என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • நியூசிலாந்து தொடரில் விளையாடிய அதே அணியுடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.
    • 31 வயதான சாம் பில்லிங்ஸ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஷஸ் டெஸ்டில் அறிமுகமானார்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது டெஸ்ட் போட்டி ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பு லீசெஸ்டர்ஷைர் அணிக்கு எதிரான 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடியது. இந்த பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது.

    இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் டெஸ்ட் தொடரில் மோதின. இதில் 3 டெஸ்ட்டிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் அடுத்ததாக இந்தியாவுடன் ஜூலை 1-ந் தேதி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி மோத உள்ளது. இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சாம் பில்லிங்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

    நியூசிலாந்து தொடரில் விளையாடிய அதே அணியுடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது. இந்திய அணிக்கு எதிராக கூடுதலாக சாம் பில்லிங்சை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் சேர்த்துள்ளது.

    31 வயதான சாம் பில்லிங்ஸ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐந்தாவது ஆஷஸ் டெஸ்டில் அறிமுகமானார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடும் லெவனில் அவர் இடம் பெறவில்லை. கீப்பர் பென் ஃபோக்ஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்சில் இங்கிலாந்தின் பிளேயிங் லெவன் அணியில் அவர் சேர்க்கப்பட்டார். இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்ய அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி:-

    பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோவ், ஸ்டூவர்ட் பிராட், ஹாரி புரூக், சாக் கிராலி, பென் ஃபோக்ஸ், ஜாக் லீச், அலெக்ஸ் லீஸ், கிரேக் ஓவர்டன், ஜேமி ஓவர்டன், மேத்யூ பாட்ஸ், ஆலி போப், ஜோ ரூட், சாம் பில்லிங்ஸ்.

    • வங்காளதேசத்திற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    • வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    செயின்ட்லூசியா:

    வெஸ்ட்இண்டீஸ்-வங்காள தேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிராஸ் ஐலெட் மைதானத்தில் நடந்தது.

    வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 234 ரன்னில் 'ஆல்அவுட்'ஆனது. வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங் சில் 408 ரன் குவித்தது. கெய்ல் மேயர்ஸ் 146 ரன்கள் எடுத்தார்.

    174 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய வங்காள தேசம் 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்து இருந்தது.

    நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய வங்காளதேசம் 186 ரன்னில் சுருண்டது. இதனால் வெஸ்ட்இண்டீசுக்கு 13 ரன் மட்டுமே இலக்காக இருந்தது.

    நுருல்ஹசன் அதிகபட்சமாக 60 ரன் எடுத்தார். கேமர்ரோச், அல்ஜாரி ஜோசப், ஜெய்டன் சீல்ஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினார்கள்.

    வெஸ்ட்இண்டீஸ் அணி 2.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 13 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஏற்கனவே முதல் டெஸ்டிலும் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இதனால் 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.

    அடுத்து இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் நடக்கிறது. முதல் ஆட்டம் வருகிற 2-ந்தேதி நடை பெறுகிறது. ஆட்டநாயகனாகவும் தொடர் நாயகனாகவும் கைல் மேயர்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

    இதையடுத்து இரு அணிகளும் டி20 தொடரிலும் ஒருநாள் தொடரிலும் மோத உள்ளது. முதல் டி20 போட்டி ஜூலை 2-ந் தேதி நடக்கிறது.

    • ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து விலகினால் இந்த வயதில் அவர் தனது பணிச்சுமையையும், மனச்சோர்வையும் நிர்வகிக்க நன்றாக இருக்கும்.
    • மூன்று வடிவிலான இந்திய அணியையும் ஒருவரே வழிநடத்த வேண்டும் என்ற கொள்கையை அணி நிர்வாகம் இன்னும் விரும்பினால் அதற்கு ரோகித் சர்மாவே சிறப்பானவர் என்று நான் நம்புகிறேன்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஷேவாக் அளித்த ஒரு பேட்டியில், ' 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக புதிதாக ஒருவரை கொண்டு வர அணி நிர்வாகம் மனதில் நினைத்தால் 35 வயதான ரோகித் சர்மா அந்த பதவியில் இருந்து விலக வேண்டும். அப்படி செய்தால் இந்த வயதில் அவர் தனது பணிச்சுமையையும், மனச்சோர்வையும் நிர்வகிக்க நன்றாக இருக்கும்.

