search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டீம் இந்தியா
    X
    டீம் இந்தியா

    12-ல் 10 முறை டாஸ் தோல்வி: இருந்தாலும் கெத்து காட்டிய டீம் இந்தியா

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 எனவும், டி20 தொடரை 3-2 எனவும், ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 எனவும் இந்தியா வென்று அசத்தியுள்ளது.
    பொதுவாக விளையாட்டில் திறமையை பொறுத்துதான் வெற்றித் தோல்வி அமையும் என்பார்கள். ஆனால் கிரிக்கெட்டில் 50 சதவீதம் வெற்றிக்கு டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்றால் அது மிகையாகாது. குறிப்பாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பேட்டிங் செய்வற்கு மிகவும் சாதகமான ஆடுகளத்திலும், இரவு பனிப்பொழிவில் பந்து வீசுவது கடினம் என்பதாலும் இந்திய ஆடுகளத்தில் பகல்-இரவு போட்டிகளில் டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்யும். இப்படிபட்ட சூழ்நிலையில் சேஸிங் செய்வது எளிதானதாகும்.

    அதேபோல் டெஸ்ட் போட்டியில் இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். 3-வது நாட்களுக்குப் பிறகு சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வது எளிதான காரியம் அல்ல. இதனால் டாஸ் வென்ற அணி கண்ணை மூடிக்கொண்டு பேட்டிங் தேர்வு செய்யும்.

    டீம் இந்தியா

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து டாஸ் வென்றது. அந்த அணி முதல் இன்னிங்சில் ரன்கள் குவித்து வெற்றியும் பெற்றது 2-வது போட்டியின்போது ஆடுகளம் முதல் நாளில் இருந்தே டர்ன் ஆனது. இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று போட்டியையும் வென்றது.

    3-வது போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்றது. ஆனால் இந்திய பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசி முதல் இன்னிங்சில் இங்கிலாந்தை சுருட்டினர். இந்த போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அனைவரும் ஆச்சர்யத்திற்கு உள்ளாகினர்.

    கடைசி போட்டியிலும் இந்தியா டாஸ் தோல்வி. ஆனால் திறமையை நிரூபித்து மீண்டும் இங்கிலாந்தை குறைந்த ரன்னில் சுருட்டி அபார வெற்றி பெற்றதுடன் தொடரையும் 3-1 எனக் கைப்பற்றியது.

    அதன்பின் ஐந்து டி20 போட்டிகள் நடைபெற்றது. முதல் போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று 2-வது பேட்டிங் தேர்வு செய்து வெற்றி பெற்றது. அதன்பின் 2-வது போட்டியில் விராட் கோலி டாஸ் வென்று பீல்டிங் கேட்டு 2-வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

    டீம் இந்தியா

    அதன்பின் 3-வது, 4-வது, 5-வது என மூன்று போட்டிகளில் இந்தியா டாஸ் தோற்றது. ஆனால் திறமையை வெளிப்படுத்தி மூன்றில் இரண்டை வென்று தொடரை 3-2 எனக் கைப்பற்றியது.

    மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மூன்றிலும் விராட் கோலி டாஸ் தோற்றார். ஆனால் முதலில் சிறப்பாக பேட்டிங் செய்ததுடன், சிறப்பாக பந்து வீசி தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. இதன்மூலம் டாஸ் நமது கையில் இல்லை. திறமையை நிரூபித்தால் வெற்றி நமக்கே என்பதை இந்திய கிரிக்கெட் அணி செய்து காட்டியுள்ளது.
    Next Story
    ×