search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரிஷப் பண்ட்
    X
    ரிஷப் பண்ட்

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்

    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் ஷ்ரேயாஸ் அய்யர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் புனே நகரில் நடைபெற்றது. கடந்த 23-ந்தேதி நடைபெற்ற முதல் போட்டியில் பீல்டிங் செய்யும்போது ஷ்ரேயாஸ் அய்யரின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

    இதனால் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான மற்ற இரண்டு போட்டிகளில் இருந்து விலகியதோடு, ஒட்டுமொத்த 2021 ஐபிஎல் சீசனில் இருந்து விலகியுள்ளார்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற 9-ந்தேதி சென்னையில் தொடங்குகிறது. ஷ்ரேயாஸ் அய்யர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். இதனால் அடுத்த கேப்டன் யார்? என்ற கேள்வி எழுந்தது. தவான், ரகானே, அஷ்வின் போன்றோர் போட்டியில் இருந்தனர்.

    ஷ்ரேயாஸ் அய்யர் காயம்

    இந்த நிலையில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ரிஷப் பண்ட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் அபாரமான  ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
    Next Story
    ×