search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி
    X
    விராட் கோலி

    ஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது போட்டியில் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டதை அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    சிட்னியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 51 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. அத்துடன் தொடரையும் கைப்பற்றியது. விராட் கோலி, கேஎல் ராகுல் அரைசதம் அடித்தாலும் அணியை வெற்றி நோக்கி கொண்டு செல்ல முடியவில்லை.

    தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில் ‘‘ஆஸ்திரேலிய வீரர்கள் எங்களை முழுமையாக வெளியேற்றி விட்டனர். நாங்கள் பந்து வீச்சில் மோதுமான அளவிற்கு ஆதிக்கம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. சரியான இடத்தில் பந்தை ஹிட் செய்ய முடியவில்லை. அவர்கள் வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ளனர். அங்குள்ள கண்டிசன் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

    மிகப்பெரிய இலக்கு என்பதால் ஒன்றிரண்டு விக்கெட்டுகள் ரன்ரேட்டை உயர்த்த வேண்டிய நிலையில் இருந்ததால், நாங்கள் அடித்து விளையாட வேண்டிய நிலையில் விளையாடினோம். அவர்கள் அதை சாதகமாக எடுத்துக் கொண்டு பீல்டிங் அமைத்து விட்டனர்.

    ஹர்திக் பாண்ட்யா பந்து வீசியபோது சிறந்ததாக உணர்கிறார். முதலில் ஒன்றிரண்டு ஓவர்கள்தான் கொடுக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால், சில ஓவர்கள் கூடுதலாக வீசினார். ஆஃப்-கட்டர்ஸ் போன்ற பந்துகளை வீசவில்லை. ராகுல் அல்லது ஷ்ரேயாஸ் அய்யர் நீண்ட நேரம் விளையாடியிருந்தால் (அதாவது அதிரடியாக) ஹர்திக் பாண்ட்யாவுடன் சேஸிங் எட்ட வாய்ப்பாக இருந்திருக்கும்’’ என்றார்.
    Next Story
    ×