில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே தென் ஆப்பிரிக்க வீரர்கள் துல்லியமாகப் பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் இங்கிலாந்து விக்கெட்டுகள் விழுந்தன.

    அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேமி ஸ்மித் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 54 ரன்னில் வெளியேறினார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில் இங்கிலாந்து அணி 24.3 ஓவரில் 131 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் கேசவ் மகராஜ் 4 விக்கெட்டும், வியான் முல்டர் விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகிறது.

    • இந்த தொடரின் முதல் போட்டி நாளை நடைபெற உள்ளது.
    • இந்த தொடருக்கான 16 பேர் கொண்ட ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. இதன் முதல் போட்டி நாளை நடைபெற உள்ளது.

    இந்நிலையில் இந்த தொடருக்கான 16 பேர் கொண்ட ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக சிக்கந்தர் ராசா நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஜிம்பாப்வே அணி விவரம்:-

    சிக்கந்தர் ராசா (கேப்டன்), பிரையன் பென்னட், ரியான் பர்ல், பிராட் எவன்ஸ், ட்ரெவர் குவாண்டு, கிளைவ் மடாண்டே, டினோடெண்டா மபோசா, தடிவானாஷே மருமணி, வெலிங்டன் மசகட்சா, டோனி முனியோங்கா, தஷிங்கா முசெகிவா, பிளசிங் முசரபானி, டியான் மியர்ஸ், ரிச்சர்ட் ங்கரவா, பிரெண்டன் டெய்லர், சீன் வில்லியம்ஸ்.

    • பொல்லார்ட் முதல் 13 பந்தில் 12 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
    • கடைசி 8 பந்தில் 7 சிக்சர்கள் அடித்து அசத்தினார்.

    கரீபியன் பிரீமியர் லீக் வெஸ்ட் இண்டீஸில் கடந்த ஆகஸ்டு 14-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 19-வது லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

    இதில் முதலில் பேட்டிங் செய்த பூரன் தலைமையிலான டிரின்பாகோ அணி 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பொல்லார்ட் 29 பந்தில் 65 ரன்கள் எடுத்தார். இதில் 8 சிக்சர்கள் அடங்கும். முதலில் மந்தமாக விளையாடிய பொல்லார்ட் முதல் 13 பந்தில் 12 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

    இதனையடுத்து ருத்ரதாண்டவம் ஆடிய அவர், கடைசி 16 பந்தில் 53 ரன்கள் விளாசினார். குறிப்பாக கடைசி 8 பந்தில் 7 சிக்சர்கள் அடித்து அசத்தியுள்ளார். 38 வயதில் இந்த அடி அடிப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவரை மும்பை இந்தியன்ஸ் அணியில் கூட பேட்டராக தேர்வு செய்யலாம் எனவும் பல ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

    இதனையடுத்து களமிறங்கிய நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 20 ஓவர்களில் 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் டிரின்பாகோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • முதலில் பேட்டிங் செய்த பூரன் தலைமையிலான டிரின்பாகோ அணி 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது.
    • இந்த அணி 7 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே தோல்வி கண்டுள்ளது.

    கரீபியன் பிரீமியர் லீக் வெஸ்ட் இண்டீஸில் கடந்த ஆகஸ்டு 14-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒரு அணி மற்ற அணியுடன் இருமுறை மோத வேண்டும். இறுதியில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

    இந்நிலையில் நேற்று நடைபெற்ற 19-வது லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

    இதில் முதலில் பேட்டிங் செய்த பூரன் தலைமையிலான டிரின்பாகோ அணி 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பொல்லார்ட் 29 பந்தில் 65 ரன்கள் எடுத்தார். இதில் 8 சிக்சர்கள் அடங்கும்.

    இதனையடுத்து களமிறங்கிய ஹோல்டர் தலைமையிலான அணி 20 ஓவர்களில் 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஆண்ட்ரே பிளெட்சர் 67 ரன்கள் குவித்தார். இதன்மூலம் டிரின்பாகோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் இந்த தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய முதல் அணியாக டிரின்பாகோ முன்னேறி உள்ளது. இந்த அணி 7 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே தோல்வி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் விளையாடிய நெதர்லாந்து அணி 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • இதனையடுத்து களமிறங்கிய வங்கதேசம் அணி 13.1 ஓவரில் 104 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    நெதர்லாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசம் சென்றுள்ளது. இதில் முதல் டி20 போட்டியில் வங்கதேசம் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய நெதர்லாந்து அணி 17.3 ஓவர்களில் 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆர்யன் தத் 30 ரன்கள் எடுத்தார். வங்கதேசம் தரப்பில் நசும் அகமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து களமிறங்கிய வங்கதேசம் அணி 13.1 ஓவரில் 104 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டான்சித் ஹசன் தமீம் 54 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வங்கதேசம் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி வருகிற நாளை நடக்கிறது.

    • நீண்ட நாட்களாக அணியில் இடம் பெறாமல் இருந்த ஆல் ரவுண்டர் மார்கன்ஸ் ஸ்டோய்னிஸ் இடம் பிடித்துள்ளார்.
    • இந்த அணியில் கேமரூன் கிரீன் மற்றும் எல்லிஸ்-க்கு இடம் கிடைக்கவில்லை.

    ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடர் அக்டோபர் 1-ந் தேதி தொடங்கி 4-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்த தொடருக்கான மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் நீண்ட நாட்களாக அணியில் இடம் பெறாமல் இருந்த ஆல் ரவுண்டர் மார்கன்ஸ் ஸ்டோய்னிஸ் இடம் பிடித்துள்ளார். இந்த அணியில் கேமரூன் கிரீன் மற்றும் எல்லிஸ்-க்கு இடம் கிடைக்கவில்லை

    நியூசிலாந்து டி20 போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி:

    மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட், சேவியர் பார்ட்லெட், டிம் டேவிட், பென் டுவார்ஷுயிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மேட் குஹ்னேமன், க்ளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஓவன், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஜாம்பா.

    • அமெரிக்க ஓபன் ஜூனியர் போட்டிகள் அமெரிக்காவில் ஆகஸ்ட் 31-ந் தேதி முதல் செப்டம்பர் 7 வரை நடக்கின்றன.
    • இந்தியா சார்பாக தமிழகத்தை சேர்ந்த 16 வயதான மாயா ராஜேஷ்வரன் கலந்து கொண்டுள்ளார்.

    அமெரிக்க ஓபன் ஜூனியர் போட்டிகள் அமெரிக்காவில் ஆகஸ்ட் 31-ந் தேதி முதல் செப்டம்பர் 7 வரை நடக்கின்றன. இந்தியா சார்பாக தமிழகத்தை சேர்ந்த 16 வயதான மாயா ராஜேஷ்வரன் கலந்து கொண்டுள்ளார்.

    இந்த தொடரின் பெண்களுக்கான முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை மாயா ராஜேஷ்வரன் ரேவதி, சீனாவின் ஜாங்-கியான் வெய்யுடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் 7-6 (7-5), 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு மாயா ராஜேஷ்வரன் முன்னேறினார். இவர் இரண்டாவது சுற்றில் இரண்டாம் நிலை வீராங்கனையான ஐக்கிய இராச்சியத்தின் ஹன்னா க்ளக்மேனை எதிர்கொள்கிறார்.

    நம்பிக்கைக்குரிய வீராங்கனையாக வளர்ந்து வரும் மாயா, பிப்ரவரியில் நடந்த மும்பை ஓபன் 2025 WTA 125 போட்டியின் அரையிறுதிக்கு முன்னேற பல மூத்த வீரர்களை வீழ்த்தினார்.

    ×