என் மலர்
செய்திகள்

ஹாரி கேன், விராட் கோலி
எனக்கு இடம் கிடைக்குமா? எனக்கேட்ட இங்கிலாந்து கால்பந்து அணி கேப்டனுக்கு விராட் கோலியின் பதில்
இங்கிலாந்து கால்பந்து அணியின் கேப்டனும், தலைசிறந்த வீரருமான ஹாரி கேன் கிரிக்கெட் விளையாடுவது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இங்கிலாந்து கால்பந்து அணியின் கேப்டன் ஹாரி கேன். இவர் பிரிமீயர் லீக் கால்பந்தில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்காக விளையாடி வருகிறார்.
இவர் டுவிட்டரில் பதிவு செய்யும் சில பதிவுகளுக்கு இந்திய அணி கேப்டன் விராட் கொலி பதில் அளிப்பது உண்டு. அதேபோன்று விராட் கோலி பதிவிடுவதற்கு ஹாரி கேனும் பதில் அளிப்பது உண்டு.
இந்த நிலையில் ஹாரி கேன் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை டுவிட்டர் வெளியிட்டுள்ளார். அதோடு மட்டுமல்லாமல், டி20 போட்டியின் வெற்றிக்கான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக கருதுகிறேன். அடுத்த சீசனில் ஆர்சிபியில் இடம் கிடைக்குமா? என விராட் கோலியையும், ஆர்சிபி அணியையும் டேக் செய்து பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்த விராட் கோலி ‘‘சிறந்த திறமை. நாங்கள் உங்களை கவுன்ட்டர் அட்டாக்கிங் பேட்ஸ்மேனாக பெறலாம் ஹாரிகேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
Haha good skills mate. Maybe we can get you in as a counter attacking batsman😃👏 @HKanehttps://t.co/rYjmVUkdwO
— Virat Kohli (@imVkohli) November 28, 2020
Next Story






