என் மலர்
விளையாட்டு
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடையும் என மைக்கேல் வாகன் கணிப்பு வெளியிட்டு உள்ளார்.
லண்டன்:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. முதலில், ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது.
இதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி துறைமுக நகரான சிட்னியில் நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணிக்கு 375 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் 114 (124) மற்றும் ஸ்மித் 105 (66) என இருவரும் சதம் அடித்தது அந்த அணி 374 ரன்களை ஸ்கோர் செய்ய உதவியது. இதன்பின்னர் ஆடிய இந்திய அணியில் ஹர்தீக் பாண்ட்யா (90) மற்றும் ஷிகர் தவான் (74) ரன்கள் எடுத்து சரிவில் இருந்து அணியை மீட்டனர்.
எனினும், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 308 ரன்களே எடுத்து இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில், இந்திய அணியின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.
அவர் கூறும்பொழுது, கடந்த 9 மாதங்களில் தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடிய இந்திய அணி சிறந்த முறையில் இல்லை. அவர்கள் பந்து வீச்சில் அதிக ரன்களை விட்டு கொடுத்தனர். பீல்டிங்கில் சோபிக்கவில்லை. அதிரடியாக விளையாடினாலும், பேட்டிங்கில் ஒன்றிணைந்து செயல்பட முடியவில்லை.
ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடியபோதும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் சர்வதேச போட்டியில் ஓரணியாக இந்திய வீரர்களால் திரும்ப முடியவில்லை.
சர்வதேச ஒரு நாள் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி, பந்து வீச்சாளர்கள் 5 பேர், போதிய பேட்டிங் இல்லாதது என பழைய காலத்திலேயே உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் அனைத்து நிலைகளிலான போட்டிகளிலும் (ஒரு நாள், 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகள்) இந்திய கிரிக்கெட் அணியை ஆஸ்திரேலியா தோற்கடிக்கும் என்றே நான் நினைக்கிறேன் என டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடையும் என மைக்கேல் வாகன் கணிப்பு வெளியிட்டு உள்ளார்.
லண்டன்:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. முதலில், ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது.
இதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி துறைமுக நகரான சிட்னியில் நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணிக்கு 375 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் 114 (124) மற்றும் ஸ்மித் 105 (66) என இருவரும் சதம் அடித்தது அந்த அணி 374 ரன்களை ஸ்கோர் செய்ய உதவியது. இதன்பின்னர் ஆடிய இந்திய அணியில் ஹர்தீக் பாண்ட்யா (90) மற்றும் ஷிகர் தவான் (74) ரன்கள் எடுத்து சரிவில் இருந்து அணியை மீட்டனர்.
எனினும், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 308 ரன்களே எடுத்து இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில், இந்திய அணியின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.
அவர் கூறும்பொழுது, கடந்த 9 மாதங்களில் தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடிய இந்திய அணி சிறந்த முறையில் இல்லை. அவர்கள் பந்து வீச்சில் அதிக ரன்களை விட்டு கொடுத்தனர். பீல்டிங்கில் சோபிக்கவில்லை. அதிரடியாக விளையாடினாலும், பேட்டிங்கில் ஒன்றிணைந்து செயல்பட முடியவில்லை.
ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடியபோதும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் சர்வதேச போட்டியில் ஓரணியாக இந்திய வீரர்களால் திரும்ப முடியவில்லை.
சர்வதேச ஒரு நாள் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி, பந்து வீச்சாளர்கள் 5 பேர், போதிய பேட்டிங் இல்லாதது என பழைய காலத்திலேயே உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் அனைத்து நிலைகளிலான போட்டிகளிலும் (ஒரு நாள், 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகள்) இந்திய கிரிக்கெட் அணியை ஆஸ்திரேலியா தோற்கடிக்கும் என்றே நான் நினைக்கிறேன் என டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.
பேட்டிங் செய்யும் போது கேஎல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டதாக ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான மேக்ஸ்வெல், நேற்று இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக ஆடி 19 பந்துகளில் 45 ரன்கள் விளாசியிருந்தார். ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்த மேக்ஸ்வேலின் அதிரடி ஆட்டமும் முக்கிய காரணமாக இருந்தது.
