search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பார்முலா ஒன்"

    பார்முலா 1 கார் பந்தயத்தின் இத்தாலி கிராண்ட் ப்ரிக்ஸில் மெர்சிடெஸ் வீரர் லெவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார். #Hamilton
    பார்முலா 1 கார் பந்தயம் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றன. இன்று இத்தாலி கிராண்ட் ப்ரிக்ஸ் நடைபெற்றது. இதில் முன்னணி வீரரும், மெர்சிடெஸ்  அணியின் வீரரும் ஆன லெவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார்.

    பெர்ராரி வீரர் கே. ரெய்க்கொனன் 2-வது இடம் பிடித்தார். மற்றொரு மெர்சிடெஸ் வீரர் வி. போட்டாஸ் 3-வது இடம் பிடித்தார். பெர்ராரி வீரர் செபஸ்டியான் வெட்டல் 4-வது இடத்தையே பிடித்தார்.



    இதுவரை முடிந்துள்ள 14 கிராண்ட் ப்ரிக்ஸ் முடிவில் லெவிஸ் ஹாமில்டன் 256 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார். செபஸ்டியான் வெட்டல் 226 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், கிமி ரெய்க்கொனன் 164 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.
    சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கிய நிலையில், அந்நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் பார்முலா ஒன் காரை ஓட்டி அசத்தியுள்ளார். #SaudiArabia #DrivindBanEnds #FormulaOne #AbuDhabiGrandPrix #AseelAlHamad

    ரியாத்:

    இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் ‘ஷரியத்’ சட்டம் கடை பிடிக்கப்படுகிறது. எனவே அங்கு பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. அங்கு பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1990-ம் ஆண்டுகளில் இருந்தே பெண்கள் உரிமை சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மீறி கார் ஓட்டிய பெண்கள் கைது செய்யப்பட்டனர். அபராதமும் விதிக்கப்பட்டது.

    இதற்கிடையே, மன்னர் சாலமனின் இளைய மகனும் பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, நீண்ட கால கோரிக்கையை ஏற்று பெண்கள் கார் ஓட்ட விதித்திருந்த தடையை  சவுதி அரேபிய அரசு நீக்கியது. அதை தொடர்ந்து 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

    சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இன்று முதல் பெண்கள் கார் ஓட்ட ஆரம்பித்துள்ளனர். இதனால் அவர்கள் மன மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்களுக்கு இது தன்னம்பிக்கையை கொடுக்கும் விஷயமாக கருதப்படுகிறது.



    இந்நிலையில், இன்று அபுதாபியில் பார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ் கார்பந்தயம் நடைபெற உள்ளது. சவுதி அரேபியாவில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள வரலாற்று சிறப்புமுக்க சட்டத்தை குறிக்கும் வகையில், இந்த பந்தயம் தொடங்கும் முன்னர், சவுதி அரேபியா கார்பந்தய அமைப்பின் முதல் பெண் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ள அசீல் அல்-ஹமாத் பார்முலா ஒன் காரை ஓட்டினார். அவர் ஓட்டிய கார் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற அபுதாபி கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில் முதலிடம் பிடித்த கிமி ராய்க்கோனென் பயன்படுத்திய காராகும். 



    முன்னதாக சவுதி அரேபியா இளவரசர் அல்-வாலீத் பின் தலால் தனது மகள் கார் ஓட்டும் வீடியோவை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.  #SaudiArabia #DrivindBanEnds
    ×