search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வக்கார் யூனிஸ்
    X
    வக்கார் யூனிஸ்

    வக்கார் யூனிஸ் மோசடி செய்து பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்தார்: முகமது ஆசிஃப் குற்றச்சாட்டு

    வேகப்பந்து வீச்சில் தலைசிறந்த வீரராக கருதப்படும் வக்கார் யூனிஸ்க்கு புதிய பந்தில் எப்படி பந்து வீச வேண்டும் எனத் தெரியாது என்று முகமது ஆசிப் குற்றம்சாட்டியுள்ளார்.
    சிறப்பான வகையில் யார்க்கர் வீசக்கூடிய, ரிவர்ஸ் ஸ்விங் செய்யக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிஸ்க்கு கட்டாயம் இடம் உண்டு. 1989 முதல் 2003 வரை தலை சிறந்த வீரராக கருதப்பட்டார். அந்தக் காலக்கட்டத்தில் 87 டெஸ்ட், 262 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 789 விக்கெட்டுக்கள் சாய்த்துள்ளார்.

    பாகிஸ்தானைச் சேர்ந்த மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆசிஃப். இங்கிலாந்து லண்டனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது மேட்ச் பிக்சிங்சில் ஈடுபட்டதால் தண்டனை பெற்றார். அத்துடன் அவரது சர்வதேச கிரிக்கெட் முடிவுக்கு வந்தது.

    இந்த நிலையில் வக்கார் யூனிஸ்க்கு எப்படி பந்து வீச வேண்டும் என்பது தெரியாது என்று முகமது ஆசிஃப் குற்றம்சாட்டியுள்ளார்.

    முகமது ஆசிஃப்

    இதுகுறித்து முகமது ஆசிஃப் கூறுகையில் ‘‘பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்த வக்கார் யூனிஸ் மோசடியை கையாண்டார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் பெரும்பாலான வருடங்களில் புதிய பந்தில் எப்படி பந்து வீச வேண்டும் என்று அவருக்குத் தெரியாது. அவரது இறுதிக் கால கிரிக்கெட்டில் எப்படி பந்து வீச வேண்டும் என்பதை சற்று தெரிந்து கொண்டார்.

    ரிவர்ஸ் ஸ்விங்கில் ஜாம்பவான் என்று மக்களுக்கு தெரியும். ஆனார், சிறந்த முறையில் ரிவர்ஸ் ஸ்விங் செய்யும் ஒரு பந்து வீச்சாளரை கூட அவர் தயார் செய்ததில்லை. இவரைப் போன்றவர்கள் 20 வருடங்களாக பயிற்சியாளராக உள்ளனர். ஆனால், அவர்கள் தரமான பந்து வீச்சாளர்களை உருவாக்கவில்லை. காம்பினேசனை உருவாக்குவதில் அவர்களிடம் குறைபாடு இருந்தது. நாம் அதிக எண்ணிக்கையில் பந்து வீச்சாளர்களை வைத்துள்ளோம். ஆனால் தரமானவர்கள் இல்லை’’ என்றார்.
    Next Story
    ×