search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவாஸ்கர்
    X
    கவாஸ்கர்

    மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடிப்பது மிகவும் கடினம்: சுனில் கவாஸ்கர்

    ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்று அசைக்க முடியாத அணியாக திகழ்கிறது.
    ஐபிஎல் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா, பும்ரா, குருணால் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு போன்ற வீரர்களை கொண்ட மும்பை இந்தியன்ஸ் பலமான அணியாக திகழ்கிறது. இதுவரை ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

    2021 ஐபிஎல் சீசன் வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ஆர்சிபி அணிகள் மோதுகின்றன.

    இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்துவது கடினமானது என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் ‘‘மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்துவது கடினம். அந்த அணியில் உள்ள வீரர்கள் சிறந்த பார்மில் உள்ளனர். இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் போன்றோர் பேட்டிங் செய்ததை பார்த்தோம். ஹர்திக் பாண்ட்யா பந்து வீசுவது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டுமல்ல, இந்திய அணிக்கும் முக்கியமானது. அவர் டெஸ்ட் போட்டிக்கும் தயாராகி வருகிறார் என்பதை காட்டுகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு இன்னும் நேரம் இருக்கிறது. அவர் மீண்டும் பந்து வீசும் நிலைக்கு வந்தால், இரண்டு அணிகளுக்கும் நல்லது.

    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் பிடித்த மும்பை அணி வீரர்கள் சிறந்த பார்மில் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளனர். சாஹல், குல்தீப் யாதவ் பந்து அடி வாங்கியது. ராஜஸ்தான் அணியில் யாருமில்லை. அதனால் அவர் எந்த மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பது தெரியாது’’ என்றார்.
    Next Story
    ×