என் மலர்tooltip icon

    விளையாட்டு

    2018-ம் ஆண்டு முதல் இலங்கை அணிக்கு தினேஷ் சண்டிமால், மேத்யூஸ், மலிங்கா, கருனரத்னே, குசல் பெரேரா ஆகியோர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

    இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான தொடரில் இலங்கை அணிக்கு குசல் பெரேராவுக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் தசுன் ‌ஷனகா கேப்டனாக நியமிக்கப்பட உள்ளார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதையடுத்து ஒப்பந்தத்தில் உள்ள 30 வீரர்களில் 29 பேர் கையெழுத்திட்டார்கள். முன்னாள் கேப்டன் மேத்யூஸ் தனிப்பட்ட காரணங்களால் இந்திய தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வீரர்கள் பெரும் சம்பளத்தை விட தங்களுக்கு குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வீரர்கள் அதிருப்தி தெரிவித்தனர். ஆனால் அதை ஏற்க மறுத்த கிரிக்கெட் வாரியம் கையெழுத்திட கடந்த 8-ந் தேதி வரை காலக்கெடு விதித்தது.

    முதல் ஒருநாள் போட்டி வருகிற 13-ந் தேதி நடக்கிறது. இந்தியாவுக்கு எதிரான போட்டி தொடரில் விளையாடும் இலங்கை அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

    முன்னதாக இலங்கை வீரர்களுக்கும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கும் இடையே ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. குசல் பெரேரா கடந்த மே மாதம் இலங்கையின் ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் வங்காளதேசம் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இலங்கை விளையாடியது.

    சமீபத்திய இங்கிலாந்து தொடரில் இலங்கை ஒரு வெற்றிகூட பெறவில்லை. மேலும் வீரர்கள்- கிரிக்கெட் வாரியத்துக்கு இடையே ஏற்பட்ட ஊதிய ஒப்பந்த பிரச்சினையில் அவர் முந்திய பங்கு வகித்ததாக கருதப்படுகிறது.

    இதனால் அவருக்கு பதில் வேறு ஒருவரை கேப்டனாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதில் 29 வயதான ஆல்-ரவுண்டர் தசுன் ‌ஷனகா கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது. அவர் கேப்டனாக பொறுப்பேற்றால் கடந்த 4 ஆண்டுகளில் இலங்கை அணிக்கு நியமிக்கப்பட்ட 6-வது கேப்டனாக இருப்பார். 2018-ம் ஆண்டு முதல் இலங்கை அணிக்கு தினேஷ் சண்டிமால், மேத்யூஸ், மலிங்கா, கருனரத்னே, குசல் பெரேரா ஆகியோர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதிப் பெற்றுள்ளனர்.
    புதுடெல்லி:

    மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நடக்கிறது.

    இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதிப் பெற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

    வில்வித்தை, தடகளம், பேட்மின்டன், குத்துச் சண்டை, குதிரையேற்றம், வாள்வீச்சு, கோல்ப், ஜிம்னாஸ்டிக், ஜூடோ, துடுப்பு படகு, பாய்மரப் படகு, துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பளு தூக்குதல், மல்யுத்தம் ஆகிய 18 விளையாட்டுகளில் இந்தியா பங்கேற்கிறது.

    இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள்- வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி 13-ந்தேதி கலந்துரையாடுகிறார்.

    அன்று மாலை 5 மணிக்கு காணொலி காட்சி மூலம் நடைபெறும் கலந்துரையாடலில் வீரர்கள்- வீராங்கனைகளுடன் மோடி பேசுகிறார். அப்போது அவர்களை ஊக்கப்படுத்த உள்ளார்.

    மேலும் ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்ல வீரர்கள் - வீராங்கனைகளுக்கு வாழ்த்தும், ஆதரவும் தெரிவிக்கிறார்.
    ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்டில் மக்மதுல்லா - தஸ்கின் ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்தது.
    ஹராரே:

    வங்காளதேசம்-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் நடந்து வருகிறது. 

    முதலில் பேட் செய்த வங்காளதேச அணி தொடக்க நாளில் 8 விக்கெட்டுக்கு 294 ரன்கள் எடுத்து இருந்தது. லித்தன் தாஸ் 95 ரன்னிலும், கேப்டன் மொமினுல் 70 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். மக்முதுல்லா (54 ரன்), தஸ்கின் அகமது (13 ரன்) களத்தில் இருந்தனர்.

