என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்தியா- ஆஸ்திரேலியா 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது இந்திய இளைஞரும் ஆஸ்திரேலிய இளம்பெண்ணும் தங்களது காதலை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.
    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. அதில் நேற்று முன்தினம் நடைபெற்று முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது

    இதையடுத்து 2-ஆவது போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 389 ரன்களை எடுத்தது. அந்த அணியில் டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச், மார்னஸ் லாபஸ்சேன் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் என நால்வரும் அரை சதமடித்தனர். ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக விளையாடி சதமடித்தார்.

    இதையடுத்து 390 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வினையாடிய இந்திய அணி 338 ரன்கள் மட்டுமே எடுத்து 51 ரன்னில் தோல்வியை சந்தித்தது.

    இதனிடையே இந்திய கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ஆஸ்திரேலிய பெண் ஒருவரிடம், ஸ்டேடியத்திற்குள் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு அந்த பெண்ணும் ஓகே சொல்லியுள்ளார். இதையடுத்து கிரிக்கெட் ஆரவாரத்துடன்,அந்த காதல் ஜோடி கட்டியணைத்து முத்தமிட்டுக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் தாவித் மலன் அரைசதம் அடிக்க இங்கிலாந்து வெற்றி பெற்றதோடு, தொடரையும் கைப்பற்றியது.
    தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்தது.

    இந்நிலையில் 2-வது ஆட்டம் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணி பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக பந்து வீச தென்ஆப்பிரிக்காவால் 146 ரன்களே அடிக்க முடிந்தது.

    கேப்டன் டி காக் 30 ரன்களும், வான் டெர் டஸ்சன் 25 ரன்களும், ஜார்ஜ் லிண்டே 29 ரன்களும் அடித்தனர். இங்கிலாந்து அணி சார்பில் ஜாஃப்ரா ஆர்சர் 4 ஓவரில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். அடில் ரஷித் 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

    ஜாஃப்ரா ஆர்சர்

    பின்னர் 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங் செய்தது. ஜேசன் ராய் 14 ரன்களும், ஜோஸ் பட்லர் 22 ரன்களும் அடித்தனர்.

    3-வது வீரராக களம் இறங்கிய தாவித் மலன் 40 பந்தில் 55 ரன்களும், கேப்டன் மோர்கன் 17 பந்தில் 26 ரன்களும் அடிக்க இங்கிலாந்து 19.5 ஓவரில் 147 ரன்கள் அடித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.
    இந்திய அணி கேப்டன் விராட் கோலி கடந்த 24 இன்னிங்சில் சதம் அடிக்க முடியாமல் திணறி வருகிறார்.
    இந்திய அணி கேப்டன் விராட் கோலி. உலகின் தலைசிறந்த கிரிக்கெட் பேட்ஸ்மேனாக கருதப்படுகிறார். டெஸ்டில் 27 சதம், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 43 சதம் என 70 சதங்கள் விளாசியுள்ளார். அதிக சதம் அடித்துள்ள சச்சின் தெண்டுல்கர் சாதனையை விராட் கோலி முறியடிப்பார் எனக் கருதப்படுகிறது.

    ஒரு தொடரில் ஒரு போட்டியிலாவது சதம் அடித்து விடுவார். ஆனால் கடந்த 24 ஒருநாள் போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் உள்ளார். இன்றைய போட்டியில் 87 பந்தில் 89 ரன்கள் அடித்து 11 ரன்னில் சதத்தை தவறவிட்டார்.

    இன்றைய போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் இந்தியா இருநாடுகளுக்கு இடையிலான போட்டியில் 2-வது முறையாக தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இதற்கு முன் 2015- 2016-ல் தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக ஐந்து போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்தது.

    விராட் கோலி 24 இன்னிங்சில் சதம் அடித்ததில்லை. 24 இன்னிங்சில் 839 ரன்களே அடித்துள்ளார். சராசரி 39.95 ஆகும். இதில் 7 முறை அரைசதம் அடித்துள்ளார். ஆனால் அதை சதமாக மாற்ற முடியவில்லை. விராட் கோலி சராசரியாக 6.6 இன்னிஸ்க்கு ஒரு சதம் அடித்துள்ளார்.

