search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெற்றி மகிழ்ச்சியில் நியூசிலாந்து அணி வீரர்கள்
    X
    வெற்றி மகிழ்ச்சியில் நியூசிலாந்து அணி வீரர்கள்

    ஆஸ்திரேலியா போராடி தோற்றது - பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்து 4 ரன்னில் வெற்றி

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    டுனிடின்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.

    இரு அணிகள் இடையே கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 53 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதிய 2-வது 20 ஓவர் போட்டி டுனிடினில் இன்று நடந்தது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 219 ரன் எடுத்தது.

    தொடக்க வீரர் கப்தில் அதிரடியாக விளையாடி 50 பந்தில் 97 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரிகளும், 8 சிக்சர்களும் அடங்கும். கேப்டன் வில்லியம்சன் 35 பந்தில் 53 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்), ஜேம்ஸ் நீசம் 16 பந்தில் 45 ரன்னும் (1 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தனர்.

    பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 215 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து 4 ரன்னில் வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலியா ஒரு கட்டத்தில் 12 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன் என்ற நிலையில் இருந்தது. அப்போது சான்ட்னெர் ஒரே ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.

    இதன்பிறகு ஜோடி சேர்ந்த ஸ்டோனிசும், சாம்சும் அதிரடியாக விளையாடினார்கள்.

    ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவுக்கு 15 ரன் தேவைப்பட்டது. நீசம் வீசிய முதல் பந்தில் சாம்ஸ் 41 ரன்னில் அவுட் ஆனார். 2-வது, 3-வது பந்தில் ஸ்டோனிஸ் ரன் எடுக்கவில்லை. 4-வது பந்தில் அவர் சிக்சர் அடித்தார். 5-வது பந்தில் ஆட்டம் இழந்தார்.

    கடைசி பந்தில் ரிச்சர்ட்சன் பவுண்டரி அடித்தார். ஆஸ்திரேலியா அணியால் கடைசி ஓவரில் 10 ரன்னே அடிக்க முடிந்தது. இதனால் அந்த அணி போராடி தோற்றது.

    ஸ்டோனிஸ் அதிகபட்சமாக 37 பந்தில் 78 ரன் (7 பவுண்டரி, 5 சிக்சர்), சான்ட்னெர் 4 விக்கெட்டும், நீசம் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
    Next Story
    ×