என் மலர்
விளையாட்டு


அகமதாபாத்:
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி பகல்-இரவாக உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான அகமதாபாத்தில் உள்ள மொதேரா சர்தார் படேல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. தற்போது இந்த ஸ்டேடியத்துக்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய வீரர்களின் அபாரமாக பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 112 ரன்னில் சுருண்டது. இது இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணியின் 4-வது குறைந்த பட்ச ஸ்கோர் ஆகும்.
தொடக்க வீரர் கிராவ்லி அதிகபட்சமாக 53 ரன் எடுத்தார். அக்ஷர் படேல் மிகவும் சிறப்பாக பந்துவீசி 38 ரன் கொடுத்து, 6 விக்கெட் வீழ்த்தினார். அஸ்வினுக்கு 3 விக்கெட் கிடைத்தது.
பின்னர் விளையாடிய இந்தியா நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 99 ரன் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 57 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் உள்ளார்.
பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் அபாரமாக பந்து வீசிய 2-வது சுழற்பந்து வீரர் என்ற பெருமையை அக்ஷர் படேல் பெற்றார்.
2016-17 பாகிஸ்தானுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீரர் தேவேந்திர பிஷு 49 ரன் கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தியதே சிறந்த பந்து வீச்சாகும். இதற்கு அடுத்த நிலையில் அக்ஷர் படேல் உள்ளார்.
2017-18-ல் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தான் சுழற்பந்து வீரர் யாசிர் ஷா 184 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் சாய்த்தார். இது 3-வது சிறந்த நிலையாகும்.
அக்ஷர் படேல் இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடந்த 2-வது டெஸ்டில் அறிமுகமானார். அந்த டெஸ்டில் 2-வது இன்னிங்சில் 5 விக்கெட் கைப்பற்றினார். தற்போது அவர் தனது 2-வது டெஸ்டில் 6 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.
முதல் 2 டெஸ்டிலும் 5 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றிய 3-வது இந்திய வீரர் அக்ஷர் படேல் ஆவார். இதற்கு முன்பு முகமது நிஷார், நரேந்திர ஹிர்வாணி ஆகியோர் முதல் 2 டெஸ்டிலும் 5 விக்கெட்டுக்குமேல் எடுத்திருந்தனர்.
இந்த டெஸ்டில் சுழற்பந்து வீரர்கள் 9 விக்கெட் (அக்ஷர் படேல் 6+அஸ்வின் 3) கைப்பற்றினார்கள். ஒரு இன்னிங்சில் சுழற்பந்து வீரர்கள் அதிக விக்கெட் கைப்பற்றிய பகல்-இரவு டெஸ்ட் இதுவாகும். இதற்கு முன்பு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் 2-வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து மூலம் 8 விக்கெட்டை கைப்பற்றியது சிறந்ததாக இருந்தது. தேவேந்திர பிஷுவே இந்த 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல கோல்ப் விளையாட்டு வீரரான டைகர் வுட்ஸ் அதிக சாம்பியன் பட்டங்களை வென்று இருப்பதுடன், நீண்ட காலமாக நம்பர் ஒன் இடத்தையும் அலங்கரித்து இருக்கிறார். அத்துடன் கோல்ப் மூலம் அதிகம் சம்பாதிக்கும் வீரராகவும் விளங்கினார்.
45 வயதான டைகர் வுட்ஸ் டெலிவிஷன் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக இந்திய நேரப்படி நேற்று காலை அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்சின் புறநகர் பகுதியில் உள்ள செங்குத்தாக இறங்கும் மலைப்பகுதியில் தனது சொகுசு காரை வேகமாக ஓட்டிச்சென்றார். அப்போது கார் திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ரோட்டின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி பலமுறை உருண்டு கவிழ்ந்தது. இதில் காருக்குள் சிக்கிக் கொண்ட டைகர் வுட்ஸ்க்கு காலில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு வலியால் துடித்தார். அவரது காரும் பலத்த சேதத்துக்கு உள்ளானது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று காரின் கண்ணாடியை உடைத்து டைகர் வுட்சை படுகாயத்துடன் மீட்டனர். அவர் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
நீண்ட நேர அறுவை சிகிச்சை முடிந்து தற்போது டைகர் வுட்ஸ் நல்ல உடல் நிலையுடன் இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பயங்கரமான விபத்தில் சிக்கியும் டைகர் வுட்ஸ் உயிர்தப்பியது அதிசயம் தான் என்று மீட்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விளையாடும் போது அடிக்கடி காயத்தில் சிக்கும் டைகர் வுட்சுக்கு தற்போது 10-வது முறையாக அறுவை சிகிச்சை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பாதிப்பில் இருந்து மீண்டு அவர் களம் திரும்ப முடியுமா? என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.

கிரிக்கெட்டின் மையமாக இந்தியா விளங்குகிறது. எனவே உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் நம்மிடம் இருப்பது பொருத்தமானது. இது இந்தியாவுக்கு புதிய அடையாளத்தை கொடுக்கும்’ என்றார்.
உள்துறை மந்திரி அமித் ஷா கூறுகையில், ‘இந்த மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்படுகிறது. இது அவரது கனவு திட்டம்’ என்றார்.
அதைத் தொடர்ந்து இ்ந்தியா-இங்கிலாந்து இடையிலான பகல்-இரவு டெஸ்ட் போட்டி நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. 100-வது டெஸ்டில் பங்கேற்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய மந்திரி அமித் ஷா ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கினர்.