    இந்தத் தொடருக்கு முன் நியூசிலாந்துக்கு எதிராகவும் இந்தியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கும் எதிராக சதம் அடித்ததில்லை.
    பார்முலா ஒன் கார் பந்தயத்தின்போது சுவிஸ் வீரர் கார் திடீரென திப்பெடித்து எரிந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
    பார்முலா-1 கார் பந்தயத்தில் பஹ்ரைன் கிராண்ட் பிரி இன்று நடைபெற்றது. போட்டி தொடங்கியதும் கார்கள் சீறிப் பாய்ந்தன. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோமைன் க்ரோஸ்ஜீன் பிரான்ஸின் ஹாஸ் சார்பில் கலந்து கொண்டார்.

    இவரது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் இருந்து சுற்றில் மோதியது. மோதியவுடன் யாரும் எதிர்பார்க்காத நிலையில் வெடி விபத்து ஏற்பட்டதுபோல் கார் தீப்பிடித்து எரிந்தது. போட்டியை லைவ்-ஆக பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சியானது.

    ஆனால் ரொமைன் க்ரோஸ்ஜீன் எரிந்து கொண்டிருந்த காரில் இருந்து சர்வசாதரணமாக வெளியேறினார். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கையிலும், மூட்டிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.

    கார் தீப்பிடித்ததை தொடர்ந்து போட்டி உடனடியாக நிறுத்தப்பட்டது.
    சிட்னியில் நடைபெற்ற 2-வது போட்டியின்போது பீல்டிங் செய்த டேவிட் வார்னருக்கு காயம் ஏற்பட்டதால், கடைசி போட்டியில் விளையாடுவது சந்தேகம் என பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. 390 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்தது. 6-வது ஓவரின்போது தவான் மிட்ஆஃப் திசையில் அடித்த பந்தை டேவிட் வார்னர் டைவ் அடித்து பிடிக்க முயன்றார். அப்போது இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டதால் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். நாளை காலை ஸ்கேன் செய்து பார்த்த பின்னர்தான் காயத்தின் வீரியம் குறித்து தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போட்டி முடிந்த பின் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறுகையில் ‘‘எல்லா நேரங்களிலும் 300 ரன்களுக்கு மேல் அடிப்பது சிறந்தது. தொடர்ச்சியாக இரண்டு வெற்றி பெற்று தொடரை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. டேவிட் வார்னரின் உடற்தகுதி குறித்து எந்த ஐடியாவும் இல்லை. அவர் அணியில் இடம் பெறுவது குறித்து நான் நினைக்கவில்லை. தொடக்க வீரராக அவர் விளையாடியது நம்பமுடியாத வகையில் இருந்தது. அதன்பின் ஸ்மித் இரண்டு போட்டிகளிலும் அட்டகாசம் செய்தார். ஹென்ரிக்ஸ் அதிக அளவில் பந்து மாற்றி மாற்றி வீசினார்’’ என்றார்.

    முதல் போட்டியில் அரைசதம் அடித்த டேவிட் வார்னர், இன்று நடைபெற்ற 2-வது போட்டியில் 83 ரன்கள் அடித்தார்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது போட்டியில் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டதை அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    சிட்னியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 51 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. அத்துடன் தொடரையும் கைப்பற்றியது. விராட் கோலி, கேஎல் ராகுல் அரைசதம் அடித்தாலும் அணியை வெற்றி நோக்கி கொண்டு செல்ல முடியவில்லை.

    தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில் ‘‘ஆஸ்திரேலிய வீரர்கள் எங்களை முழுமையாக வெளியேற்றி விட்டனர். நாங்கள் பந்து வீச்சில் மோதுமான அளவிற்கு ஆதிக்கம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. சரியான இடத்தில் பந்தை ஹிட் செய்ய முடியவில்லை. அவர்கள் வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ளனர். அங்குள்ள கண்டிசன் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

    மிகப்பெரிய இலக்கு என்பதால் ஒன்றிரண்டு விக்கெட்டுகள் ரன்ரேட்டை உயர்த்த வேண்டிய நிலையில் இருந்ததால், நாங்கள் அடித்து விளையாட வேண்டிய நிலையில் விளையாடினோம். அவர்கள் அதை சாதகமாக எடுத்துக் கொண்டு பீல்டிங் அமைத்து விட்டனர்.

