search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா
    X
    தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா

    மிரட்டிய மில்லர்- இலங்கையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது தென் ஆப்பிரிக்கா

    கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் 4 பந்துகளை எதிர்கொண்ட மில்லர் 2 சிக்சர்கள் உள்பட 14 ரன்கள் விளாசினார்.
    சார்ஜா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் இலங்கை- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் ஆடிய இலங்கை அணி, 20 ஓவர் முடிவில் 142 ரன்களே சேர்த்தது. பதும் நிசங்கா 72 ரன்கள் குவித்தார்.

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் தப்ரைஸ், டிவைன் ஆகியோர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து 143 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் முன்வரிசை வீரர்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தபோதும், நிதானமாக ஆடிய கேப்டன் டெம்பா பவுமா 46 ரன்கள் சேர்த்து நம்பிக்கை அளித்தார். 

    அதன்பின்னர் அபாரமான ஆடிய டேவிட் மில்லர் அணியின் வெற்றியை உறுதி செய்தார். கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் 4 பந்துகளை எதிர்கொண்ட மில்லர் 2 சிக்சர்கள் உள்பட 14 ரன்கள் விளாசினார். 5வது பந்தை எதிகொண்ட ரபாடா பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். ஒரு பந்து மீதமிருந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

    மில்லர் 13 பந்துகளில் 2 சிக்சர் உள்பட 23 ரன்களுடனும், 7 பந்துகளை எதிர்கொண்ட ரபாடா ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
    Next Story
    ×