என் மலர்
கிரிக்கெட் (Cricket)

மகராஜ், முல்டர் அபாரம்: இங்கிலாந்தை 131 ரன்களில் சுருட்டியது தென் ஆப்பிரிக்கா
- டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து 131 ரன்களுக்கு சுருண்டது.
லீட்ஸ்:
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி லீட்சில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே தென் ஆப்பிரிக்க வீரர்கள் துல்லியமாகப் பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் இங்கிலாந்து விக்கெட்டுகள் விழுந்தன.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேமி ஸ்மித் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 54 ரன்னில் வெளியேறினார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில் இங்கிலாந்து அணி 24.3 ஓவரில் 131 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் கேசவ் மகராஜ் 4 விக்கெட்டும், வியான் முல்டர் விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகிறது.






