என் மலர்tooltip icon

    விளையாட்டு

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் மிக முக்கியமான ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் இன்று கோதாவில் குதிக்கின்றன.
    துபாய்:

    7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்-12 சுற்றில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன. லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

    இதில் குரூப் 2-ல் இடம் பெற்றுள்ள முன்னாள் சாம்பியனான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில் இந்திய அணி தனது 2-வது லீக்கில் நியூசிலாந்துடன் இன்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) துபாயில் மோதுகிறது. நியூசிலாந்தும் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோற்று இருந்தது.

    இரு அணிக்குமே இது வாழ்வா-சாவா மோதல் ஆகும். அதாவது இந்த பிரிவில் பாகிஸ்தான் அணி 3 வெற்றிகளுடன் கம்பீரமாக (6 புள்ளி) முதலிடம் வகிக்கிறது. அந்த அணி எஞ்சிய இரு லீக்கில் குட்டி அணிகளான ஸ்காட்லாந்து, நமிபியாவை சந்திக்க உள்ளது. அதனால் பாகிஸ்தான் அரைஇறுதி சுற்றை எட்டுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

    மற்றொரு அரைஇறுதி வாய்ப்பில் நீடிப்பது யார்? என்பதை தீர்மானிக்கும் வகையில் இன்றைய ஆட்டம் அமைந்துள்ளது. இதில் வெற்றி பெறும் அணிக்குத் தான் அடுத்த சுற்று வாய்ப்பு பிரகாசமாகும். ஏனெனில் இதன் பிறகு மீதமுள்ள 3 ஆட்டங்களில் பலம் குறைந்த ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகளைத் தான் இந்தியா, நியூசிலாந்து அணிகள் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. இந்த ஆட்டங்களில் இரு அணிகளுமே வெற்றி பெற்று விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இன்றைய ஆட்டத்தில் இரு அணி வீரர்களுமே முழுமூச்சுடன் வரிந்துகட்டுவார்கள் என்று நம்பலாம்.

    பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் லோகேஷ் ராகுல் (3 ரன்), ரோகித் சர்மாவின் (0) மோசமான பேட்டிங் பின்னடைவை ஏற்படுத்தியது. கேப்டன் விராட் கோலி (57 ரன்), ரிஷாப் பண்ட் (39 ரன்) தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் ஜொலிக்கவில்லை. இந்தியா எடுத்த 151 ரன்கள் ஓரளவு நல்ல ஸ்கோர் என்று பார்த்தால் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் இருவரும் இணைந்தே இந்த இலக்கை எட்டிப்பிடித்து விட்டனர். பந்து வீச்சும் இந்தியாவுக்கு சொதப்பியது.

    இதனால் இந்திய அணியில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் குரல் கொடுத்தாலும், கேப்டன் விராட் கோலி அணியில் மாற்றம் செய்யமாட்டார் என்றே தெரிகிறது. ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா வலை பயிற்சியின் போது பந்துவீச தொடங்கியுள்ளார். அவர் போட்டியில் ஓரிரு ஓவர்கள் பந்து வீசினால் நெருக்கடி குறையும். எல்லாவற்றுக்கும் மேலாக பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கம் தர வேண்டியது அவசியமாகும்.

    நியூசிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 134 ரன் மட்டுமே எடுத்த போதிலும், பந்து வீச்சில் மிரட்டியது. 19 ஓவர் வரை போராடித் தான் பாகிஸ்தான் இலக்கை அடைய முடிந்தது. டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, சோதி என்று நியூசிலாந்து அணி பந்து வீச்சில் வலுவாக தென்படுகிறது. பேட்டிங்கில் கப்தில், கேப்டன் வில்லியம்சன், டிவான் கான்வே உள்ளிட்டோர் நல்ல நிலையில் உள்ளனர். அதனால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    நியூசிலாந்து இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் நேற்று கூறுகையில், ‘இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடியின் பந்து வீச்சு வியப்புக்குரிய வகையில் (இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தினார்) இருந்தது. அன்றைய இரவில் அவர் சாதித்தது போன்று நாளைய இரவில் (அதாவது இன்று) என்னாலும் செய்ய முடியும் என்று நம்புகிறேன். இந்திய அணியில் தரமான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். எனவே தொடக்கத்திலேயே அவர்களது விக்கெட்டை காலி செய்வதில் கவனம் செலுத்துவேன்’ என்றார்.

