என் மலர்
விளையாட்டு
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பெண்கள் பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட்டில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிட்னி தண்டர்.
ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி நேற்று சிட்னியில் நடைபெற்றது. இதில் சிட்னி தண்டர் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி, சிட்னி தண்டர் வீராங்கனைகளின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்களே அடித்தது. கேதரின் அதிகபட்சமாக 22 ரன்கள் அடித்தார். சிட்னி தண்டர் அணி சார்பில் இஸ்மாய்ல், ஷமி ஜான்சன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 87 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் சிட்னி தண்டர் களம் இறங்கியது. 13.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் அடித்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
சிட்னியில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் (83), ஆரோன் பிஞ்ச் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக விளையாடி 64 பந்தில் 14 பவுண்டரி, 2 சிக்சருடன் 104 ரன்கள் விளாசினார். 62 பந்தில் சதம் அடித்தார். ஏற்கனவே நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியிலும் 62 பந்தில் சதம் அடித்து அதிகவேகமாக சதம் அடித்த 3-வது வீரர் என்ற சாதனையை பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் இன்றும் 62 பந்தில் சதம் அடித்து சாதனைப் படைத்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக ஸ்மித்தின் பேட்டிங் மிகவும் அபாரமாக உள்ளது. தற்போது அடுத்தடுத்து இரண்டு சதம் விளாசியுள்ளார். இந்தியாவுக்கு எதிராக கடைசி ஐந்து இன்னிங்சில் 69, 98, 131, 105, 104 ரன்கள் விளாசியுள்ளார்.
இந்தியா என்றாலே அபாரமான பேட்டிங் திறமையை ஸ்மித் வெளிக்காட்டி வருகிறார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது டி20 போட்டியில் நியூசிலாந்து 238 ரன்கள் குவித்து, 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி மவுன்ட் மவுங்கானுயில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் மார்ட்டின் கப்தில் - செய்ஃபெர்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
கப்தில் 23 பந்தில் 34 ரன்களும், செய்ஃபெர்ட் 13 பந்தில் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். நியூசிலாந்து அணி 6.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது விக்கெட்டுக்கு கான்வே உடன் க்ளென் பிலிப்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
கான்வே ஆட்டமிழக்காமல் 37 பந்தில் 65 ரன்கள் அடித்தார். ஆனால் க்ளென் பிலிப்ஸ் 51 பந்தில் 108 ரன்கள் விளாசினார். இதனால் நியூசிலாந்து 20 ஓவரில் 23 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் குவித்தது.
பின்னர் 239 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர் பிராண்டன் கிங் முதல் பந்திலேயே வெளியேறினார். பிளெட்சர் 20 ரன்னும், ஹெட்மையர் 25 ரன்னும், கைல் மேயர்ஸ் 20 ரன்களும், பூரன் 7 ரன்களும், பொல்லார்ட் 28 ரன்களும், கீமோ பால் 26 ரன்களும் அடிக்க வெஸ்ட் இண்டீஸ 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களே அடித்தது.
இதனால் நியூசிலாந்து 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 எனக்கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
ஹர்திக் பாண்ட்யா அளவுக்கு 5-வது அல்லது 6-வது பேட்டிங் வரிசையில் விஜய் சங்கரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா? என்பது சந்தேகம்தான் என்று கம்பீர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 90 ரன்கள் குவித்தார். வேகப்பந்து வீச்சாளரான அவர் பந்து வீசவில்லை. ஐ.பி.எல். தொடரிலும் ஒரு பந்து கூட வீசவில்லை. தான் பந்து வீசுவதற்கு இன்னும் முழுமையாக தயாராகவில்லை என்றும், சரியான நேரம் வரும் போது பவுலிங் செய்வேன் என்றும் கூறினார். இதனால் 6-வது பந்து வீச்சாளர் மற்றும் பகுதிநேர பந்து வீச்சாளர் இல்லாமல் இந்திய அணி திண்டாடுகிறது.