    இரண்டாவது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இருவரும் சிறப்பாக செயல்பட்டு அணியின் ஸ்கோரை வலுவாக உயர்த்தினார்கள். 

    முதல் அரைசதத்தைக் கடந்த தஸ்கின் அகமது 75 ரன்னில் வெளியேறினார். 9-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 191 ரன்கள் திரட்டியது. டெஸ்ட் போட்டியில் இந்த விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட 2-வது அதிகபட்ச ரன் இதுவாகும்.

    அரை சதமடித்த தஸ்கின்

    இறுதியில், வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 468 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. 5-வது சதத்தைப் பூர்த்தி செய்த மக்முதுல்லா 150 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

    ஜிம்பாப்வே சார்பில் முசாராபானி 4 விக்கெட்டும், டிரிபானோ, நியுவாச்சி தலா  2 விக்கெட் வீழ்த்தினர். 

    இதையடுத்து,  முதல் இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே அணி ஆட்ட நேரம் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்துள்ளது. 
    நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி முதல் முறையாக விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி 6-3, 7-6 என்ற நேர் செட்களில் ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பரை தோற்கடித்தார்.

    மற்றொரு அரையிறுதிப் போட்டியில் செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 5-7, 6-4, 6-4 என்ற செட்களில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

    நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் ஆஷ்லி பார்ட்டியும், கரோலினா பிளிஸ்கோவாவும் மோதுகின்றனர்.
    எம்.எஸ்.தோனி இதுவரை 200 போட்டிகளில் சென்னை அணிக்கு கேப்டனாக செயல்பட்டு, 110 போட்டிகளில் வெற்றியைத் தேடித் தந்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கியது முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டோனி இருந்து வருகிறார். கடந்த ஆண்டைத் தவிர மற்ற சீசன்களில் அணியை ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு அழைத்து சென்ற பெருமை டோனிக்கு உண்டு. இதுவரை 3 முறை ஐ.பி.எல். கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.

    சர்வதேச தொடர்களில் இருந்து ஓய்வுபெற்ற எம்.எஸ்.தோனி, ஐ.பி.எல். போட்டியில் பேட்டிங்கில் திணறி வருகிறார். 

    இந்தாண்டு ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும் தோனியின் அதிரடியை காணமுடியவில்லை. எனவே, அவர் இந்தாண்டு ஓய்வை அறிவிப்பார் என கூறப்பட்டது.

    எம்எஸ்.தோனி

    இந்நிலையில், சி.எஸ்.கே. அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன், சென்னை அணிக்காக தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் விளையாடலாம். அவர் முழு உடற்தகுதியுடன் உள்ளார். கடும் பயிற்சிகளை செய்து வருகிறார். பின்னர் எதற்காக அவர் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறவேண்டும்?

    அவர் ஒரு நல்ல வழிகாட்டி. மிகவும் அனுபவம் வாய்ந்த ஒரு தலைவன். எங்களைப் பொறுத்தவரை தோனி இன்னும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். அவர் அணிக்காக சிறந்த விஷயங்களைச் செய்து கொடுப்பார். மேட்சை வெற்றிகரமாக முடித்துத் தருவதில் சிறந்தவர் அவர். இன்றும் அதையே செய்து வருகிறார் என தெரிவித்தார்.
    இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 141 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
    லண்டன்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. 

    இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பாகிஸ்தான் அணி 141 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஃபாகர் சமான் 47 ரன்களும் சதாப் கான் 30 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் சகிப் முகமது 4 விக்கெட்டுகளையும் கிரேக் ஒவர்டான், பார்க்கின்சன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

    இதையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிலிப் சால்ட்- டேவிட் மலான் களமிறங்கினர். பிலிப் சால்ட் 7 ரன்கள் இருந்த நிலையில் அப்ரிடி பந்து விச்சில் வெளியேறினார். இதனை அடுத்து களமிறங்கிய ஜாக் கிராலி-டேவிட் மலான் ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.

    இங்கிலாந்து அணி 21.5 ஓவரில் 142 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டேவிட் மலான் 68 ரன்னிலும் ஜாக் கிராலி 58 ரன்னிலும் களத்தில் இருந்தனர். இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகுக்கிறது.
    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 142 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    லண்டன்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. 

    இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் உல் ஹக், ஃபாகர் சமான் களமிறங்கினர். இமாம், ரன் கணக்கை தொடங்காமலேயே சகிப் முகமது பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாமும் சகிப் பந்துவீச்சில் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். 

    சற்று நிதானம் காட்டிய ஃபாகர் சமான், 67 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்தவர்கள் யாரும் நீண்ட நேரம் நிலைத்து நிற்காததால், பாகிஸ்தான் அணி 35.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்களில் சுருண்டது. 

    பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக, பஹார் ஜமான் 47 ரன்களும் சதாப் கான் 30 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் சகிப் முகமது 4 விக்கெட்டுகளையும் கிரேக் ஒவர்டான், பார்க்கின்சன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி தற்போது விளையாடி வருகிறது.
    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்த கொள்ள இருக்கும் இந்திய மல்யுத்த வீரர்கள்-வீராங்கனைகள் 7 பேரும் ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

    ஜப்பான் டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 5 வரை 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இதற்கான இந்திய மல்யுத்த அணியில் இடம்பெற்றுள்ள வீரர் வீராங்கனைகள் குறித்த தகவல்களை இந்த செய்தியின் மூலம் பார்க்கலாம்.

    ரவி குமார் தஹியா

    அரியானா மாநிலத்தை சேர்ந்த ரவி குமார் தஹியா 1997 ஆம் ஆண்டு பிறந்தார். ரவி குமார் தஹியா ஃப்ரிஸ்டைல் வெஸ்லிங் விளையாட்டில் 57 கிலோ எடைப்பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல்முறையாக பங்கேற்கிறார். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ஜூனியர் வெஸ்லிங் போட்டியின் 57 கிலோ பிரிவில் ரவி குமார் தஹியா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ரவி குமார் தஹியா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்   

    பஜ்ரங் புனியா

    பஜ்ரங் புனியா

    அரியானா மாநிலத்தை சேர்ந்த பஜ்ரங் புனியா 1994 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி பிறந்தார். இவர் தேசிய அளவிலான போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 6 தங்கம் உள்பட 17 பதக்கங்கள் வென்றுள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிப்போட்டிகளில் பங்கேற்கவில்லை. தீவிர பயிற்சி மேற்கொண்டுவந்த பஜ்ரங் புனியா தற்போது டோக்கியோவில் நடைபெற உள்ள வெஸ்லிங் போட்டியில் 65 கிலோ பிரிவில் தகுதி பெற்றுள்ளார். 

    தீபக் புனியா

    அரியானா மாநிலத்தை சேர்ந்த தீபக் புனியா 1999-ம் ஆண்டு பிறந்தார். இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் 86 கிலோ வெஸ்லிங் பிரிவில் பங்கேற்கிறார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக வெஸ்லிங் போட்டியின் 86 கிலோ பிரிவில் தீபக் புனியா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

    சீமா பிஸ்லா

    சீமா பிஸ்லா

    அரியானா மாநிலத்தை சேர்ந்த சீமா பிஸ்லா 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி பிறந்தார். கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்ற 2021 ஆசியன் சாம்பியன்ஷிப் வெஸ்லிங் போட்டியில் சீமா பிஸ்லா வெண்கல பதக்கம் வென்றார். தற்போது இவர் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் வெஸ்லிங் போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்கிறார்.

    வினீஷ் போகட் 

    வினீஷ் போகட் 1994 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி அரியானா மாநிலத்தில் பிறந்தார். 26 வயதான வினீஷ் போகட் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியன் விளையாட்டு போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் பெண்கள் ஃப்ரிஸ்டைல் பிரிவில் வினீஷ் போகட் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். வினீஷ் போகட் தற்போது டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் 53 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்கிறார்.

    அனூஷ் மாலிக் 

    அனூஷ் மாலிக்

    அனூஷ் மாலிக் 2001 ஆகஸ்ட் 5-ம் தேதி அரியானா மாநிலத்தில் பிறந்தார். இவருக்கு தற்போது 19 வயதாகுகிறது. 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக இண்டிவிஜுவல் வெஸ்லிங் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் அனூஷ் மாலி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். 2019 ஆம் ஆண்டு 59 கிலோ எடைப்பிரிவில் ஆசியன் ஜூனியர் சாம்பியன் பட்டம் வென்றார். தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அனூஷ் மாலிக் 57 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்கிறார்.

