என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து அணி வீரர்கள்
    X
    இங்கிலாந்து அணி வீரர்கள்

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி - பாகிஸ்தான் 141 ரன்களில் ஆல்அவுட்

    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 142 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    லண்டன்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. 

    இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் உல் ஹக், ஃபாகர் சமான் களமிறங்கினர். இமாம், ரன் கணக்கை தொடங்காமலேயே சகிப் முகமது பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாமும் சகிப் பந்துவீச்சில் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். 

    சற்று நிதானம் காட்டிய ஃபாகர் சமான், 67 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்தவர்கள் யாரும் நீண்ட நேரம் நிலைத்து நிற்காததால், பாகிஸ்தான் அணி 35.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்களில் சுருண்டது. 

    பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக, பஹார் ஜமான் 47 ரன்களும் சதாப் கான் 30 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் சகிப் முகமது 4 விக்கெட்டுகளையும் கிரேக் ஒவர்டான், பார்க்கின்சன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி தற்போது விளையாடி வருகிறது.
    Next Story
    ×