    அத்துடன் 20 ஓவர் போட்டிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட்டால், ரோகித் சர்மா நல்ல ஓய்வு எடுத்து கொண்டு புத்துணர்ச்சியுடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை சிறப்பாக வழிநடத்த உதவிகரமாக இருக்கும். மூன்று வடிவிலான இந்திய அணியையும் ஒருவரே வழிநடத்த வேண்டும் என்ற கொள்கையை இந்திய அணி நிர்வாகம் இன்னும் விரும்பினால் அதற்கு ரோகித் சர்மாவே சிறப்பானவர் என்று நான் நம்புகிறேன்.

    ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடக்க இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் பேட்டிங்கில் முதல் 3 வரிசையில் ரோகித் சர்மா, இஷான் கிஷான், லோகேஷ் ராகுல் ஆடினால் நன்றாக இருக்கும். இளம் வேகப்பந்து வீச்சாளர்களில் உம்ரான் மாலிக் பந்து வீச்சு தான் என்னை அதிகம் கவர்ந்ததாகும். அவரது திறமைக்கு மூன்று வடிவிலான இந்திய அணியிலும் நீண்ட காலம் இடம் பெறுவார்' என்று தெரிவித்தார்.

    • நார்வே, இங்கிலாந்து வீரர்களும் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில், துனிசியா வீராங்கனை வெற்றி பெற்றுள்ளார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில், மிக உயரியதாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் நேற்று தொடங்கின.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில், தென்கொரியாவின் சூன்வோகிவோனை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் இளம் வீரர் கார்லோஸ் அல்கராஸ், ஜெர்மனியின் ஜான் லெனார்ட் ஸ்ட்ரஃப்பை 4-6, 7-5, 4-6, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதேபோல் கேஸ்பர் ரூட் (நார்வே), கேமரூன் நோரி (இங்கிலாந்து) உள்ளிட்டோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜாபியர், சுவீடனின் மிர்ஜாம் பிஜோர்க்லுன்டை 6-1, 6-3 என்ற நேர்செட்டில் வீழ்த்தினார்.

    • திருச்சி அணியின் சரவணகுமார் 3 விக்கெட் வீழ்த்தினார்.
    • திருப்பூர் அணியின் துஷார் ரஹேஜா அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெறச் செய்தார்.

    நெல்லை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நெல்லையில் நடைபெற்ற ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய திருச்சி அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது. முரளி விஜய் 34 ரன்னும், அமித் சாத்விக் 26 ரன்னிம் எடுத்து வெளியேறினர். கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய சரவணகுமார் 17 ரன்னும், மதிவண்ணன் 27 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    158 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தது.

    இதனால் 6 விக்கெட்டுக்கு 98 ரன்களை எடுத்து திணறியது.

    அடுத்து இறங்கிய துஷார் ரஹேஜா, மொஹமது ஜோடி பொறுப்புடன் ஆடியது.

    இறுதியில், திருப்பூர் அணீ 6 விக்கெட்டுக்கு 158 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. துஷார் ரஹேஜா 26 பந்தில் 42 ரன்னுடனும், மொஹமது 15 பந்தில் 29 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.

    • இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜாக் லீச் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
    • நியூசிலாந்தின் டேரில் மிட்செல், இங்கிலாந்தின் ஜோ ரூட் தொடர் நாயகன் விருது வென்றனர்.

    லீட்ஸ்:

    இங்கிலாந்து, நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 329 ரன்கள் எடுத்தது. டேரில் மிட்செல் சதமடித்து அசத்தினார்.

    இங்கிலாந்து சார்பில் ஜாக் லீச் 5 விக்கெட்டும், பிராட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 360 ரன்கள் எடுத்தன. பேர்ஸ்டோவ் 162 ரன்னும், ஓவர்டோன் 97 ரன்னும் எடுத்தனர்.