சிறந்த அதிரடி பேட்ஸ்மேனான மேக்ஸ்வெல், நடப்பு ஐபிஎல் சீசனில் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணிக்காக விளையாடிய மேக்ஸ்வெல், ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. 11 இன்னிங்ஸ்களில் பேட் செய்து வெறும் 108 ரன்கள் மட்டுமே அடித்தார். அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மேக்ஸ்வெல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சேவாக் போன்றோர் சாடியிருந்தனர்.
இந்த நிலையில், மேக்ஸ்வெல் மற்றும் ஜேம்ஸ் நீஷம் இருவரும் சிறப்பாக விளையாடியதை கேஎல் ராகுல் விரக்தியுடன் நின்று பார்ப்பது போன்ற புகைப்படத்தை டுவிட்டரில் நெட்டிசன் ஒருவர் வெளியிட்டு இருந்தார். இதற்கு பதிலளித்த ஜேம்ஸ் நீஷம், உண்மையில் இது மிகவும் நல்ல மீம் என்று பதிவிட்டு இருந்தார். இந்த டுவிட்டருக்கு பதிலளித்த மேக்ஸ்வெல், பேட்டிங் செய்து கொண்டிருந்த போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கோரி விட்டதாக கூறி ஸ்மைலி-யையும் பதிவிட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பேர்ஸ்டோவ் அதிரடியாக ஆட இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கேப் டவுன்:
தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இங்கிலாந்து அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கேப் டவுனில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான பவுமா 5 ரன்னிலும், டி காக் 30 ரன்னிலும் அவுட்டாகினர்.
அடுத்து இறங்கிய டு பிளசிஸ் அபாரமாக ஆடி அரை சதமடித்தார். அவர் 58 ரன்னில் வெளியேறினார். வான் டர் டுசன் 37 ரன்னும், கிளாசன் 20 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து சார்பில் சாம் கர்ரன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர். டேவிட் மலன் 17 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து இறங்கிய பேர்ஸ்டோவ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். பென் ஸ்டோக்ஸ் 37 ரன் எடுத்து வெளியேறினர். இயான் மார்கன் 12 ரன்னில் அவுட்டானார்.
பேர்ஸ்டோவ் இறுதி வரை களத்தில் நின்று அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், இங்கிலாந்து அணி 19.2 ஒவரில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பேர்ஸ்டோவ் 86 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார். ஆட்டநாயகன் விருது பேர்ஸ்டோவுக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம் டி 20 தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.
எனது மனைவி குழந்தை பெற்றெடுக்கும்போது அருகில் இருப்பது அழகான மற்றும் சிறப்பான தருணம் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி. இவர் பாலிவுட் நடிகை அனுஷ்காவை திருமணம் செய்துள்ளார். தற்போது அனுஷ்கா சர்மா கர்ப்பிணியாக உள்ளார். இவர்களுக்கு முதல் குழந்தை ஜனவரியில் பிறக்க இருக்கிறது. இதனால் விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
விராட் கோலியின் முடிவுக்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும், ஆங்காங்கே சில விமர்சனங்களும் எழுகின்றன. இந்நிலையில் மூன்று போட்டிகளில் விலக நினைத்தது ஏன்? என பதில் அளித்தார். இதுகுறித்து விராட் கோலி அளித்த பதிலில் ‘‘எங்களுடைய முதல் குழந்தையை எனது மனைவி பெற்றெடுக்க இருப்பதால் நான் சொந்த நாடு திரும்ப விரும்பினேன். எனது வாழ்க்கையில் அது சிறப்பான மற்றும் அழகான தருணம்’’ என்றார்.
கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்கு 7 ஆண்டு கால தடைக்காலம் முடிவடைந்ததையடுத்து வேகப் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் வலைப் பயிற்சிக்கு திரும்பியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்திற்கு கிரிக்கெட் விளையாட விதிக்கப்பட்டிருந்த தடை, இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. இதனையடுத்து அவர் மீண்டும் மாநில கிரிக்கெட் அணியில் இடம்பெறுவாரா என அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அதற்காக அவர் தீவிரமான பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார்.
