என் மலர்
விளையாட்டு
- இந்திய அணியில் ஒரே ஒரு வீரர் மட்டும் டி20 தரவரிசையில் டாப் 10-ல் இருக்கிறார்.
- டி20 வடிவத்தில் மட்டுமின்றி ஒருநாள் பேட்டிங் தரவரிசையிலும் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார்.
பாகிஸ்தான் கேப்டனும் நம்பர் 1 பேட்ஸ்மேனுமான பாபர் அசாம் தரவரிசையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அவர் அதிக நாள் டி20 தரவரிசையில் உலகின் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அவர் 1014 நாட்கள் முதல் இடத்தில் தொடர்கிறார். மொத்தம் 1013 நாட்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலியின் சாதனையை பாகிஸ்தான் கேப்டன் முறியடித்துள்ளார்.
பாபர் அசாம் 818 புள்ளிகள் எடுத்து டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஷ்வான் 2-வது இடத்தில் உள்ளார். இந்திய அணியில் ஒரே ஒரு வீரர் மட்டும் டாப் 10-ல் இருக்கிறார். இஷான் கிஷன் 682 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளார்.
டி20 வடிவத்தில் மட்டுமின்றி ஒருநாள் பேட்டிங் தரவரிசையிலும் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார். இவர் 2 முறை நான்கு சதங்கள் தொடர்ச்சியாக அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் டெஸ்ட் பேட்டிங்கிலும் சாதனை படைக்க பாபர் அசாம் இலக்கு வைத்துள்ளார். ஒருநாள் மற்றும் டி20 தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்பதில் திருப்தி அடையாத அசாம், டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் ஆவதற்கு இப்போது தனது பார்வையை திருப்பியுள்ளார். டெஸ்ட் தரவரிசையில் அசாம் தற்போது 815 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அணியின் பந்து வீச்சு சிறப்பானதாக இருப்பதால் வெற்றி பெறுவது சவாலானதாக இருக்கும்.
- கேஎல் ராகுல்-ரோகித் சர்மா உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பது இங்கிலாந்து அணிக்கு சாதகமாகும்.
இங்கிலாந்து அணி கடந்த ஆண்டு இந்தியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 5-வது டெஸ்ட் போட்டி கொரோனா பரவல் காரணமாக மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது.
இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி தொடரை இழந்தது. 2 போட்டிகளில் டிரா ஆகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் அதிரடியில் வெற்றி பெற்றது. இதே மன நிலையில் தான் இந்தியாவுடனான 5-வது டெஸ்ட்டில் விளையாடுவோம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் ஆபத்தானவர் என இங்கிலாந்து வீரர் மொயின் அலி இந்திய அணியினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
5-வது டெஸ்ட் போட்டியை கடந்த ஆண்டே முடித்திருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என நினைக்கிறேன். ஆனால் இங்கிலாந்து அணி இந்த போட்டியில் இந்தியாவை வீழ்த்தும் என உணர்கிறேன். நியூசிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றுள்ளது. அதனால் அவர்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிகிறது. இழப்பதற்கு ஏதும் இல்லை என்று தெரிந்தபிறகு பென் ஸ்டோக்ஸ் ஆபத்தானவராக மாறி விடுவார்.
இந்திய அணியின் பந்து வீச்சு சிறப்பானதாக இருப்பதால் வெற்றி பெறுவது சவாலானதாக இருக்கும். இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய போது புது பந்தில் கேஎல் ராகுல் - ரோகித் சர்மா இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடினர். தற்போது கேஎல் ராகுல் காயம் காரணமாக விலகி உள்ளார். மேலும் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது இங்கிலாந்து அணிக்கு சாதகமாகும்.
இங்கிலாந்து அணி இதற்கு முன்பு ஜோரூட் தலைமையில் 17 டெஸ்ட்டில் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. தற்போது புதிய கேப்டன் மற்றும் புதிய பயிற்சியாளருடன் டெஸ்ட் போட்டிகளை விளையாடி வருகிறது. முதல் தொடரில் நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்துள்ளது.