    சோனம் மாலிக்

    சோனம் மாலிக்

    சோனம் மாலிக் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி பிறந்தார். 19 வயதான சோனம் மாலிக் டோக்கியோ ஒலிம்பிக் வெஸ்லிங் போட்டியில் 62 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்கிறார். 2016 ஆம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக்கை சோனம் மாலிக் இரண்டு முறை வீழ்த்தியுள்ளார். 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பள்ளிகள் அளவிலான தேசிய பள்ளிகள் விளையாட்டு வெஸ்லிங் போட்டியில் சோனம் மாலி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
    புதிய கட்டுப்பாடுகள் ஜூலை 12 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 22 வரை இருக்கும் என ஜப்பானின் பொருளாதார மந்திரி யசுதோஷி நிஷிமுரா தெரிவித்தார்.
    டோக்கியோ:

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், டோக்கியோவிற்கு வைரஸ் அவசர நிலையை ஜப்பான் அரசு அறிவித்து உள்ளது. டோக்கியோவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், ஒலிம்பிக் போட்டிகள் மூலம் புதிய கொரோனா அலை உருவாகாமல் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. டோக்கியோ நகரில் நேற்று கொரோனா பாதிப்பு 920 ஆக உயர்ந்தது. இதனால் வைரஸ் அவசர நிலையை அறிவித்துள்ளது அரசு.

    டோக்கியோ ஒலிம்பிக்

    இந்த அவசர நிலையின்போது உணவகங்கள், மதுபான விடுதிகளை இரவு 8 மணிக்கு மூடுதல், அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதைத் தவிா்த்தல் போன்ற நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்படுவாா்கள். ஆனால், விதிகளை மீறுபவா்கள் தண்டிக்கப்படமாட்டாா்கள்.

    இந்த புதிய கட்டுப்பாடுகள் ஜூலை 12 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 22 வரை இருக்கும் என ஜப்பானின் பொருளாதார மந்திரி யசுதோஷி நிஷிமுரா தெரிவித்தார். 

    டோக்கியோ போட்டி அமைப்பாளர்கள் ஏற்கனவே வெளிநாட்டு பார்வையாளர்களை தடை செய்துள்ளனர். உள்நாட்டு பார்வையாளர்களுக்கு 50 சதவீதம் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கலாம் என திட்டமிட்டு இருந்தனர். ஆனால், வைரஸ் அவசர நிலை அறிவிக்கப்பட்டதால், பார்வையாளர்கள் மீதான கட்டுப்பாடுகள் குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. 

    சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச், ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு, சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி, ஜப்பான் மற்றும் டோக்கியோ பெருநகர நிர்வாகங்களின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், ஒலிம்பிக் போட்டிகள் அனைத்தையும் பார்வையாளர்கள் இன்றி நடத்த முடிவு செய்யப்பட்டது.  

    பார்வையாளர்கள் இன்றி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என்பதை ஒலிம்பிக் மந்திரி தமாயோ மருகவா உறுதி செய்துள்ளார்.
    ஹசிம் அம்லா 100 பந்தில் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், 6 மணி நேரத்திற்கு மேலாக களத்தில் நின்று அணியை டிரா செய்ய வைத்தார்.
    தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஹசிம் அம்லா. இவர் மூன்று வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்றாலும் இங்கிலாந்து கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.

    டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர். அதிரடியாகவும், அதேநேரத்தில் அணிக்கு தேவை என்றால் தடுப்பட்டம் ஆடுவதில் கில்லாடி.

    கவுன்ட்டி கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக விளையாடி வருகிறார். குரூப் 2, சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் ஹம்ப்ஷைர்- சர்ரே அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த ஹம்ப்ஷைர் 488 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய சர்ரே அணி முதல் இன்னிங்சில் 72 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. ஹசிம் அம்லா 29 ரன்களும், ரியான் பட்டேல் 11 ரன்களும் சேர்த்தனர்.