    ஹர்திக் பாண்ட்யா பந்து வீசியபோது சிறந்ததாக உணர்கிறார். முதலில் ஒன்றிரண்டு ஓவர்கள்தான் கொடுக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால், சில ஓவர்கள் கூடுதலாக வீசினார். ஆஃப்-கட்டர்ஸ் போன்ற பந்துகளை வீசவில்லை. ராகுல் அல்லது ஷ்ரேயாஸ் அய்யர் நீண்ட நேரம் விளையாடியிருந்தால் (அதாவது அதிரடியாக) ஹர்திக் பாண்ட்யாவுடன் சேஸிங் எட்ட வாய்ப்பாக இருந்திருக்கும்’’ என்றார்.
    இங்கிலாந்து கால்பந்து அணியின் கேப்டனும், தலைசிறந்த வீரருமான ஹாரி கேன் கிரிக்கெட் விளையாடுவது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.
    இங்கிலாந்து கால்பந்து அணியின் கேப்டன் ஹாரி கேன். இவர் பிரிமீயர் லீக் கால்பந்தில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்காக விளையாடி வருகிறார்.

    இவர் டுவிட்டரில் பதிவு செய்யும் சில பதிவுகளுக்கு இந்திய அணி கேப்டன் விராட் கொலி பதில் அளிப்பது உண்டு. அதேபோன்று விராட் கோலி பதிவிடுவதற்கு ஹாரி கேனும் பதில் அளிப்பது உண்டு.

    இந்த நிலையில் ஹாரி கேன் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை டுவிட்டர் வெளியிட்டுள்ளார். அதோடு மட்டுமல்லாமல், டி20 போட்டியின் வெற்றிக்கான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக கருதுகிறேன். அடுத்த சீசனில் ஆர்சிபியில் இடம் கிடைக்குமா? என விராட் கோலியையும், ஆர்சிபி அணியையும் டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

    இதற்கு பதில் அளித்த விராட் கோலி ‘‘சிறந்த திறமை. நாங்கள் உங்களை கவுன்ட்டர் அட்டாக்கிங் பேட்ஸ்மேனாக பெறலாம் ஹாரிகேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
    சிட்னியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இமாலய இலக்கை எட்ட முடியாமல் இந்தியா தோல்வியை சந்தித்ததுடன் தொடரையும் இழந்தது.
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் நவ்தீப் சைனி 7 ஓவரில் 70 ரன்களும், பும்ரா 10 ஓவரில் 79 ரன்களும், முகமது ஷமி 9 ஓவரில் 73 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.

    ஆஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டீவ் ஸ்மித் 64 பந்தில் 104 ரன்களும், டேவிட் வார்னர் 83 ரன்களும், ஆரோன் பிஞ்ச் 60 ரன்களும், மார்னஸ் லாபஸ்சேன் 70 ரன்களும், மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 29 பந்தில் 63 ரன்களும் அடித்தனர்.

    பின்னர் 390 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. மயங்க் அகர்வால், ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அகர்வால் 26 பந்தில் 28 எடுத்து ஆட்டமிழந்தார். தவான் 30 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து விராட் கோலி உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. அடித்து விளையாட நினைக்கும்போது 38 ரன்னில் வெளியேறினார் ஷ்ரேயாஸ் அய்யர்.

    4-வது விக்கெட்டுக்கு விராட் கோலி உடன் கேஎல் ராகுல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. விராட் கோலி சதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார். ஆனால் 35-வது ஓவரின் 5-வது பந்தில் 89 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
    விராட் கோலி

    அப்போது இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்திருந்தது, கேஎல் ராகுல் 66 பந்தில் 76 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 28 ரன்களும், ஜடேஜா 24 ரன்களும் அடிக்க இந்தியாவால் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்களே அடித்தது.

    இதனால் ஆஸ்திரேலியா 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
    இந்திய அணி சேஸிங் செய்யும்போது டோனி போன்ற ஒரு வீரர் தேவை என மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.
    சிட்னி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி நிர்னையத்த 375 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் மட்டுமே எடுத்த்து. இதனால் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதுகுறித்து கருத்து தெரிவித்த வெஸ்ட்இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மைக்கேல் ஹோல்டிங் கூறுகையில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டோனி இல்லாமல் தடுமாறுவது எனக்கு உறுதியாகத் தெரியும். டோனி இருந்தபோது இந்திய அணி சிறப்பாகச் சேசிங் செய்தது. டாஸ் வெல்ல வேண்டும் என்ற பயம் அவர்களுக்கு இல்லை.

    தற்போதைய அணியிலும் சிறந்த பேட்டிங் வரிசை உள்ளது. சில திறமையான வீரர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதைப் பார்க்க முடிந்தது. ஆனாலும், டோனி மாதிரி ஒரு வீரர் அணிக்குத் தேவைப்படுகிறார். அவருடைய திறமை என்னவென்று அவருக்குத் தெரியும். 