இந்திய அணியின் தோல்வி குறித்து இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘இந்திய அணி சரிசம கலவையில் (ஆடும் லெவன் அணி) இல்லாமல் தடுமாறுகிறது. கடந்த உலககோப்பை போட்டியில் இருந்தே இந்த பிரச்சினை இருக்கிறது. ஹர்திக் பாண்ட்யா பந்து வீசுவதற்கு உடல்தகுதியுடன் இல்லாவிட்டால் 6-வது பந்துவீச்சு வாய்ப்புக்கு யார் இருக்கிறார்? விஜய் சங்கர் மட்டுமே வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் வரிசையில் இருப்பதாக நினைக்கிறேன். ஆனால் ஹர்திக் பாண்ட்யா அளவுக்கு 5-வது அல்லது 6-வது பேட்டிங் வரிசையில் அவரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா? என்பது சந்தேகம்தான். இதே போல் அவரால் 7-8 ஓவர்கள் நேர்த்தியாக வீச முடியுமா? இதுவும் எனக்கு சந்தேகமாக இருக்கிறது.

ரோகித் சர்மா அணிக்கு திரும்பினாலும் கூட இது போன்ற சிக்கலை சரி செய்ய முடியாது. டாப் வரிசை பேட்ஸ்மேன்களில் ஒன்றிரண்டு ஓவர்கள் வீசுவதற்கு யாரும் இல்லை. ஆனால் ஆஸ்திரேலிய அணியில் இந்த பிரச்சினை இல்லை. ஆல்-ரவுண்டர்கள் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல் கைகொடுக்கிறார்கள். இந்திய அணியின் பார்வையில், ஹர்திக் பாண்ட்யா உடல்தகுதியுடன் இல்லாவிட்டால் அந்த இடத்தை நிரப்பப்போவது யார்? என்பதே எனது கேள்வி’ என்றார்.
சிட்னியில் நடைபெற்று வரும் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 390 ரன்கள் வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்தது.
சிட்னி:
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. சிட்னியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி அதே சிட்னி ஸ்டேடியத்தில் அங்கு பகல்-இரவு மோதலாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய வார்னர் மற்றும் பிஞ்ச் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 142 ரன்கள் எடுத்தது. பிஞ்ச் 69 ரன்கள் எடுத்து வெளியேற வார்னரும் 83 ரன்கள் எடுத்து ரன் அவுட் முறையில் வெளியேறினார்.
அடுத்து வந்த சுமித், லபுஸ்சேன் ஜோடி அதிரடியாக விளையாடினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுமித் இந்த தொடரில் தனது 2-வது சதத்தை பதிவு செய்தார். அவர் 64 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து பாண்ட்யா பந்து வீச்சில் அவுட் ஆக, லபுஸ்சேன் 70 ரன்னிலும் வெளியேறினார்.
கடைசி ஓவரில் அதிரடியை காட்டிய மேக்ஸ்வெல் 29 பந்துகளில் 63 ரன்களை எடுத்தார். இதையடுத்து 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 389 ரன்கள் எடுத்தது.
390 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்திய அணி களமிறங்கும். இந்திய அணி தரப்பில் முகமது சமி, பும்ரா, பாண்ட்யா, தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
சிட்னி:
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. சிட்னியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி அதே சிட்னி ஸ்டேடியத்தில் அங்கு பகல்-இரவு மோதலாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொடக்க ஆட்டத்தில் இந்தியாவின் பந்து வீச்சும், பீல்டிங்கும் சொதப்பியது. இதனால் ஆஸ்திரேலியா 374 ரன்கள் குவித்து மலைக்க வைத்து விட்டது. எனவே, இந்த போட்டியில் வீரர்கள் கூடுதல் கவனம் செலுத்தி, முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.
விராட் கோலி, சிட்னி மைதானத்தில் இதுவரை சாதித்ததில்லை. இங்கு 6 ஒரு நாள் போட்டிகளில் ஆடி வெறும் 57 ரன்கள் மட்டுமே (சராசரி 11.40 ரன்) எடுத்துள்ளார். அந்த மோசமான அனுபவத்துக்கு முடிவுகட்டுவாரா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
அதேசமயம் முதல் போட்டியில் கிடைத்த வெற்றியால் ஆஸ்திரேலிய வீரர்கள் உற்சாகத்துடன் களமிறங்கி உள்ளனர்.
இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.