பென் ஸ்டோக்ஸின் சிறந்த விஷயம் என்னவென்றால் வீரர்கள் இங்கிலாந்துக்காக சிரித்த முகத்துடன் விளையாட வேண்டும் என்று அவர் விரும்புவார். பயப்பட ஒன்றுமில்லை. உங்களின் சிறந்த கிரிக்கெட்டை விளையாடுங்கள். இந்த வேலை செய்தால் அது அணிக்கு சிறந்ததாகும். ஆனால் எப்படி விளையாட வேண்டும் என்பதை எண்ணி பயப்பட வேண்டாம். கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் ஆதரவு உங்களுக்கு இருந்தால் அது பெரிய விஷயம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதை தீபக் ஹூடா தட்டிச் சென்றார்.
- 2017-ல் இலங்கை அணிக்கு எதிராக கேஎல் ராகுல் - ரோகித் சர்மா ஜோடி 165 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.
இந்திய அணி இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக அயர்லாந்து சென்றது. முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் குவித்தது. அயர்லாந்து அணி 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. யாரும் எதிர்பார்க்க முடியாத அளவில் அவர்களது பேட்டிங் இருந்தது. இந்திய அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் விளாசினார். கடைசியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி தோல்வி அடைந்தது. இதனால் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என இந்தியா கைப்பற்றியது.
ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதை தீபக் ஹூடா தட்டிச் சென்றார். இந்த போட்டியில் சாம்சன் மற்றும் ஹூடா ஜோடி 87 பந்துகள் சந்தித்து 176 ரன்கள் குவித்து சாதனைப் படைத்துள்ளது. டி20 போட்டிகளில் இந்திய அணியில் அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற சாதனையை சாம்சன் - ஹூடா படைத்துள்ளது. இதற்கு முன்பு 2017-ல் இலங்கை அணிக்கு எதிராக கேஎல் ராகுல் - ரோகித் சர்மா ஜோடி 165 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.
டி20 தொடரில் ஓட்டு மொத்தமாக அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் இவர்கள் 9-வது இடத்தை பிடித்துள்ளனர். முதலிடத்தில் ஆப்கானிஸ்தானின் ஹஸ்ரதுல்லா ஜசாய் மற்றும் உஸ்மான் கானி ஆகியோர் பட்டியலில் உள்ளனர். இந்த ஜோடி அயர்லாந்துக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு 236 ரன்கள் சேர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- உம்ரான் மாலிக்கின் பந்துவீச்சு வேகத்தை எதிர்கொள்வது எளிதல்ல.
- இறுதி ஓவரின்போது உண்மையை சொல்ல வேண்டுமானால் எந்த கவலையும் படவில்லை.
டுப்ளின்:
இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதிய 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நேற்று நடந்தது.
இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் விளையாடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 225 ரன் குவித்தது.
3-வது வீரராக களம் இறங்கிய தீபக் ஹூடா அபாரமாக ஆடி சதம் அடித்தார். அவர் 57 பந்தில் 104 ரன் எடுத்தார். இதில் 9 பவுண்டரியும் , 6 சிக்சர்களும் அடங்கும். சஞ்சு சாம்சன் 42 பந்தில் 77 ரன் ( 9 பவுண்டரி,4 சிக்சர் ) எடுத்தார். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 85 பந்துகளில் 176 ரன் குவித்தது முக்கியமானதாகும்.
அயர்லாந்து அணி தரப்பில் மார்க் ஆதிர் 3 விக்கெட்டும், ஜாஸ் லிட்டில், கிரேக் யங் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
226 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் அயர்லாந்து ஆடியது. பால் ஸ்டிர்லிங்-கேப்டன் பால்பிரீன் ஜோடி அதிரடியான தொடக்கத்தை கொடுத்தது. 3.5 ஓவரில் அந்த அணி 50 ரன்னை தொட்டது.
ஸ்கோர் 72 ரன்னாக ( 5.4 ஓவர்) இருந்த போது தொடக்க ஜோடியை ரவி பிஷ்னோய் படேல் பிரித்தார். ஸ்டிர்லிங் 18 பந்தில் 40 ரன் ( 5 பவுண்டரி, 3 சிக்சர் ) எடுத்தார். அடுத்து வந்த டெலனி ரன்எதுவும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார்.