    இங்கு இரவில் பனிப்பொழிவு பந்து வீச்சுக்கு கடும் சவாலாக உள்ளதால் ‘டாஸ்’ வெல்லும் அணி 2-வது பேட்டிங்கையே விரும்பும். அதனால் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும்.

    சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 16 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 6-ல் இந்தியாவும், 8-ல் நியூசிலாந்தும் வெற்றி கண்டன. 2 ஆட்டம் ‘டை’யில் முடிந்து ‘சூப்பர் ஓவர்’ கடைபிடிக்கப்பட்ட அவ்விரு ஆட்டங்களிலும் இந்தியாவே வெற்றி பெற்றது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் நியூசிலாந்தை அவர்களது இடத்திலேயே ஐந்து 20 ஓவர் போட்டிகளிலும் இந்தியா போட்டுத்தாக்கியது நினைவு கூரத்தக்க அம்சமாகும்.

    ஆனால் 20 ஓவர் உலக கோப்பை தொடரில் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக மோதியுள்ள இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியே சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷாப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார் அல்லது ஷர்துல் தாக்குர், முகமது ஷமி, பும்ரா, வருண் சக்ரவர்த்தி.

    நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஜேம்ஸ் நீஷம், டிவான் கான்வே, கிளைன் பிலிப்ஸ், டிம் செய்பெர்ட், மிட்செல் சான்ட்னெர், சோதி, டிம் சவுதி அல்லது ஆடம் மில்னே, டிரென்ட் பவுல்ட்.

    இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    முன்னதாக மாலை 3.30 மணிக்கு அபுதாபியில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, நமிபியாவை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் தங்களது 2-வது வெற்றியை குறிவைத்து களம் காணுகின்றன.

    24 வயதான இலங்கையை சேர்ந்த ஹசரங்கா, தனது அறிமுக ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    சார்ஜா:

    டி20 உலக கோப்பை தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த இலங்கை அணி 142 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்தது.

    இப்போட்டியின் 15-வது ஓவரை இலங்கை அணியின் வனிந்து ஹசரங்கா வீசினார். ஹசரங்கா வீசிய அந்த ஓவரின் கடைசி பந்தில், மார்க்ரம் போல்டாகி வெளியேறினார்.

    அதன்பின், ஹசரங்கா 18-வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய பிரெடோரியஸ் அடுத்த பந்திலேயே டக்-அவுட்டாகி வெளியேறினார். இதன்மூலம் ஹசரங்கா ஹாட்ரிக் (3) விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    டி20 உலக கோப்பை போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 3வது பந்துவீச்சாளர் ஹசரங்கா என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக, நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அபுதாபியில் நடந்த நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து அணியின் கர்ட்டிஸ் கேம்பர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

    2007 டி20 உலக கோப்பையில் வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றினார். 

    அதிரடியாக ஆடி, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை திணறடித்த ஜாஸ் பட்லர் மிக வேகமாக அரை சதம் கடந்தார்.
    துபாய்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-12 சுற்று லீக் ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இன்று இரவு துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. 

    முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ஆரோன் பிஞ்ச் 44 ரன்கள் சேர்த்தார். 

    இதையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. துவக்க வீரர் ஜேசன் ராய் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் அதிரடியாக ஆடி, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை திணறடித்த ஜாஸ் பட்லர் 25 பந்துகளில் 4 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் மிக வேகமாக அரை சதம் கடந்தார். மறுமுனையில் டேவிட் மலன் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின்னர் ஜாஸ் பட்லருடன், பேர்ஸ்டோ இணைந்து அதிரடி காட்ட, இங்கிலாந்து அணி 50 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. 2 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்த இங்கிலாந்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

    ஜாஸ் பட்லர் 32 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்சருடன் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதேபோல் பேர்ஸ்டோ 11 பந்துகளில் 2 சிக்சர்களுடன் 16 ரன்கள் அடித்து களத்தில் இருந்தார்.
    டி20 உலகக் கோப்பையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் 44 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார்.
    துபாய்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-12 சுற்று லீக் ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இன்று இரவு துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. 

    முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ஆரோன் பிஞ்ச் 44 ரன்கள் சேர்த்தார். ஆஸ்டர் அகர் 20 ரன், மேத்யூ வேட் 18 ரன் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் ஜோர்டான் 3 விக்கெட், கிறிஸ் வோக்ஸ், டைமல் மில்ஸ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
    கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் 4 பந்துகளை எதிர்கொண்ட மில்லர் 2 சிக்சர்கள் உள்பட 14 ரன்கள் விளாசினார்.
    சார்ஜா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் இலங்கை- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் ஆடிய இலங்கை அணி, 20 ஓவர் முடிவில் 142 ரன்களே சேர்த்தது. பதும் நிசங்கா 72 ரன்கள் குவித்தார்.

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் தப்ரைஸ், டிவைன் ஆகியோர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து 143 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் முன்வரிசை வீரர்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தபோதும், நிதானமாக ஆடிய கேப்டன் டெம்பா பவுமா 46 ரன்கள் சேர்த்து நம்பிக்கை அளித்தார். 

    அதன்பின்னர் அபாரமான ஆடிய டேவிட் மில்லர் அணியின் வெற்றியை உறுதி செய்தார். கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் 4 பந்துகளை எதிர்கொண்ட மில்லர் 2 சிக்சர்கள் உள்பட 14 ரன்கள் விளாசினார். 5வது பந்தை எதிகொண்ட ரபாடா பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். ஒரு பந்து மீதமிருந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

    மில்லர் 13 பந்துகளில் 2 சிக்சர் உள்பட 23 ரன்களுடனும், 7 பந்துகளை எதிர்கொண்ட ரபாடா ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
    இலங்கை அணியின் துவக்க வீரர் பதும் நிசங்கா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 72 ரன்கள் குவித்தார்.
    சார்ஜா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று சார்ஜாவில் நடைபெறும்  ஆட்டத்தில் இலங்கை- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.

    இலங்கை அணியின் துவக்க வீரர் பதும் நிசங்கா அபாரமாக விளையாடி ரன் குவித்தார். ஆனால் மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. அசலங்கா (21), கேப்டன் சனகா (11) தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 142 ரன்களே சேர்த்தது. பதும் நிசங்கா 72 ரன்கள் குவித்தார்.

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் தப்ரைஸ், டிவைன் ஆகியோர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து 143 ரன்கள் என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா விளையாடுகிறது.
    நடப்பு உலக சாம்பியனான பி.வி.சிந்து, உலக தரவரிசையில் 15ம் இடத்தில் உள்ள சயாகா டகாஹசியுடன் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதி உள்ளார்.
    பாரிஸ்:

    பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை சயாகா டகாஹசியை எதிர்கொண்டார். துவக்கத்தில் ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிந்து, முதல் செட்டை 21-18 என கைப்பற்றினார். அதன்பின்னர் ஆதிக்கம் செலுத்திய ஜப்பான் வீராங்கனை தொடர்ந்து இரண்டு செட்களை (21-16, 21-12) கைப்பற்றினார். இதனால் 2-1 என பி.வி.சிந்து தோல்வியடைந்து வெளியேறினார்.

    நடப்பு உலக சாம்பியனான பி.வி.சிந்து, உலக தரவரிசையில் 15ம் இடத்தில் உள்ள சயாகா டகாஹசியுடன் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதி உள்ளார். இதில் 4 முறை தோல்வி அடைந்துள்ளார்.

    டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பி.வி.சிந்து, அதன்பின்னர் டென்மார்க் ஓபனில் பங்கேற்றார். அதில் காலிறுதியில் தோல்வியடைந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது பிரெஞ்சு ஓபனிலும் அரையிறுதியுடன் வெளியேறினார்.
    டி20 உலக கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அஸ்வினை களமிறக்க வேண்டும் என்று பிரட் லீ தெரிவித்துள்ளார்.
    துபாய்:

    டி20 உலகக்கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற்று வருகிறது. 

    இதில் இந்திய அணி தான் ஆடிய முதல் போட்டியில்  (பாகிஸ்தான்) தோல்வியை தழுவிய நிலையில், நாளை நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த பிரட் லீ, இந்திய அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வினின் அனுபவம் தேவை என்று கூறியுள்ளார். 

    அஸ்வின் பல டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவருடைய அனுபவம் இந்திய அணிக்கு உதவியாக இருக்கும் என்று கூறிய அவர், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அஸ்வினை களமிறக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அஸ்வின் 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.

    நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி கடைசியாக 2020 பிப்ரவரியில் மவுண்ட் மங்கானுவில் நடந்த ஆட்டத்தில் 7 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது.

    இரு அணிகளும் 20 ஓவரில் நாளை மோதுவது 17-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த போட்டிகளில் இந்தியா 8-ல், நியூசிலாந்து 8-ல் வெற்றி பெற்றுள்ளன.

    கடைசியாக 2020 பிப்ரவரியில் மவுண்ட் மங்கானுவில் நடந்த ஆட்டத்தில் இந்தியா 7 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது. உலக கோப்பை போட்டியில் மோதிய 2 முறையும் நியூசிலாந்தே வெற்றி பெற்றிருந்தது.

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. 2-வது பேட்டிங் செய்யும்போது பனித்துளி காரணமாக பந்து வீசுவது சவாலாக உள்ளது. இதனால் 2-வது பேட்டிங் அணியே வெற்றி பெறுகிறது. 2 ஆட்டம் தவிர மற்ற ஆட்டங்களில் 2-வது பேட்டிங் செய்த அணியே வெற்றிபெற்றுள்ளது. எனவே டாஸ் வெல்லும் அணி பெரும்பாலும் பீல்டிங்கை தேர்வு செய்கிறது.

    உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் ஹர்த்திக் பாண்ட்யாவை சேர்ப்பதற்கு முன்பு உடல் தகுதி சான்றிதழை கேட்டிருக்க வேண்டும் என சந்தீப்பாட்டீல் கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    உடல் தகுதி இல்லாத ஹர்த்திக் பாண்ட்யாவை 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தேர்ந்தெடுத்தது தவறு என்று முன்னாள் வீரர் சந்தீப்பாட்டில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    100 சதவீதம் உடல் தகுதி இல்லாத ஒரு வீரரை எவ்வாறு உலக கோப்பைக்கான இந்திய அணியில் தேர்ந்தெடுத்தார்கள். ஹர்த்திக் பாண்ட்யா அணிக்குள் வந்ததற்கு முழுமையாக கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கிரிக்கெட் வாரியம் ஆகியோருக்கு மட்டுமே தெரியும்.

    அடிப்படையில் ஒரு வீரர் 100 சதவீதம் உடல் தகுதி இல்லாவிட்டால் அதை தேர்வாளர்களிடம் விட்டுவிட வேண்டும். உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் அவரை சேர்ப்பதற்கு முன்பு உடல் தகுதி சான்றிதழை கேட்டிருக்க வேண்டும்.

    ஹர்த்திக் பாண்ட்யாவை அணியில் தேர்ந்தெடுத்தது தவறு. அவரை தேர்வு செய்ததற்கு யாரேனும் பொறுப்பு ஏற்க வேண்டும். இதுவரை இந்திய பயிற்சியாளர்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.

    ஹர்த்திக் பாண்ட்யா உடல் தகுதியுடன் இருக்கிறார் என்று ரோகித் சர்மா, ரகானே சொல்கிறார்கள்.இது உலக கோப்பை. சாதாரண தொடருமல்ல. போட்டியுமல்ல.

    இவ்வாறு சந்தீப்பாட்டில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

    பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் தென் கொரிய வீரரிடம் நேர் செட்டில் தோற்று இந்தியாவின் லக்‌ஷயா சென் வெளியேறினார்.
    பாரீஸ்:

    பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு நடந்த காலிறுதி ஆட்டத்தில் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து  தாய்லாந்தின் பூசனனை எதிர்கொண்டார். 

    இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-14, 21-14 என்ற நேர் செட் கணக்கில் தாய்லாந்தின் பூசனனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
    இந்த தொடரில் இந்திய தரப்பில் பி.வி.சிந்து மட்டுமே களத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன், நியூசிலாந்தின் டிம் சவுத்தி ஆகியோர் டி20 போட்டியில் 100 விக்கெட்கள் எடுத்துள்ளனர்.
    துபாய்:
       
    டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் நேற்று மோதின. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 147 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான் அணியின் முகமது ஹபீஸ் விக்கெட்டை ரஷீத் கான் எடுத்தார். இது அவரது 100-வது விக்கெட் ஆகும்.
     
    மேலும், 53 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரஷீத் கான் அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.

    முன்னதாக, இலங்கையின் லசித் மலிங்கா 76 போட்டிகளில் 100 விக்கெட் கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×