சிட்னி:
இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி எழுச்சி பெறுமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. சிட்னியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி அதே சிட்னி ஸ்டேடியத்தில் அங்கு பகல்-இரவு மோதலாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
தொடக்க ஆட்டத்தில் இந்தியாவின் பந்து வீச்சும், பீல்டிங்கும் சொதப்பியது. இதனால் ஆஸ்திரேலியா 374 ரன்கள் குவித்து மலைக்க வைத்து விட்டது. ஆரோன் பிஞ்சும், ஸ்டீவன் சுமித்தும் சதம் விளாசினர். இவர்களை கட்டுப்படுத்த தவறிய இந்திய பவுலர்கள் ரன்களை வாரி வழங்கியது மட்டுமே மிச்சம். ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சு கூட எடுபடவில்லை. இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
இந்தியாவின் பேட்டிங்கை எடுத்துக் கொண்டால் கேப்டன் விராட் கோலி, மயங்க் அகர்வால், ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல் ஏமாற்றம் அளித்தனர். ஹர்திக் பாண்ட்யாவும், ஷிகர் தவானும் அரைசதம் அடித்ததால் 300 ரன்களை கடக்க முடிந்தது. பேட்டிங்கில் அட்டகாசப்படுத்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இன்னும் பவுலிங் செய்வதற்குரிய முழு உடல்தகுதியை எட்டாதது பின்னடைவு தான். முன்னணி பவுலர்களின் பந்து வீச்சு சிதைக்கப்படும் போது பகுதி நேர பவுலர்கள் கைகொடுப்பது உண்டு. அத்தகைய வீரர்கள் இல்லாதது பாதிப்பை ஏற்படுத்துவதாக கேப்டன் விராட் கோலி வெளிப்படையாகவே குறைப்பட்டு கொண்டார்.
விராட் கோலி, சிட்னி மைதானத்தில் இதுவரை சாதித்ததில்லை. இங்கு 6 ஒரு நாள் போட்டிகளில் ஆடி வெறும் 57 ரன்கள் மட்டுமே (சராசரி 11.40 ரன்) எடுத்துள்ளார். அந்த மோசமான அனுபவத்துக்கு முடிவுகட்டுவாரா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை முதலாவது ஆட்டத்தில் கிடைத்த வெற்றியால் இன்னும் உற்சாகமாக களம் இறங்குவார்கள். ஆரோன் பிஞ்ச் (114 ரன்), டேவிட் வார்னர் (69 ரன்), ஸ்டீவன் சுமித் (105 ரன்) முதல் ஆட்டத்தை போன்று ஜொலிக்கும் முனைப்புடன் உள்ளனர். ஆஸ்திரேலியாவின் ஆணிவேரான இவர்களை அசைத்தால் மட்டுமே அந்த அணியின் ரன்வேட்டைக்கு முட்டுக்கட்டை போட முடியும். ஹேசில்வுட்டின் (3 விக்கெட்) ஷாட்பிட்ச் பந்துகளும், ஆடம் ஜம்பாவின் (4 விக்கெட்) சுழலும் தொடக்க ஆட்டத்தில் அவர்களுக்கு பலனை தந்தன. அதே உத்வேகத்துடன் இந்திய பேட்ஸ்மேன்களை மிரட்ட காத்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று இந்திய வீரர்களும், இந்த ஆட்டத்துடன் தொடரை கைப்பற்றி விட வேண்டும் என்று ஆஸ்திரேலிய வீரர்களும் களத்தில் கடுமையாக மல்லுகட்டுவார்கள் என்பதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
இரு அணிகளிலும் ஒரு சில மாற்றங்கள் இருக்கும். ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் விலாபகுதியில் ஏற்பட்ட காயத்தால் முதல் ஆட்டத்தில் பாதியிலேயே வெளியேறினார். இந்த ஆட்டத்தில் அவர் விளையாட வாய்ப்பில்லை. அவருக்கு பதிலாக புதுமுக ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் இடம் பெற வாய்ப்பு உள்ளது. இதே போல் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் லேசான தசைப்பிடிப்புக்கு சிகிச்சை எடுத்தார். வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி முதுகுவலியால் அவதிப்படுகிறார். இவர்கள் இருவரும் இன்றைய ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் தான்.
சிட்னி மைதானத்தில் கடைசியாக ஆடிய 8 ஆட்டங்களில் 7-ல் முதலில் பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றிருப்பதால் இன்றைய ஆட்டத்திலும் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: மயங்க் அகர்வால், ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, நவ்தீப் சைனி அல்லது ஷர்துல் தாகூர் அல்லது டி.நடராஜன், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல் அல்லது குல்தீப் யாதவ்.
ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், கேமரூன் கிரீன் அல்லது சீன் அப்போட், மேக்ஸ்வெல், லபுஸ்சேன், அலெக்ஸ் கேரி, கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட்.
இந்திய நேரப்படி காலை 9.10 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி டென்1 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக மேக்ஸ்வெல் கேஎல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டதாக தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான மேக்ஸ்வெல், நேற்று இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக அடி 19 பந்துகளில் 45 ரன்கள் விளாசியிருந்தார். ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்த மேக்ஸ்வேலின் அதிரடி ஆட்டமும் முக்கிய காரணியாக இருந்தது.
சிறந்த அதிரடி பேட்ஸ்மேனான மேக்ஸ்வெல், நடப்பு ஐபிஎல் சீசனில் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணிக்காக விளையாடிய மேக்ஸ்வெல், ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. 11 இன்னிங்ஸ்களில் பேட் செய்து வெறும் 108 ரன்கள் மட்டுமே அடித்தார். அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மேக்ஸ்வெல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சேவாக் போன்றோர் சாடியிருந்தனர்.
இந்த நிலையில், மேக்ஸ்வெல் மற்றும் ஜேம்ஸ் நீஷம் இருவரும் சிறப்பாக விளையாடியதை கேஎல் ராகுல் விரக்தியுடன் நின்று பார்ப்பது போன்ற புகைப்படத்தை டுவிட்டரில் நெட்டிசன் ஒருவர் வெளியிட்டு இருந்தார். இதற்கு பதிலளித்த ஜேம்ஸ் நீஷம், உண்மையில் இது மிகவும் நல்ல மீம் என்று பதிவிட்டு இருந்தார்.
இந்த டுவிட்டருக்கு பதிலளித்த மேக்ஸ்வெல், பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கோரிவிட்டதாக கூறி ஸ்மைலி-யையும் பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் வீரர் கொரோனா தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளை கடைபிடிக்காவிடில் சொந்த நாடு திருப்பி அனுப்பப் படுவார்கள் என்று நியூசிலாந்து தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் 20 ஓவர் போட்டி வருகிற டிசம்பர் 18-ந்தேதி நடைபெறுகிறது.
இதற்காக நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் அந்நாட்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.
நியூசிலாந்தில் ஓட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு 3-வது நாளில் கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் இன்று வரை 7 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
நியூசிலாந்து சுகாதாரத்துறை, ஓட்டலில் தங்கியுள்ள பாகிஸ்தான் வீரர்கள் குழுவாக பயிற்சியில் ஈடுபட அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், ஓட்டலில் கொரோனா தடுப்பு விதிகளை மீறிய பாகிஸ்தான் அணியினர் ஓட்டலில் சுதந்திரமாக நடமாடுவதும், உணவுகளை பரிமாறிக்கொள்வதும் கண்காணிப்பு கேமிராவில் பதிவானது.
இதையடுத்து, பாகிஸ்தான் வீரர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பயிற்சிக்கான அனுமதியை நியூசிலாந்து அரசு ரத்து செய்தது. அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்கள் விதிமுறைகளை மீறி நடந்தால், நியூசிலாந்திலிருந்து திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்தது.
இதுபற்றி அறிந்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் ஆவேசமுடன் கூறும்பொழுது, ‘‘பாகிஸ்தான் அணி ஒரு தேசிய அணி. கிளப் அணி அல்ல என நியூசிலாந்து அரசுக்கும், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கும் கூறி கொள்ள விரும்புகிறேன்.
சுற்றுப்பயணம் ரத்து செய்யப்படும் என எப்படி நீங்கள் கூற முடியும்? நீங்கள் எங்களுக்கு அவசியமில்லை. எங்களுடைய கிரிக்கெட் இத்துடன் முடிந்து விடவில்லை. எங்களுக்கு பணம் இல்லாமல் இல்லை.
போட்டிகளை ஒளிபரப்பும் உரிமைகளுக்காக கிடைக்கும் பணம் உங்களுக்கு போய் சேரும். எங்களுக்கு அல்ல. அதனால், இதுபோன்ற சோதனையான காலத்தில் உங்கள் நாட்டிற்கு நாங்கள் வந்து விளையாடுவதற்கு நீங்கள் எங்களுக்கு கடன்பட்டு இருக்கிறீர்கள்.