மறுமுனையில் இருந்த கேப்டன் பால்பிரீன் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 37 பந்தில் 60 ரன்னில் வெளியேற்றப்பட்டார். அவரது ஸ்கோரில் 3 பவுண்டரியும், 7 சிக்சரும் அடங்கும். அப்போது அயர்லாந்து 10.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 117 ரன் என்ற நிலையில் இருந்தது.
ஒரு ஓவருக்கு 12 ரன்னுக்கு மேல் தேவைப்பட்டது. அயர்லாந்து வீரர்கள் ஹேரி டெக்டரும், ஜார்ஜ் டாக்ரெலும் சளைக்காமல் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கடைசி 3 ஓவரில் வெற்றிக்கு 38 ரன் தேவைப்பட்டது. கைவசம் 6 விக்கெட் இருந்தது.
18-வது ஓவரில் புவனேஸ்வர் குமார் சிறப்பாக பந்துவீசி 7 ரன் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். டெக்டர் 28 பந்தில் 39 ரன் (5 பவுண்டரி) எடுத்து அவுட் ஆனார்.
ஹர்சல் படேல் வீசிய 19-வது ஓவரில் அயர்லாந்து 14 ரன் எடுத்தது. மார்க் ஆதிர் ஒரு பவுண்டரியும், ஒரு சிக்சரும் அடித்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் 17 ரன் தேவைப்பட்டது.
உம்ரான் மாலிக் அந்த ஓவரை வீசினார். முதல் பந்தில் ரன் கொடுக்கவில்லை. அடுத்த பந்து நோபால் ஆனது. 2-வது மற்றும் 3-வது பந்தில் அடுத்தடுத்து ஆதிர் பவுண்டரி அடித்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கடைசி 3 பந்தில் அயர்லாந்து வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்டது. ஆனால் உம்ரான் மாலிக் நேர்த்தியாக வீசி 3 ரன்களே கொடுத்தார். அயர்லாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாக்ரெல் 16 பந்தில் 36 ரன்னும் (3 பவுன்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். புவனேஸ்வர்குமார், ஹர்சல் படேல், உம்ரான் மாலிக், ரவி பிஸ்னோய் தலா ஒரு விக்க்ட் கைப்பற்றினார் கள்.
இந்த வெற்றி மூலம் 2 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.
வெற்றிக்கு பிறகு பேசிய இந்திய அணி கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா கடைசி ஓவரை புதுமுக வீரரான உம்ரான் மாலிக்குக்கு கொடுத்து ஏன்? என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இறுதி ஓவரின்போது உண்மையை சொல்ல வேண்டுமானால் எந்த கவலையும் படவில்லை. நெருக்கடியில் சிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். உம்ரான் மாலிக் மீது முழு நம்பிக்கை இருந்தது.
அவருடைய பந்துவீச்சு வேகத்தை எதிர்கொள்வது எளிதல்ல. அயர்லாந்து வீரர்கள் சிறப்பாக ஆடி வந்தனர். ஆனாலும் உம்ரான் மாலிக் நேர்த்தியாக விளையாடினார். அவர் மீதுள்ள நம்பிக்கையால் கடைசி ஓவரை கொடுத்தேன்.
நெருக்கடியான இந்த நேரத்தில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.
இவ்வாறு ஹர்த்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.
- உலகின் தலைச்சிறந்த அணியை 3-0 என்ற கணக்கில் வென்றது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது.
- இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
பர்மிங்காம்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3 டெஸ்டுகளிலும் 250 ரன்களுக்கு மேலான இலக்கை தடாலடியாக ரன்மழை பொழிந்து எட்டிப்பிடித்தது. கொரோனா பிரச்சினையால் கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்டு தற்போது நடக்க உள்ள இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டிலும் இதே போல் அதிரடி காட்டுவோம் என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எச்சரித்துள்ளார்.
இது குறித்து ஸ்டோக்ஸ் அளித்த பேட்டியில், 'உலகின் தலைச்சிறந்த அணியை 3-0 என்ற கணக்கில் வென்றது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது. அடுத்து நாங்கள் மற்றொரு அணியை எதிர்கொண்டாலும் கூட அதே மனநிலையில் (ஆக்ரோஷமான ஆட்டம்) தான் விளையாடுவோம். அதில் மாற்றம் இருக்காது.
நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்டுகளில் நாங்கள் என்ன செய்தோமோ அதை இந்தியாவுக்கு எதிரான டெஸ்டிலும் தொடர்வதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்' என்றார். இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தற்போது இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில் கடைசி டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய இங்கிலாந்து அணியினர் தீவிரமாக உள்ளனர். கடந்த ஆண்டு மனஅழுத்தம் காரணமாக இந்த தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் ஒதுங்கி இருந்தது நினைவு கூரத்தக்கது.
- நடாலுக்கு, பிரான்சிஸ்கோ கடும் சவாலாக திகழ்ந்தார்.
- முதல் சுற்றில் செரீனாவை வீழ்த்தி ஹார்மனி டான் வெற்றி பெற்றார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் மிக உயர்ந்ததாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் நடைபெற்று வருகின்றன.
நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரர், ரபேல் நடால் - அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ செருண்டோலோவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நடாலுக்கு, பிரான்சிஸ்கோ கடும் சவாலாக திகழ்ந்தார். இறுதியில் 6-4,6-3,3-6,6-4 என்ற செட் கணக்கில் ரபேல் நடால் வெற்றி பெற்றார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ் வீராங்கனை ஹார்மனி டானை, அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் எதிர்கொண்டார். 40 வயதான செரீனா காயம் காரணமாக ஒரு வருட இடைவெளிக்குப் பின்னர் டென்னிஸ் போட்டியில் பங்கேற்றார். இந்த போட்டியில் 7-5 1-6 7-6 (10-7) என்ற செட்கணக்கில் ஹார்மனி டான் வெற்றி பெற்றார்.
- இந்திய அணியில் தீபக் ஹூடா சதமடித்தார்.
- அயர்லாந்து கேப்டன் 60 ரன்கள் குவித்தார்.
டப்ளின்:
அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. முதல் டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி டப்ளினில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 3 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
அடுத்து களம் இறங்கிய தீபக் ஹூடா சஞ்சு சாம்சனுடன் இணைந்து அயர்லாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். பவுண்டரிகள், சிக்சர்களாக பறக்கவிட்ட இந்த ஜோடி, 2வது விக்கெட்டுக்கு 176 ரன்கள் குவித்து அசத்தியது.
சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 4 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 77 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். தொடர்ந்து அதிரடி காட்டிய தீபக் ஹூடா 57 பந்துகளில் 6 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் 15 ரன்னில் வெளியேறினார். தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல் ஆகியோர் டக் அவுட்டாகினர்.
இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன்களை குவித்தது. இதையடுத்து, 228 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் பால் ஸ்டிர்லிங் 40 ரன்கள் அடித்தார். அதிகபட்சமாக கேப்டன் ஆன்டி பால்பிர்னி 60 ரன்கள் குவித்தார்.
ஹாரி டெக்டர் 39 ரன்களும், ஜார்ஜ் டாக்ரெல் 34 ரன்களும் எடுத்தனர். வெற்றி பெற கடைசி வரை அந்த அணி வீரர்கள் போராடினர். கடைசி ஓவரில் 1 பந்துக்கு 6 ரன் தேவைப்பட்ட நிலையில், அயர்லாந்து 2 ரன் மட்டுமே எடுத்து. 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு அந்த அணி 221 ரன்கள் அடித்தது. இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
- இந்தியாவின் தீபக் ஹூடா அதிரடியாக ஆடி 55 பந்துகளில் சதமடித்தார்.
- தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 176 ரன்களை குவித்தது.
டப்ளின்:
அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகள் மோதும் 2வது டி20 போட்டி டப்ளினில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் களமிறங்கினர். அணியின் எண்ணிக்கை 13 ஆக இருக்கும்போது இஷான் கிஷன் 3 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
அடுத்து இறங்கிய தீபக் ஹூடா சஞ்சு சாம்சனுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இருவரும் அயர்லாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். பவுண்டரிகள், சிக்சர்களாக பறக்கவிட்டனர்.
சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா ஜோடி 2வது விக்கெட்டுக்கு 176 ரன்கள் குவித்து அசத்தியது. சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 4 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 77 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார் யாதவ் 15 ரன்னில் வெளியேறினார்.
அயர்லாந்து பந்துவீச்சை நாலாபுறமும் விரட்டிய தீபக் ஹூடா 57 பந்துகளில் 6 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல் ஆகியோர் டக் அவுட்டாகினர்.
