search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுனில் கவாஸ்கர்
    X
    சுனில் கவாஸ்கர்

    இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தற்போதுள்ள அணியே சிறந்தது- கவாஸ்கர்

    கிரிக்கெட் விதிமுறைகளில் தற்போது சீர்திருத்தம் செய்யவேண்டியது அவசியமான ஒன்றாகும். பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ற வகையில்தான் விதிகள் இருக்கிறது.

    ஐதராபாத்:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் ஐதராபாத்தில் முன்னாள் வீரர் எம்.எல்.ஜெய்சிம்மா நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தற்போதுள்ள அணியே சிறந்த அணியாகும். டெஸ்ட் போட்டியில் வீராட் கோலி தலைமையிலான அணியே மிகச்சிறந்ததாக இருக்கிறது. இதற்கு முன்பு இருந்த அணிகளை விட தற்போதுள்ள அணியே மிகவும் சிறப்பானது.

    இந்த அணியை பார்த்தால் ஜெய்சிம்மா பெருமைப்பட்டு இருப்பார்.

    கிரிக்கெட் விதிமுறைகளில் தற்போது சீர்திருத்தம் செய்யவேண்டியது அவசியமான ஒன்றாகும். பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ற வகையில்தான் விதிகள் இருக்கிறது. இதனால் அதில் மாற்றம் செய்ய வேண்டும்.

    பவுண்டரி எல்லை பகுதியை அதிகரிக்க வேண்டும். பேட்ஸ்மேன்களின் தலைக்கு மேலே சென்றால், பவுண்சர் விதிப்படி கூடுதலாக ஒரு ரன் மற்றும் கூடுதல் பந்து கொடுக்கப்படுகிறது. கடுமையான இந்த விதி பந்துவீச்சாளர்களை பாதிக்கிறது. இதில் மாற்றம் தேவை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×