search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டீம் இந்தியா
    X
    டீம் இந்தியா

    பந்து வீச அதிக நேரம்: இந்திய அணிக்கு அபராதம்

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 50 ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட இந்திய அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. முதலில், ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது.

    இதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி துறைமுக நகரான சிட்னியில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணிக்கு 375 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

    ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பிஞ்ச் 114 (124) மற்றும் ஸ்மித் 105 (66) என இருவரும் சதம் அடித்தது அந்த அணி 374 ரன்கள் அடிக்க உதவியது. இதன்பின்னர் ஆடிய இந்திய அணியில் ஹர்தீக் பாண்ட்யா (90) மற்றும் ஷிகர் தவான் (74) ரன்கள் எடுத்து சரிவில் இருந்து அணியை மீட்டனர். எனினும், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 308 ரன்களே எடுத்து இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

    இந்தப் போட்டியில் 50 ஓவர்களை வீசுவதற்கு இந்திய அணி 4 மணிநேரம் 6 நிமிடங்களை எடுத்துக் கொண்டது. அதாவது ஆஸ்திரேலிய நேரப்படி இந்த போட்டி இரவு 11.40 மணிக்குத்தான் முடிந்தது. ஐசிசி நிர்ணயித்த காலக்கெடுவுக்கும் அதிகமான நேரத்தை பந்துவீச இந்திய அணியினர் எடுத்துக்கொண்டனர். குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு ஓவரை வீசி முடிக்கவில்லை.

    இதனால் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, மற்ற வீரர்களுக்கும் அபராதம் விதித்துள்ளது.

    இதுகுறித்து ஐசிசி இன்று வெளியிட்ட அறிவிப்பில் “ வீரர்கள், மற்றும் வீரர்கள் உதவியாளர்களுக்கான ஐசிசி ஒழுங்கு விதிகள்படி, பந்துவீசுவதற்கு வழங்கப்பட்ட குறிப்பிட்ட கால அவகாசத்தைவிட அதிகமான நேரத்தை எடுத்துக்கொண்டல் போட்டித் தொகையிலிருந்து 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். அதன்படி, இந்திய அணியினர் பந்துவீசுவதற்கு அதிகமான நேரம் எடுத்துக்கொண்டதால் அவர்களுக்கு போட்டி ஊதியத்திலிருந்து 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்படுகிறது.

    பந்துவீசுவதற்கு அதிகமான நேரம் எடுத்துக்கொண்ட குற்றத்துக்கு கேப்டன் விராட் கோலி, நேரடியாக விசாரணைக்கு வர வேண்டும். கள நடுவர்கள் ராட் டக்கர், சாம் நோகாஜி, டிவி நடுவர் பால் ரீபல், 4-வது நடுவர் ஜெரார்ட் அபூத் ஆகியோரும் இந்திய அணி பந்துவீச அதிகமான நேரம் எடுத்துக்கொண்டதாகத் குற்றம்சாட்டியுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×