    அதேபோல, இலக்கை எப்படி எட்டவேண்டும் என்பதும் அவருக்குத் தெரியும். அவருடன் யார் பேட்டிங் செய்தாலும், அவர்களுடன் சகஜமாகப் பேசி அவர்களுக்கு உதவுவார். ரன் சேசிங்கில் டோனி கைதேர்ந்தவர். விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு டோனியைப் போன்றதொரு வீரர் அவசியம்.

    சேஸிங் செய்யும் டோனியிடம் பயத்தை பார்க்க முடியாது. அவருடைய திறமை அவருக்கும் தெரியும். சேஸிங் எப்படி செய்ய வேண்டும் என்று அவருக்குத் தெரியும். யார் அவருடன் பேட்டிங் செய்தாலும் அவர்களுக்கு உதவி செய்வார். சிறந்த பேட்டிங் அணிதான். ஆனாரல், சேஸிங் செய்யும்போது டோனி ஸ்பெஷசல் மேன்” என்றார்.
    வர்ணனை செய்யும்போது நவ்தீப் சைனி தந்தை இறந்ததாக தவறுதலாக கூறியதற்கு ஆடம் கில்கிறிஸ்ட் மன்னிப்பு கேட்டுள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி நேற்று முன்தினம் சிட்னியில் நடைபெற்றது. இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி இடம் பிடித்திருந்தார்.

    ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் நேரடி வர்ணனை செய்து கொண்டிருந்தார். அப்போது நவ்தீப் சைனியைப் பார்த்து தந்தை இறந்த போதிலும், சொந்த நாடு திரும்ப விரும்பாமல் அணிக்காக விளையாடுவேன் எனக் கூறிய தைரியமான இதயத்தை கொண்டவர் என்றார்.

    நியூசிலாந்து அணி வீரர் மெக்கிளேனகன், இறந்தது நைவ்தீப் சைனி தந்தை அல்ல. முகமது சராஜ் தந்தை என கில்கிறிஸ்டுக்கு தெரிவித்தார். தனது தவறை புரிந்து கொண்ட ஆடம் கில்கிறஸ் நவ்தீப் சைனி மற்றும் முகமது சிராஜ் ஆகியோரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன் முகமது சிராஜ் தந்தை காலமானார். விரும்பினால் நாடு திரும்பலாம் என முகமது சிராஜிக்கு பிசிசிஐ அனுமதி அளித்தது. ஆனால் முகமது சிராஜ் இந்தியா திரும்ப மறுத்துவிட்டார்.
    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பெண்கள் பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட்டில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிட்னி தண்டர்.
    ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி நேற்று சிட்னியில் நடைபெற்றது. இதில் சிட்னி தண்டர் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி, சிட்னி தண்டர் வீராங்கனைகளின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்களே அடித்தது. கேதரின் அதிகபட்சமாக 22 ரன்கள் அடித்தார். சிட்னி தண்டர் அணி சார்பில் இஸ்மாய்ல், ஷமி ஜான்சன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் 87 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் சிட்னி தண்டர் களம் இறங்கியது. 13.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் அடித்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
    சிட்னியில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் (83), ஆரோன் பிஞ்ச் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

    அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக விளையாடி 64 பந்தில் 14 பவுண்டரி, 2 சிக்சருடன் 104 ரன்கள் விளாசினார். 62 பந்தில் சதம் அடித்தார். ஏற்கனவே நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியிலும் 62 பந்தில் சதம் அடித்து அதிகவேகமாக சதம் அடித்த 3-வது வீரர் என்ற சாதனையை பதிவு செய்திருந்தார்.

    இந்த நிலையில் இன்றும் 62 பந்தில் சதம் அடித்து சாதனைப் படைத்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக ஸ்மித்தின் பேட்டிங் மிகவும் அபாரமாக உள்ளது. தற்போது அடுத்தடுத்து இரண்டு சதம் விளாசியுள்ளார். இந்தியாவுக்கு எதிராக கடைசி ஐந்து இன்னிங்சில் 69, 98, 131, 105, 104 ரன்கள் விளாசியுள்ளார்.

    இந்தியா என்றாலே அபாரமான பேட்டிங் திறமையை ஸ்மித் வெளிக்காட்டி வருகிறார்.
    ×