என் மலர்
விளையாட்டு

ஐதராபாத்:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் ஐதராபாத்தில் முன்னாள் வீரர் எம்.எல்.ஜெய்சிம்மா நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தற்போதுள்ள அணியே சிறந்த அணியாகும். டெஸ்ட் போட்டியில் வீராட் கோலி தலைமையிலான அணியே மிகச்சிறந்ததாக இருக்கிறது. இதற்கு முன்பு இருந்த அணிகளை விட தற்போதுள்ள அணியே மிகவும் சிறப்பானது.
இந்த அணியை பார்த்தால் ஜெய்சிம்மா பெருமைப்பட்டு இருப்பார்.
கிரிக்கெட் விதிமுறைகளில் தற்போது சீர்திருத்தம் செய்யவேண்டியது அவசியமான ஒன்றாகும். பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ற வகையில்தான் விதிகள் இருக்கிறது. இதனால் அதில் மாற்றம் செய்ய வேண்டும்.
பவுண்டரி எல்லை பகுதியை அதிகரிக்க வேண்டும். பேட்ஸ்மேன்களின் தலைக்கு மேலே சென்றால், பவுண்சர் விதிப்படி கூடுதலாக ஒரு ரன் மற்றும் கூடுதல் பந்து கொடுக்கப்படுகிறது. கடுமையான இந்த விதி பந்துவீச்சாளர்களை பாதிக்கிறது. இதில் மாற்றம் தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.


22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2022) நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் கத்தாரில் நடக்கிறது. இந்த போட்டிக்கான ஐரோப்பிய மண்டல தகுதி சுற்று போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 55 அணிகள் 10 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெறும். 2-வது இடம் பிடிக்கும் 3 சிறந்த அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்று முடிவுகள் மூலம் தகுதி காணும்.
இந்த தகுதி சுற்றில் ‘ஜெ’ பிரிவில் இடம் பிடித்துள்ள 4 முறை சாம்பியனான ஜெர்மனி அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் ருமேனியாவை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் ருமேனியாவில் உள்ள புசாரெஸ்ட் நகரில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் ருமேனியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை தனதாக்கியது. இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் அர்மேனியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை சாய்த்து 2-வது வெற்றியை சொந்தமாக்கியது.
‘டி’ பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் கஜகஸ்தானை தோற்கடித்து முதலாவது வெற்றியை ருசித்தது. பிரான்ஸ் அணி முதலாவது ஆட்டத்தில் உக்ரைனுடன் ‘டிரா’ கண்டு இருந்தது.
மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ், 86-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் போப்ரினை சந்தித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் பாவ்டிஸ்டா அகுட் சரிவில் இருந்து மீண்டு வந்து 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் லெனார்ட் ஸ்டிருப்பை விரட்டியடித்தார். இன்னொரு ஆட்டத்தில் அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் 7-6 (7-5), 7-6 (7-5) என்ற நேர்செட்டில் கனடாவின் பெலிக்ஸ் அஜெர் அலியாசிம்மை வெளியேற்றினார். மற்ற ஆட்டங்களில் பிரான்சிஸ் டியாபோ (அமெரிக்கா), இமில் ரூசுவோரி (பின்லாந்து), டெய்லர் பிட்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் வெற்றியை ருசித்தனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 9-வது இடத்தில் இருப்பவரும், அமெரிக்க ஓபன் முன்னாள் சாம்பியனுமான பியான்கா ஆன்ட்ரீஸ்கு (கனடா) 7-6 (7-4), 6-7 (2-7), 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் அமன்டா அனிசிமோவாவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 2 மணி 44 நிமிடம் அரங்கேறியது.
முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ரஷியாவின் அன்னா காலின்சயாவை தோற்கடித்தார். முதல் செட்டை இழந்த கார்பின் முகுருஜா கடைசி செட்டில் 0-3 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தார். அதன் பிறகு தனது அனுபவத்தின் மூலம் சரிவை சமாளித்து அசத்திய கார்பின் முகுருஜா வெற்றியையும் தனதாக்கினார். இந்த ஆட்டம் 2 மணி 41 நிமிடம் நீடித்தது. 4 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகாவை எதிர்த்து ஆட வேண்டிய செர்பியாவின் நினா சோஜனோவிச் காயம் காரணமாக கடைசி நேரத்தில் விலகினார். இதனால் நவோமி ஒசாகா களம் இறங்காமலேயே 4-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் 4-6, 6-4, 4-6 என்ற செட் கணக்கில் துனிசியாவின் ஆன்ஸ் ஜாபெரிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து நடையை கட்டினார். இதேபோல் 6-வது இடத்தில் உள்ள செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 1-6, 6-4, 4-6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜெசிலா பெகுலாவிடம் வீழ்ந்து ஏமாற்றம் அளித்தார். மற்ற ஆட்டங்களில் எலிசி மெர்டென்ஸ் (பெல்ஜியம்), மரியா சக்காரி (கிரீஸ்) ஆகியோர் வெற்றி கண்டனர்.












