என் மலர்tooltip icon

    செய்திகள்

    சந்தீப்பாட்டீல் - ஹர்த்திக் பாண்ட்யா
    X
    சந்தீப்பாட்டீல் - ஹர்த்திக் பாண்ட்யா

    ஹர்த்திக் பாண்ட்யாவை அணியில் தேர்ந்தெடுத்தது தவறு - சந்தீப்பாட்டீல் விமர்சனம்

    உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் ஹர்த்திக் பாண்ட்யாவை சேர்ப்பதற்கு முன்பு உடல் தகுதி சான்றிதழை கேட்டிருக்க வேண்டும் என சந்தீப்பாட்டீல் கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    உடல் தகுதி இல்லாத ஹர்த்திக் பாண்ட்யாவை 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தேர்ந்தெடுத்தது தவறு என்று முன்னாள் வீரர் சந்தீப்பாட்டில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    100 சதவீதம் உடல் தகுதி இல்லாத ஒரு வீரரை எவ்வாறு உலக கோப்பைக்கான இந்திய அணியில் தேர்ந்தெடுத்தார்கள். ஹர்த்திக் பாண்ட்யா அணிக்குள் வந்ததற்கு முழுமையாக கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கிரிக்கெட் வாரியம் ஆகியோருக்கு மட்டுமே தெரியும்.

    அடிப்படையில் ஒரு வீரர் 100 சதவீதம் உடல் தகுதி இல்லாவிட்டால் அதை தேர்வாளர்களிடம் விட்டுவிட வேண்டும். உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் அவரை சேர்ப்பதற்கு முன்பு உடல் தகுதி சான்றிதழை கேட்டிருக்க வேண்டும்.

    ஹர்த்திக் பாண்ட்யாவை அணியில் தேர்ந்தெடுத்தது தவறு. அவரை தேர்வு செய்ததற்கு யாரேனும் பொறுப்பு ஏற்க வேண்டும். இதுவரை இந்திய பயிற்சியாளர்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.

    ஹர்த்திக் பாண்ட்யா உடல் தகுதியுடன் இருக்கிறார் என்று ரோகித் சர்மா, ரகானே சொல்கிறார்கள்.இது உலக கோப்பை. சாதாரண தொடருமல்ல. போட்டியுமல்ல.

    இவ்வாறு சந்தீப்பாட்டில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

    Next Story
    ×