இப்போது கேரள மாநிலத்தில் நடைபெற இருக்கும் பிரசிடெண்ட் கோப்பை டி20 தொடரில் பங்கேற்பதற்கு ஸ்ரீசாந்திற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் கொச்சியில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர் ‘‘எனக்கு வாய்ப்பளித்த கேரள மாநில கிரிக்கெட் சங்க தேர்வாளர்களுக்கு நன்றி. என்னுடைய 7 ஆண்டு காத்திருப்புக்கு கிடைத்த பலன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்காக 27 டெஸ்ட் போட்டிகளில் 87 விக்கெட்டுகளையும் 53 ஒருநாள் போட்டிகளில் 75 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் ஸ்ரீசாந்த். 2007 உலகக்கோப்பை டி20 தொடரை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றபோது இவரது பங்களிப்பு பெரிதும் பேசப்பட்டது. அந்தத் தொடரில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்களுக்கு ஸ்ரீசாந்த் பவுலிங்கில் சிம்மசொப்பனமாக இருந்தார்.
சரியான நேரம் வரும்போது பந்து வீசுவேன், அதேவேளையில் மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம் என ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. கடந்த ஆண்டு முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
அதன்பின் ஐபிஎல் தொடரில்தான் போட்டி கிரிக்கெட்டில் விளையாடினார். ஆனால் பந்து வீசவில்லை. பேட்டிங் மட்டுமே செய்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ளார். இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் விளையாடினார். பந்து வீசவில்லை. பேட்டிங் மட்டும் செய்தார். சிறப்பாக பேட்டிங் செய்து 90 ரன்கள் அடித்தார். இருந்தாலும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.
போட்டி முடிந்த பின்னர் பேட்டி அளித்தார். அப்போது ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-
நான் எனது பந்து வீச்சில் கவனம் செலுத்தி வருகிறேன். சரியான நேரம் வரும்போது பந்து வீசுவேன். எனது பந்து வீச்சில் 100 சதவீத திறனை கொண்டு வர விரும்புகிறேன். சர்வதேச அளவிற்கு தேவையான வேகத்தில் பந்து வீச விரும்புகிறேன்.
நாம் நீண்ட கால திட்டத்தை யோசித்து கொண்டிருக்கிறோம். டி20 உலககோப்பை, மற்ற முக்கியமான தொடர்களை பற்றி யோசிக்கும்போது, என்னுடைய பந்து வீச்சு கூட முக்கியத்துவம் பெறுவதாக இருக்கலாம்.
இந்தியாவுக்காக விளையாடும் ஆல்-ரவுண்டர் யாராவது ஒருவரை கண்டுபிடிக்க வேண்டும். அவர்களை வளர்த்து விளையாட வைக்க வேண்டிய வழிகளைத் தேட வேண்டும். ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடும்போது கஷ்டமானது. யாராவது ஒருவருக்கு காயம் ஏற்பட்டால், அவரது இடத்தை நிரப்புவதற்கு தயாராக இருக்க வேண்டும்’’ என்றார்.
கபில்தேவ் தேர்வு செய்துள்ள எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் ராகுல் டிராவிட் இடம் பிடித்துள்ளார்.
இந்தியாவுக்கு முதன்முறையாக 1983-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை வென்று கொடுத்து சாதனைப் படைத்தவர் கபில்தேவ். மேலும் இந்தியாவின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக திகழ்ந்தவர்.
தற்போது வரை கபில்தேவ் விளையாடிய அளவிற்கு சிறந்த ஆல்-ரவுண்டரை இந்தியா இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
இந்த நிலையில் எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியை தேர்வு செய்துள்ளார். அதில் ராகுல் டிராவிட்டுக்கு இடம் கொடுத்துள்ளார்.
கபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி:-
1. சச்சின் தெண்டுல்கர், 2. விரேந்திர சேவாக், 3. விராட் கோலி, 4. ராகுல் டிராவிட், 5. யுவராஜ் சிங், 6. எம்எஸ் டோனி, 7. ஜவஹல் ஸ்ரீநாத், 8. ஜாகீர் கான், 9. அனில் கும்ப்ளே, 10. ஹர்பஜன் சிங், 11. பும்ரா.
