search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோகித் சர்மா
    X
    ரோகித் சர்மா

    ரோகித் சர்மா அரைசதம், முதல்நாள் ஆட்ட முடிவின் கடைசி ஓவரில் விராட் கோலி அவுட்- இந்தியா 99/3

    அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் அடித்துள்ளது.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. பிங்க் பால் டெஸ்ட் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும்.

    ஆனால் ஆடுகளத்தில் இன்று முதல் நாளில் இருந்தே ஸ்பின் பந்து வீச்சு அதிக அளவில் டர்ன் ஆனது. இதை பயன்படுத்தி அக்சார் பட்டேல் 6 விக்கெட்டும், அஷ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 112 ரன்னில் சுருண்டது.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் இணைந்து ரோகித் சர்மா, ஷுப்மான் கில்லை அச்சுறுத்தும் வகையில் பந்து வீசினார். இருந்தாலும் ஷுப்மான் கில் இரண்டு முறை அவுட்டில் இருந்து தப்பினார்.

    இங்கிலாந்து பந்து வீச்சை மாற்றியது. ஜாஃப்ரா ஆர்ச்சரை களம் இறக்கியதும் ஷுப்மான் கில் 11 ரன்னில் அவரது பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்தத புஜாரா யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜேக் லீச் பந்தில் டபிடபிள்யூ ஆக டக்அவுட்டில் ஏமாற்றம் அளித்தார். அப்போது இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்திருந்தது.

    3-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நம்பிக்கையுடன் விளையாடியது. ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். இன்றைய முதல்நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரை ஜேக் லீச் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் விராட் கோலி க்ளீன் போல்டானார். அவர் 27 ரன்கள் சேர்த்தார். ரோகித் சர்மா - விராட் கோலி ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்தது.

    விராட் கோலி போல்டாகிய காட்சி

    கடைசி 4 பந்து மீதமுள்ள நிலையில் ரஹானே களம் இறங்கினார். அவர் மூன்று பந்தை சமாளிக்க ரோகித் சர்மா ஒரு பந்தை சந்தித்தார். இவரும் ஆட்டமிழக்கவில்லை. இதனால் இந்தியா முதல்நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 57 ரன்களுடனும், ரஹானே 1 ரன்னுடனும் களத்தில் உள்ளது.
    Next Story
    ×