நீங்கள் பாகிஸ்தானை பற்றி பேசுகிறீர்கள். அதனால் உணர்ந்து நடந்து கொள்ளுங்கள். இதுபோன்ற அறிக்கைகளை இனி வெளியிடாமல் நிறுத்தி கொள்ளுங்கள். என்ன கூறுகிறீர்கள் என்பதில், அடுத்த முறை கவனமுடன் இருங்கள்’’ என அக்தர் பேசியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 50 ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட இந்திய அணிக்கு ஐசிசி அபராதம் விதித்தி உள்ளது.
சிட்னி:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. முதலில், ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது.
இதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி துறைமுக நகரான சிட்னியில் நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணிக்கு 375 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ஞ் 114 (124) மற்றும் ஸ்மித் 105 (66) என இருவரும் சதம் அடித்தது அந்த அணி 374 ரன்களை ஸ்கோர் செய்ய உதவியது. இதன்பின்னர் ஆடிய இந்திய அணியில் ஹர்தீக் பாண்ட்யா (90) மற்றும் ஷிகர் தவான் (74) ரன்கள் எடுத்து சரிவில் இருந்து அணியை மீட்டனர். எனினும், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 308 ரன்களே எடுத்து இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் 50 ஓவர்களை வீசுவதற்கு இந்திய அணி 4 மணிநேரம் 6 நிமிடங்களை எடுத்துக் கொண்டது. அதாவது ஆஸ்திரேலிய நேரப்படி இந்த போட்டி இரவு 11.40 மணிக்குத்தான் முடிந்தது. ஐசிசி நிர்ணயித்த காலக்கெடுவுக்கும் அதிகமான நேரத்தை பந்துவீச இந்திய அணியினர் எடுத்துக்கொண்டனர்.
இதையடுத்து ஐசிசி போட்டி நடுவர் டேவிட் பூன், இந்திய அணி பேட்டிங் செய்தபோது ஒரு ஓவரைக் குறைத்தும், அபராதம் விதித்தும் பரிந்துரைத்தார்.
இதுகுறித்து ஐசிசி இன்று வெளியிட்ட அறிவிப்பில் “ வீரர்கள், மற்றும் வீரர்கள் உதவியாளர்களுக்கான ஐசிசி ஒழுங்கு விதிகள்படி, பந்துவீசுவதற்கு வழங்கப்பட்ட குறிப்பிட்ட கால அவகாசத்தைவிட அதிகமான நேரத்தை எடுத்துக்கொண்டல் போட்டித் தொகையிலிருந்து 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். அதன்படி, இந்திய அணியினர் பந்துவீசுவதற்கு அதிகமான நேரம் எடுத்துக்கொண்டதால், அவர்களுக்கு போட்டி ஊதியத்திலிருந்து 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்படுகிறது.
பந்துவீசுவதற்கு அதிகமான நேரம் எடுத்துக்கொண்ட குற்றத்துக்கு கேப்டன் விராட் கோலி, நேரடியாக விசாரணைக்கு வர வேண்டும். கள நடுவர்கள் ராட் டக்கர், சாம் நோகாஜி, டிவி நடுவர் பால் ரீபல், 4-வது நடுவர் ஜெரார்ட் அபூத் ஆகியோரும் இந்திய அணி பந்துவீச அதிகமான நேரம் எடுத்துக்கொண்டதாகத் குற்றம்சாட்டியுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டி குறித்து ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் “ எனக்குத் தெரிந்தவரை 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டியில் அதிகமான நேரம் களத்தில் இருந்தது இந்த போட்டியாகத்தான் இருக்கும். முதல் இன்னிங்ஸில் இந்திய அணியினர் பந்தவீசுதற்கு அதிகமான நேரம் எடுத்துக்கொண்டனர். அதாவது கூடுதலாக 45 நிமிடங்களை எடுத்துக்கொண்டனர். அதேபோல, நாங்களும் சிறிது நேரம் எடுத்துக்கொண்டோம்” எனத் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 50 ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட இந்திய அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. முதலில், ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது.
இதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி துறைமுக நகரான சிட்னியில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணிக்கு 375 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பிஞ்ச் 114 (124) மற்றும் ஸ்மித் 105 (66) என இருவரும் சதம் அடித்தது அந்த அணி 374 ரன்கள் அடிக்க உதவியது. இதன்பின்னர் ஆடிய இந்திய அணியில் ஹர்தீக் பாண்ட்யா (90) மற்றும் ஷிகர் தவான் (74) ரன்கள் எடுத்து சரிவில் இருந்து அணியை மீட்டனர். எனினும், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 308 ரன்களே எடுத்து இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் 50 ஓவர்களை வீசுவதற்கு இந்திய அணி 4 மணிநேரம் 6 நிமிடங்களை எடுத்துக் கொண்டது. அதாவது ஆஸ்திரேலிய நேரப்படி இந்த போட்டி இரவு 11.40 மணிக்குத்தான் முடிந்தது. ஐசிசி நிர்ணயித்த காலக்கெடுவுக்கும் அதிகமான நேரத்தை பந்துவீச இந்திய அணியினர் எடுத்துக்கொண்டனர். குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு ஓவரை வீசி முடிக்கவில்லை.
இதனால் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, மற்ற வீரர்களுக்கும் அபராதம் விதித்துள்ளது.
இதுகுறித்து ஐசிசி இன்று வெளியிட்ட அறிவிப்பில் “ வீரர்கள், மற்றும் வீரர்கள் உதவியாளர்களுக்கான ஐசிசி ஒழுங்கு விதிகள்படி, பந்துவீசுவதற்கு வழங்கப்பட்ட குறிப்பிட்ட கால அவகாசத்தைவிட அதிகமான நேரத்தை எடுத்துக்கொண்டல் போட்டித் தொகையிலிருந்து 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். அதன்படி, இந்திய அணியினர் பந்துவீசுவதற்கு அதிகமான நேரம் எடுத்துக்கொண்டதால் அவர்களுக்கு போட்டி ஊதியத்திலிருந்து 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்படுகிறது.
பந்துவீசுவதற்கு அதிகமான நேரம் எடுத்துக்கொண்ட குற்றத்துக்கு கேப்டன் விராட் கோலி, நேரடியாக விசாரணைக்கு வர வேண்டும். கள நடுவர்கள் ராட் டக்கர், சாம் நோகாஜி, டிவி நடுவர் பால் ரீபல், 4-வது நடுவர் ஜெரார்ட் அபூத் ஆகியோரும் இந்திய அணி பந்துவீச அதிகமான நேரம் எடுத்துக்கொண்டதாகத் குற்றம்சாட்டியுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடையும் என மைக்கேல் வாகன் கணிப்பு வெளியிட்டு உள்ளார்.
லண்டன்:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. முதலில், ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது.
இதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி துறைமுக நகரான சிட்னியில் நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணிக்கு 375 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் 114 (124) மற்றும் ஸ்மித் 105 (66) என இருவரும் சதம் அடித்தது அந்த அணி 374 ரன்களை ஸ்கோர் செய்ய உதவியது. இதன்பின்னர் ஆடிய இந்திய அணியில் ஹர்தீக் பாண்ட்யா (90) மற்றும் ஷிகர் தவான் (74) ரன்கள் எடுத்து சரிவில் இருந்து அணியை மீட்டனர்.
எனினும், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 308 ரன்களே எடுத்து இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில், இந்திய அணியின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.
அவர் கூறும்பொழுது, கடந்த 9 மாதங்களில் தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடிய இந்திய அணி சிறந்த முறையில் இல்லை. அவர்கள் பந்து வீச்சில் அதிக ரன்களை விட்டு கொடுத்தனர். பீல்டிங்கில் சோபிக்கவில்லை. அதிரடியாக விளையாடினாலும், பேட்டிங்கில் ஒன்றிணைந்து செயல்பட முடியவில்லை.
ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடியபோதும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் சர்வதேச போட்டியில் ஓரணியாக இந்திய வீரர்களால் திரும்ப முடியவில்லை.
சர்வதேச ஒரு நாள் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி, பந்து வீச்சாளர்கள் 5 பேர், போதிய பேட்டிங் இல்லாதது என பழைய காலத்திலேயே உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் அனைத்து நிலைகளிலான போட்டிகளிலும் (ஒரு நாள், 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகள்) இந்திய கிரிக்கெட் அணியை ஆஸ்திரேலியா தோற்கடிக்கும் என்றே நான் நினைக்கிறேன் என டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.