இறுதியில், இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன்களை குவித்தது. இதையடுத்து, 228 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்குகிறது.
- இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் முதலில் அயர்லாந்து அணிக்காக அறிமுகமாகினார்.
- 126 போட்டிக்கு தலைமை தாங்கி 76-ல் வென்று இங்கிலாந்தின் சிறந்த வெள்ளைப்பந்து கேப்டனாக திகழ்ந்தார்.
லண்டன்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனும், இங்கிலாந்து அணிக்காக உலகக் கோப்பையை வென்று தந்த கேப்டனுமான இயான் மோர்கன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அயர்லாந்து அணிக்காக அறிமுகமாகிய மோர்கன், அதன்பின் இங்கிலாந்து அணிக்காக ஆடினார். 2019 உலகக் கோப்பையில் களமிறங்கிய இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி இறுதிப்போட்டியில், நியூசிலாந்தை வீழ்த்தியது. இதன்மூலம், இங்கிலாந்து அணியின் பல்லாண்டு கால உலகக் கோப்பை கனவை நனவாக்கினார் மோர்கன்.
சர்வதேச கிரிக்கெட்டில் மோர்கன் 126 போட்டிகள் தலைமை தாங்கி 76 போட்டிகளில் வென்று இங்கிலாந்தின் சிறந்த வெள்ளைப்பந்து கேப்டனாகத் திகழ்ந்துள்ளார்.
248 ஒருநாள் போட்டிகளில் 7701 ரன்களையும் 115 டி20 போட்டிகளில் 2,458 ரன்களையும் எடுத்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 2 சதம், ஒருநாள் போட்டிகளில் 14 சதம், 47 அரைசதம், டி20-யில் 14 அரைசதம் அடித்துள்ளார்.
இயான் மோர்கன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
- ஸ்மிரிதி மந்தனா 4-வது இடத்திலேயே தொடர்கிறார்.
- ஆஸ்திரேலியா அணியின் சோபியா இடண்டு இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
பெண்கள் டி20 போட்டிக்கான தரவரிசை பட்டியலை இன்று ஐசிசி இன்று வெளியிட்டது. பேட்டிங் தரவரிசையில் இலங்கை டி20 அணியின் கேப்டன் சமாரி அதபத்து ஒரு இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்தார். இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடரில் சமாரி அதபத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் தரவரிசையில் 7-வது இடத்தை பிடித்துள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா சொதப்பியதால் தரவரிசையில் 3-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஸ்மிரிதி மந்தனா 4-வது இடத்திலேயே தொடர்கிறார். ஆஸ்திரேலியா அணியின் சோபியா இடண்டு இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஆல்-ரவுண்டர் பட்டியலிலும் இலங்கை கேப்டன் சமாரி அதபத்து 9-வது இடத்தில் இருந்து 7-வது இடத்துக்கு முன்னேறினார். இந்திய அணியின் தீப்தி வர்மா 3-வது இடத்தில் தொடர்கிறார்.
- டோனி தலைமையில் ஐ.பி.எல். போட்டியில் நான் விளையாடிய போது அவரிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டுள்ளேன்.
- டோனிபோல் நான் அமைதியான அணுகுமுறையை எனது தலைமையில் பின்பற்றத் தொடங்கி உள்ளேன்.
நெல்லை:
டி.என்.பி.எல். போட்டியில் திருச்சி வாரியர்சை வீழ்த்தி திருப்பூர் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கியது.
நெல்லை சங்கர் நகர் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய திருச்சி வாரியர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன் எடுத்தது.
முரளி விஜய் 16 பந்தில் 34 ரன்னும் (6 பவுண்டரி ,1 சிக்சர் ), அமித் சாத்விக் 21 பந்தில் 26 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். அஸ்வின் கிறிஸ்ட் 2 விக்கெட்டும், மோகன் பிரசாத், எம். முகமது, லட்சுமி சத்யநாராயணன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் ஆடிய திருப்பூர் தமிழன்ஸ் 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
துஷ்கர் ரகேஜா 26 பந்தில் 46 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), சுப்பிரமணியன் ஆனந்த் 26 பந்தில் 35 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), எம். முகமது 15 பந்தில் 29 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். சரவணகுமார் 3 விக்கெட்டும், மதிவாணன் 2 விக்கெட்டும், பொய்யாமொழி 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
திருப்பூர் தமிழன்ஸ் அணி ஒரு கட்டத்தில் 14.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 98 ரன் என்ற பரிதாப நிலையில் இருந்தது.
