search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜேக் லீச்"

    • இந்தியா, இங்கிலாந்து இடையில் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
    • முதல் இரண்டு போட்டிகள் முடிந்து இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருக்கிறது.

    இந்தியா, இங்கிலாந்து இடையில் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகள் முடிந்து இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருக்கிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15-ம் தேதி ராஜ்கோட்டில் நடக்க உள்ளது.

    இந்நிலையில் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜேக் லீச் காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் பீல்டிங் செய்யும்போது லீச்க்கு இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது.

    அவருக்கு பதிலாக மாற்று வீரரை இங்கிலாந்து அணி அழைக்கும் திட்டம் இல்லை.

    • முதல் டெஸ்ட் போட்டியில் பீல்டிங் செய்யும்போது காயம் ஏற்பட்டது.
    • காயம் இன்னும் முழுமையாக குணமடையாததால் 2-வது போட்டியில் இருந்து விலகல்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

    2-வது போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர்.

    இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜேக் லீச் காயம் காரணமாக 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

    ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியின்போது பீல்டிங் செய்தபோது அவருக்கு கால் மூட்டில் காயம் ஏற்பட்டது. இருந்தபோதிலும் 2-வது இன்னிங்சில் 10 ஓவர்கள் வீசினார்.

    காயம் குணமடைந்து 2-வது டெஸ்ட் போட்டிக்கு தயாராகி விடுவார் என இங்கிலாந்து அணி நம்பிக்கையில் இருந்தது. ஆனால், 2-வது போட்டியில் அவர் பங்கேற்கமாட்டார் என இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

    32 வயதான அனுபவ வீரரான ஜேக் லீச் இல்லாதது அந்த அணிக்கு பாதகத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

    • ஜூன் 16-ம் தேதி எட்ஜ்பாஸ்டனில் ஆஷஸ் தொடர் தொடங்குகிறது.
    • கடந்த ஆண்டு 46 டெஸ்ட் விக்கெட்டுகளை இவர் கைப்பற்றினார்.

    இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஜேக் லீச், காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    இந்த வார தொடக்கத்தில் அயர்லாந்திற்கு எதிரான ஒரே ஒரு டெஸ்டில் இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் சிறப்பாக பந்து வீசிய லீச், நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் கீழ் இங்கிலாந்து அணியில் எப்போதும் லீச் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு 46 டெஸ்ட் விக்கெட்டுகளை இவர் கைப்பற்றினார்.

    வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரும் வெளியேற்றப்பட்ட நிலையில், லீச்சின் காயம் இங்கிலாந்தின் பந்துவீச்சுத் துறைக்கு பின்னடைவாகும்.

    ஜூன் 16-ம் தேதி எட்ஜ்பாஸ்டனில் ஆஷஸ் தொடர் தொடங்குகிறது.

    சனிக்கிழமையன்று இங்கிலாந்து அறிவித்த முதல் இரண்டு ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட அணியில் அவர் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×