என் மலர்
விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் மொத்தம் 11 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்ற சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட் டேல் கூறியதாவது:-
பந்து வீச்சில் இந்த செயல்பாட்டை தொடர விரும்புகிறேன். நான் பேட்டிங்கில் பங்களிப்பை அளிக்காமல் இருக்கும் போது பந்து வீச்சில் சிறப்பாக செயல்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். விக்கெட் வீழ்த்துவதே எனது பலம்.
இந்த ஆடுகளம் கடைசி டெஸ்ட் போட்டிக்கு அதே போன்று இருக்க வேண்டும். அதேபோல் நான் விக்கெட்டுகளையும் எடுக்க விரும்புகிறேன் என்றார்.
அகமதாபாத்:
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 3-வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இப்போட்டி இரண்டு நாட்களிலேயே முடிவுக்கு வந்தது.
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 112 ரன்னும், இந்தியா 145 ரன்னும் எடுத்தன. 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து 81 ரன்னில் சுருண்டது.
இதனால் நிர்ணயிக்கப்பட்ட 49 ரன் இலக்கை இந்தியா விக்கெட் இழப்பின்றி எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் மொத்தம் 30 விக்கெட் வீழ்ந்தன. இதில் 28 விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றினர்.
இந்தியா தரப்பில் அக்சர் பட்டேல் 11 விக்கெட்டும், அஸ்வின் 7 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும், இங்கிலாந்து தரப்பில் ஜாக்லீச் 4 விக்கெட் டும், ஜோரூட் 5 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இந்த நிலையில் அகமதாபாத் மைதான ஆடுகளம் குறித்து முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்துள்ளனர். முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் வி.வி.எஸ். லட்சுமணன் கூறும்போது, டெஸ்ட் போட்டிக்கு ஏற்ற ஆடுகளம் இதுவல்ல. இந்திய அணி கூட இந்த ஆடுகளத்தில் திணறியது என்றார்.
முன்னாள் சுழற்பந்து வீரர் ஹர்பஜன்சிங் கூறும்போது, இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 200 ரன்கள் எடுத்திருந்தால் இந்தியாவும் சிக்கலில் சிக்கி இருக்கும். ஆனால் இது இருதரப்பினருக்கும் ஒரே மாதிரியாக இருந்தது. இந்த ஆடுகளம் டெஸ்ட்டுக்கு ஏற்றதல்ல என்றார்.
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறும்போது, இந்த ஆடுகளத்தை நாம் பார்க்க போகிறோம் என்றால், அது எவ்வாறு இயங்கக்கூடும் என்பதற்கு என்னிடம் பதில் இருக்கிறது. அணிகளுக்கு 3 இன்னிங்சை கொடுங்கள் என்றார்.
கெவின் பீட்டர்சன் (இங்கிலாந்து) கூறும்போது, பேட்ஸ்மேன்களின் திறமை சோதிக்கப்படுவதால் ஒரு போட்டிக்கு இதுபோன்ற ஆடுகளம் இருப்பது நல்லது. ஆனால் இதுபோன்ற ஒரு ஆடுகளத்தை மீண்டும் பார்க்க நான் விரும்பவில்லை. மற்ற வீரர்கள் யாரும் இதை பார்க்க விரும்பவில்லை என்று நினைக்கிறேன். இந்தியாவுக்கு பாராட்டு என்று கூறி உள்ளார்.
ஆனால் இந்திய அணி முன்னாள் கேப்டன் கவாஸ்கர், ஆடுகளத்தை குறை சொல்லவில்லை. அவர் கூறும்போது, இந்த ஆடுகளம் பேட்ஸ்மேன்களின் நோக்கம் மற்றும் பயன்பாடு பற்றி சிந்திக்க வைக்கிறது. இந்த ஆடுகளத்தில் தான் ரோகித் சர்மா மற்றும் ஜாக்கிராவ்லி அரை சதங்கள் அடித்தனர்.
இங்கிலாந்து எப்படி ரன்களை சேர்க்க தவறிவிட்டோம் என்று யோசித்து கொண்டிருந்தது. பந்தை பயன்படுத்திய விதத்தில் அக்சர் பட்டேலை பாராட்ட வேண்டும். அஸ்வின் மற்றும் அக்சர் சிறப்பாக செயல்பட்டனர் என்றார்.
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 400-வது விக்கெட்டை கைப்பற்றினார். சர்வதேச டெஸ்டில் 400 விக்கெட் வீழ்த்திய 16-வது வீரர், இந்திய தரப்பில் 4-வது வீரர் என்ற சிறப்பை அஸ்வின் பெற்றார்.
400 டெஸ்ட் விக்கெட்டுகளை எட்டியது உண்மையில் அற்புதமாக இருக்கிறது. ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது.
3-வது இன்னிங்சில் அக்சர் பட்டேல் அழகாக பந்து வீசினார். நான் லாக்டவுன் காலத்தில் கடுமையாக உழைத்தேன். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது எனது பேட்டிங்கை பற்றி விராட்கோலி, ரவிசாஸ்திரி ஆகியோர் என்னுடன் உரையாடினார்கள்.
எனது பந்து வீச்சில் ஏதோ ஒரு சிறப்பை அவர்கள் கண்டனர். ஐ.பி.எல். போட்டியிலும் எனது பந்து வீச்சு சிறப்பாக இருந்தது என்று நினைக்கிறேன். லாக் டவுன் காலத்தில் சுமார் 7-8 கிலோ எடை குறைத்தேன்.
நான் வயதாகி விட்டேனா என்று எனக்கு தெரியவில்லை. நான் எப்போதும் என்னை மேம்படுத்த விரும்புகிறேன் என்றார்.
கோவா:
7-வது ஐ.எஸ்.எல். (இந்தியன் சூப்பர் லீக்) கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. 11 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.
லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெறும்.
நேற்று வரை 106 ஆட்டங்கள் முடிந்துவிட்டது. இதுவரை ஏ.டி.கே. மோகன் பகான், மும்பை ஆகிய இரண்டு அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இன்னும் நான்கு லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சி உள்ளன.
அரைஇறுதி போட்டிக்கான மற்ற இரண்டு இடங்களுககு கோவா எப்.சி., கவுகாத்தி (நார்த்ஈஸ்ட்), ஐதராபாத் ஆகிய அணிகள் இடையே போட்டி நிலவுகிறது.
இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் கவுகாத்தி - கேரளா அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் கவுகாத்தி அணி வெற்றி பெற்றால் அரைஇறுதிக்கு முன்னேறும். ஒருவேளை தோற்றால் கோவா- ஐதராபாத் அணிகள் மோதும் ஆட்டத்தில் முடிவு காத்திருக்கு வேண்டும்.
கோவா (3-வது இடம்), கவுகாத்தி (4-வது இடம்) தலா 30 புள்ளிகளுடன் உள்ளது. ஐதராபாத் அணி 28 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. லீக் ஆட்டங்கள் வருகிற 28-ந் தேதியுடன் முடிகிறது.