7-வது விக்கெட்டான துஷ்கர் ரகேஜா-எம்.முகமது ஜோடி சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெற வைத்தது. இந்த வெற்றி குறித்து திருப்பூர் அணியின் கேப்டன் ஸ்ரீகாந்த் அணிருதா கூறியதாவது:-
டோனி தலைமையில் ஐ.பி.எல். போட்டியில் நான் விளையாடிய போது அவரிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டுள்ளேன். அவரைப்போல் நான் அமைதியான அணுகுமுறையை எனது தலைமையில் பின்பற்றத் தொடங்கி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆட்டநாயகன் விருது பெற்ற எஸ்.முகமது கூறும்போது, "எந்த சூழலிலும் நான் நெருக்கடியை உணரவில்லை இறுதிவரை களத்தில் நின்றால் வெற்றி பெற முடியும் என்று உறுதியோடு நம்பினோம். அதற்கான பலன் எங்களுக்கு கிடைத்தது" என்றார்.
திருச்சி அணி முதல் தோல்வியை தழுவியது. தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் ராஹில் ஷா கூறும்போது, "எங்களது பேட்டிங்கில் இன்னும் 15-20 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்கலாம். அதே நேரத்தில் எங்களுக்கு கிடைத்த வெற்றிக்கான தருணத்தை நாங்கள் தவறவிட்டு விட்டோம்" என்றார்.
நெல்லையில் டி.என்.பி.எல். ஆட்டங்கள் முடிந்து விட்டன. இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும்.
30-ந் தேதியில் இருந்து திண்டுக்கல்லில் போட்டிகள் நடக்கிறது. அன்று நடைபெறும் ஆட்டங்களில் நெல்லை ராயல் கிங்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் (மாலை 3.15), மதுரை பாந்தர்ஸ்-கோவை கிங்ஸ் (இரவு 7.15) அணிகள் மோதுகின்றன. * * * திருச்சி அணியின் தொடக்க வீரர் முரளி விஜய் தன்னை அவுட் செய்த திருப்பூர் தமிழன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் எம்.முகமதுவை பாராட்டினார்.
- 1974 மற்றும் 1978 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
- 2007-ம் ஆண்டு வரீந்தர் சிங்கிற்கு மதிப்புமிக்க தயான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
புதுடெல்லி:
ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும், உலகக்கோப்பையை வென்ற ஹாக்கி வீரருமான வரீந்தர் சிங் காலமானார். 1970-களில் இந்தியாவின் மறக்கமுடியாத சில வெற்றிகளில் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த வரீந்தர் சிங், ஜலந்தரில் இன்று காலை இயற்கை எய்தினார்.
அவருக்கு வயது 75. கோலாலம்பூரில் 1975 ஆண்களுக்கான ஹாக்கி உலகக் கோப்பையில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியில் வரீந்தர் சிங் முக்கிய வீரராக இருந்தார். 1972 ஆம் ஆண்டு முனிச் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற அணியிலும், 1973 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் நடந்த உலகக் கோப்பையில் வெள்ளிப்பதக்கம் வென்ற அணியிலும் வரீந்தர் சிங் இந்திய ஹாக்கி அணியின் முன்னணி வீரராக திகழ்ந்தார்.
அவர் முறையே 1974 மற்றும் 1978 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் பெற்றார். 1975 மாண்ட்ரீல் ஒலிம்பிக்கில் விளையாடிய இந்திய அணியில் இடம்பெற்றார். 2007ம் ஆண்டு வரீந்தர் சிங்கிற்கு மதிப்புமிக்க தயான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
வரீந்தர் சிங்கின் மறைவுக்கு ஹாக்கி இந்தியா அமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது. "வரீந்தர் சிங்கின் சாதனைகள் உலகெங்கிலும் உள்ள ஹாக்கி சகோதரத்துவத்தால் நினைவுகூரப்படும்" என இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