இதில் யுவராஜ் சிங், சேவாக், சச்சின் தெண்டுல்கர் ஆகியோர் பகுதி நேர பந்து வீச்சாளர்கள் ஆவார்கள். இந்திய டெஸ்ட் அணியின் தடுப்புச்சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட்டுக்கும் இடம் கொடுத்துள்ளார்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்களில் ராகுல் டிராவிட்டும் ஒருவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்தியா ஐந்து பந்து வீச்சாளர்களை மட்டுமே வைத்து விளையாடியதால் ஏராளமான ரன்களை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி்யை தழுவியது. இந்தியா முகமது ஷமி, பும்ரா, சைனி, சாஹல், ஜடேஜா ஆகிய ஐந்து பந்து வீச்சாளர்களுடன் மட்டுமே விளையாடியது.
ஒரு பவுலருக்கு பந்து வீச்சு எடுபடவில்லை என்றால், தொடர்ந்து அவரே பந்து வீச வேண்டிய நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. இன்றைய நிலைமையும் இதுதான்.
முகமது சமி மட்டுமே 60 ரன்களுக்கு கீழ் விட்டுக்கொடுத்தார். பும்ரா (73), சைனி (83), சாஹல் (89), ஜடேஜா (63) அதிக ரன்கள் விட்டுக்கொடுத்தனர்.
பேட்டிங்கில் விராட் கோலி (21), ஷ்ரேயாஸ் அய்யர் (2), கேஎல் ராகுல் (12) ஏமாற்றம் அளித்தனர். காயத்தில் இருந்து மீண்டுள்ள ஹர்திக் பாணட்யா இன்னும் பந்து வீசவில்லை. இது இந்திய அணிக்கு பாதிப்பாக உள்ளது.
இந்நிலையில் இன்றைய போட்டி குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘போட்டிக்கு தயாராக போதுமான நேரங்கள் எங்களுக்கு கிடைத்தது. ஒரு அணியாக சிறப்பாக செயல்பட முடியாத நிலையில், எந்தவொரு காரணத்தையும் சொல்லி தப்பிய நினைக்கவில்லை.
நாங்கள் அதிக அளவில் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடிய பின்னர், களம் இறங்கிய முதல் 50 ஓவர் கிரிக்கெட் போட்டி இதுவாகும். இருந்தாலும் நாங்கள் அதிகமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி உள்ளோம்.
உடல் அசைவு (body language ) 25-26 ஓவருக்குப்பின் ஏமாற்றம் அளித்தது. பீல்டிங்கில் கோட்டை விட்டால், தரனமான அணி உங்களுக்கு காயத்தை ஏற்படுத்தும்.
சில பார்ட்-டைம் பந்து வீச்சாளர்களிடம் சில ஓவர்களை பெறும் வகையில் நாங்கள் வழிகளை கண்டுபிடிக்க வேண்டும்.
துரதிருஷ்டவசமாக ஹர்திக் பாண்ட்யாவால் தற்போது வரை பந்து வீச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது நாங்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். இந்த பகுதியை நாங்கள் கவனிக்க வேண்டும். எந்தவொரு அணியின் பேலன்ஸ்-க்கும் இது முக்கிய பகுதியாக அமையும். ஆஸ்திரேலிய அணிக்கு மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ் இதை செய்கிறார்கள். எதிரணி பேட்ஸ்மேன்களை கட்டுக்குள் வைத்திருக்க முக்கியமானது விக்கெட்டை வீழ்த்துவது. அதை நாங்கள் செய்யவில்லை.’’ என்றார்.
இந்தியாவுக்கு எதிராக 114 ரன்கள் விளாசிய ஆரோன் பிஞ்ச், அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் கில்கிறிஸ்ட்-ஐ பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 374 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரும், ஆஸ்திரேலியாவின் கேப்டனுமான ஆரோன் பிஞ்ச் 114 ரன்கள் விளாசினார். இது அவருக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 17-வது சதம் ஆகும்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் கில்கிறிஸ்ட்-ஐ பின்னுக்குத் தள்ளி 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ரிக்கி பாண்டிங் 29 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார். வார்னர், மார்க் வாக் ஆகியோர் தலா 18 சதங்களுடன் 2-வது இடத்தில் உள்ளனர். கில்கிறிஸ்ட் 16 சதங்களுடன் 4-வது இடத்தை பிடித்துள்ளார்.
சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், கேஎல் ராகுல் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்தியா தோல்வியை சந்தித்தது.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஆரோன் பிஞ்ச், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் சதத்தால் 374 ரன்கள் குவித்தது.
பின்னர் 375 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் தவான், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
முதல் இரண்டு மூன்று ஓவர்களில் இந்தியாவுக்கு ஜெட் வேகத்தில் ஸ்கோர் உயர்ந்தது. இதனால் இந்திய ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். இந்தியாவின் ஸ்கோர் 5.2 ஓவரில் 53 ரன்கள் இருக்கும்போது மயங்க் அகர்வால் 18 பந்தில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். ஹசில்வுட் வீசிய ஆட்டத்தின் 10-வது ஓவரில் விராட் கோலி 21 ரன்னில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் ஷ்ரேயாஸ் அய்யர் 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
பவர் பிளேயில் இந்தியா 80 ரன்கள் அடித்தாலும் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்தது, மூன்று விக்கெட்டுகளையும் ஹசில்வுட் சாய்த்து ஆஸ்திரேலியாவுக்கு சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுத்தார்.
கேஎல் ராகுல் 12 ரன்னில் வெளியேற இந்தியா 101 ரன்னில் 4 விக்கெட்டை இழந்தது. 5-வது விக்கெட்டுக்கு தவான் உடன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். ஒரு பக்கம் தவான் நிதானமாக விளையாட மறுபக்கம் ஹர்திக் பாண்ட்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் போட்டியில் சுவராஸ்யம் கூடியது.
தவானும், ஹர்திக் பாண்ட்யாவும் அரைசதம் அடித்து முன்னேறி சென்று கொண்டிருந்தனர். இந்திய அணி 34.3 ஓவரில் 229 ரன்கள் எடுத்திருக்கும்போது தவான் 86 பந்தில் 74 ரன்கள் எடுத்து ஆடம் ஜம்பா பந்தில் வெளியேறினார். இந்த ஜோடி 128 ரன்கள் குவித்தது.
தவான் ஆட்டமிழந்ததும் இந்திய ரசிகர்கள் வெற்றிக் கனவு தகர்ந்தது. அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 76 பந்தில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 90 ரன்கள் அடித்து வெளியேறினார்.
ஜடேஜா 25 ரன்களும், நவ்தீப் சைனி 29 ரன்களும் அடிக்க இந்திய அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 68 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. 2-வது போட்டி 29-ந்தேதி (நாளைமறுநாள்) நடக்கிறது.
ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் விதியின் அடிப்படையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது நியூசிலாந்து.
நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களம் இறங்கியது. மழைக்காரணமாக ஆட்டம் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தொடக்க வீரர் பிளெட்சர் அதிரடியாக விளையாடி 14 பந்தில் 34 ரன்கள் விளாசினார். அதன்பின் வந்த ஹெட்மையர் (0), பூரன் (1), பொவோல் (0) சொற்ப ரன்களில் வெளியேறினார்.
அடுத்த வந்த பொல்லார்ட் ஆட்டமிழக்காமல் 37 பந்தில் 4 பவுண்டரி, 8 சிக்சருடன் 75 ரன்கள் விளாச வெஸ்ட் இண்டீஸ் 16 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது. பின்னர் 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. மார்ட்டின் கப்தில் 5 ரன்னிலும், ஷெய்பெர்ட் 17 ரன்னிலும் வெளியேறினர். அதன்பின் வந்த கான்வே 29 பந்தில் 41 ரன்கள் விளாசினார்.
கான்வே ஆட்டமிழக்கும்போது நியூசிலாந்து 12.2 ஓவரில் 140 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 22 பந்தில் 41 ரன்கள் தேவைப்பட்டது. நீஷம், சான்ட்னெர் அதிரடியாக விளையாடினர். 15.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது. இதனால் டக்வொர்த் லீவிஸ் விதியின்படி நியூசிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.