    பாலோ-ஆன் ஆன சர்ரே, 2-வது இன்னிங்சில் தொடர்ந்து பேட்டிங் செய்தது. 6 ரன்னுக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது சர்ரே. அடுத்து ஹசிம் அம்லா களம் இறங்கினார். போட்டியில் வெற்றி பெற முடியாது என்பதை அறிந்து கொண்ட அம்லா, எப்படியும் போட்டியை டிரா நோக்கி கொண்டு செல்ல வேண்டும் என முடிவு செய்து தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். தடுப்பாட்டம் என்றால் அப்படியொரு தடுப்பாட்டம். முதல் 100 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே அடித்தார். 126-வது பந்தில்தான் முதல் பவுண்டரி அடித்தார்.

    381 நிமிடங்கள் களத்தில் நின்று 278 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில் போட்டி டிராவில் முடிந்தது. 104 ஓவர்களை சந்தித்த சர்ரே அணி 8 விக்கெட்டை இழந்து 122 ரன்கள் எடுத்திருந்தது. சுமார் 6 மணிநேரம், 21 நிமிடங்கள் களத்தில் போராடி அணியை டிராவில் முடித்து வைத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 13.30 ஆகும்.

    இது அவரின் மிகச்சிறந்த மெதுவான ஆட்டம் இல்லை. 2015-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக டெல்லியில் டி வில்லியர்ஸுடன் இணைந்து போட்டியை டிராவாக்க போராடினர். 244 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்டிரைக் ரேட் 10.24 ஆகும். இதுவே அவரின் மிகக்சிறந்த தடுப்பாட்டமாகும். இந்த போட்டியில் டி வில்லியர்ஸ் 297 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். இருந்தாலும் போட்டியை டிரா ஆக்கமுடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
    இலங்கை கிாிக்கெட் வாரியம் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ள 34 வயதான மேத்யூஸ் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பில் கொண்டு வரப்பட்ட வருடாந்திர ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மறுத்து விட்டனர். சம்பளம் குறைப்பு, களத்தில் திறமையை வெளிப்படுத்தும் அடிப்படையில் ஊக்கத்தொகை போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்த இலங்கை வீரர்கள் புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்கவில்லை.

    இதையடுத்து இலங்கை கிரிக்கெட் வாரியம் வருடாந்திர ஒப்பந்தத்திற்கு பதிலாக ஒவ்வொரு தொடருக்கும் வீரர்களுக்கு தனித்தனியாக ஒப்பந்தத்தை கொண்டு வருகிறது. இதன்படி வருகிற 13-ந்தேதி தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் 20 ஓவர் தொடரில் விளையாட உள்ள இலங்கை அணிக்கான ஒப்பந்த பட்டியலில் 30 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் 29 பேர் இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டனர். அவர்களில் இருந்து இந்தியாவுக்கு எதிரான தொடருக்கான இலங்கை அணி தேர்வு செய்யப்படும்.

    ஆனால், இந்த ஒப்பந்தத்தை ஏற்க திட்டவட்டமாக மறத்துவிட்ட ஆல்-ரவுண்டர் மேத்யூஸ் இந்திய தொடரில் இருந்து விலகியுள்ளார். இருப்பினும் அவர் தனிப்பட்ட காரணத்துக்காக அணித்தேர்வில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை கிாிக்கெட் வாரியம் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ள 34 வயதான மேத்யூஸ் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால் இறுதியில் இத்தாலி வீரர் மேட்டியோ பெரெட்டினி கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசும் மோதினர்.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால் இறுதியில் இத்தாலி வீரர் மேட்டியோ பெரெட்டினி கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசும் மோதினர்.

    இதில் பெரெட்டினி 6-3, 5-7, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நாளை அரை இறுதி ஆட்டங்கள் நடக்கிறது.

    இதில் பெரெட்டினி (இத்தாலி)- ஹர்காக்ஸ் (போலந்து), ஜோகோவிச் (செர்பியா) - ‌ஷபோவலோவ் (கனடா) மோதுகிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று அரை இறுதி ஆட்டங்கள் நடக்கிறது. ஒரு போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லே பார்டி (ஆஸ்திரேலியா) கெர்மரி (ஜெர்மனி) மோதுகிறார்கள்.

    மற்றொரு அரை இறுதியில் பிளிஸ்கோவா (செக் குடியரசு)- சபலென்கா (பெலாரஸ்) பலப்பரீட்சை நடத்துகின்றார்கள்.

    ×