    நியூசிலாந்து சார்பில் போல்ட் 4 விக்கெட்டும், சவுத்தி 3 விக்கெட்டும், வாக்னர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதைத் தொடர்ந்து 31 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை ஆடியது. அந்த அணி 105.2 ஓவரில் 326 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டாம் லாதம் 76 ரன்னும், டேரில் மிட்செல் 56 ரன்னும் எடுத்தனர். டாம் பிளெண்டல் 88 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இங்கிலாந்து சார்பில் ஜாக் லீச் 5 விக்கெட்டும், மேட்டி பாட்ஸ் 3 விக்கெட்டும் அள்ளினர்.

    296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து 2-வது இன்னிங்சை ஆடியது. அலெக்ஸ் லீஸ் 9 ரன்னிலும், கிராளே 25 ரன்னிலும் அவுட்டாகினர். ஒல்லி போப்புடன், ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்த நிலையில் ஒல்லி போப் 82 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து இறங்கிய பேர்ஸ்டோவ் அதிரடியில் மிரட்டினார். மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மழை நின்றதும் பேர்ஸ்டோவ் பவுண்டரி, சிக்சருமாக விளாசி அணியை வெற்றி பெறச் செய்தார்.

    இறுதியில், இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜோ ரூட் 88 ரன்னும், பேர்ஸ்டோவ் 44 பந்தில் 71 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதன்மூலம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 3-0 என முழுமையாக கைப்பற்றியது.

    • ரூபி திருச்சி வாரியர்ஸ் முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்தது.
    • அதிரடியாக ஆடிய முரளி விஜய் 16 பந்தில் 1 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 34 ரன்னில் வெளியேறினார்.

    நெல்லை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நெல்லையில் நடைபெறும் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, திருச்சி அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான அமித் சாத்விக், முரளி விஜய் அதிரடியாக ஆடினர்.

    அணியின் எண்ணிக்கை 57 ஆக இருக்கும்போது முரளி விஜய் 34 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து அமித் சாத்விக் 26 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய நிதிஷ் ராஜகோபால் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து இறங்கிய ஆதித்ய கணேஷ் 15 ரன்னிலும், அட்னன் கான் 13 ரன்னிலும், ஆண்டனி தாஸ் 13 ரன்னிலும் அவுட்டாகினர்.

    கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய சரவணகுமார் 17 ரன்னும், மதிவண்ணன் 27 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இறுதியில், திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 158 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்குகிறது.

    • டேரில் மிட்செல் 2-வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் 190 ரன்களும் 2-வது இன்னிங்சில் அரை சதமும் அடித்தார்.
    • இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு தொடரில் அதிக ரன்கள் எடுத்த நியூசிலாந்து அணி வீரர்கள் பட்டியலில் அவர் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டி 23-ந் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது.

    முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 329 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக டேரில் மிட்செல் 109 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 360 ரன்கள் எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 31 ரன்கள் முன்னிலை பெற்றது.

    இரண்டாவது இன்னிங்சில் நியூசிலாந்து அணி 326 ரன்கள் எடுத்தது. இதில் டேரில் மிட்செல் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணிக்கு 296 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 2-வது இன்னிங்சை இங்கிலாந்து அணி ஆடி வருகிறது.

    3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் சதமும் 2-வது இன்னிங்சில் அரை சதம் அடித்த டேரில் மிட்செல் சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு தொடரில் அதிக ரன்கள் எடுத்த நியூசிலாந்து அணி வீரர்கள் பட்டியலில் அவர் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    டேரில் மிட்செல் முதல் டெஸ்ட்டின் 2-வது இன்னிங்சில் சதம். 2-வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் 190 ரன்களும் 2-வது இன்னிங்சில் அரை சதமும் அடித்தார். 3-வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் சதமும் 2-வது இன்னிங்சில் அரை சதமும் அடித்தார்.

    ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு தொடரில் 538 ரன்கள் எடுத்து டேரில் மிட்செல் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு மார்டின் டோனெல்லி 462 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிரடியாக விளையாடிய சமாரி அதபத்து அரை சதம் அடித்து அசத்தினார்.
    • இலங்கை கேப்டன் சமாரி அதபத்து சிறந்த வீராங்கனை விருதை தட்டி சென்றார்.

    இலங்கை-இந்தியா பெண்கள் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக கேப்டன் கவூர் 39 ரன்கள் எடுத்தார்.

    இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணியின் விஷ்மி குணரத்னே முதல் ஓவரில் வெளியேறினார். அடுத்து வந்த மாதவி 13 ரன்னில் வெளியேறினார். இந்நிலையில் கேப்டன் சமாரி அதபத்து- நிலாக்ஷி டி சில்வா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    அதிரடியாக விளையாடிய கேப்டன் சமாரி அதபத்து அரை சதம் அடித்து அசத்தினார். நிலாக்ஷி டி சில்வா 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் முறையில் வெளியேறினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சமாரி அதபத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அவர் 48 பந்தில் 80 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதில் 14 பவுண்டரிகளும் 1 சிக்சரும் அடங்கும்.

    17 ஓவரில் இலங்கை அணி 141 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இலங்கை கேப்டன் சமாரி அதபத்து சிறந்த வீராங்கனை விருதை தட்டி சென்றார். 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    • 21 பந்துகள் சந்தித்த மந்தனா 22 ரன்னில் அவுட் ஆனார்.
    • இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கவூர் 39 ரன்கள் எடுத்திருந்தார்.

    இலங்கை-இந்திய பெண்கள் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி ஸ்மிரிதி மந்தனா-ஷஃபாலி வர்மா களமிறங்கினர்.

    முதல் ஓவரிலேயே ஷஃபாலி வர்மா தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த மேகனா-ஸ்மிரிதி மந்தனாவுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினார். 21 பந்துகள் சந்தித்த மந்தனா 22 ரன்னில் அவுட் ஆனார். அவர் அவுட் ஆன சிறுதி நேரத்தில் மேகனா வெளியேறினார்.

    இந்திய அணி 51 ரன்னில் 3 விக்கெட்டை பறிகொடுத்திருந்தது. இந்த நிலையில் கேப்டனுடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி சேர்ந்து ரன் வேகத்தை அதிகரித்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 33 ரன்னில் அவுட் ஆனார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கவூர் 39 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 3 பவுண்டரி 1 சிக்சர் அடங்கும்.

    20 ஓவர் முடிவில் இந்திய பெண்கள் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடி வருகிறது.

    • இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் மிட்செல் ஸ்டார்க் விளையாடுவது சந்தேகம்.
    • டெஸ்ட் தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டிகள் என்பதால் மிகவும் முக்கியமானதாகும்.

    ஆஸ்திரேலியா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 தொடரை ஆஸ்திரேலியா அணியும் ஒருநாள் தொடரை இலங்கை அணியும் கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் ஜூன் 29-ம் தேதி தொடங்குகிறது.

    ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகிய ஆஸ்திரேலியா அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் தொடரில் மீண்டும் இணைகிறார். வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் டி20 தொடரின் போது விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் இருந்து விலகினார்.

    உடல் தகுதியை இன்னும் நிரூப்பிக்காததால் இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் மிட்செல் ஸ்டார்க் விளையாடுவது சந்தேகம். இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டிகள் என்பதால் மிகவும் முக்கியமானதாகும்.

    • உலகக்கோப்பைக்கான லோகோவை சிலர் அனுமதியின்றி தங்களது காரின் நம்பர் பிளேட்டில் பதித்து வருவதாக குற்றம் எழுந்தது.
    • லோகோவை உரிய அனுமதியின்றி வாகன நம்பர் பிளேட்டுகளில் பயன்படுத்தக் கூடாது என கத்தார் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கத்தார்:

    உலகக்கோப்பை கால்பந்து போட்டியானது கத்தாரில் நவம்பர் 21 முதல் டிசம்பர் 18 வரை நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பைக்கான லோகோவை சிலர் அனுமதியின்றி தங்களது காரின் நம்பர் பிளேட்டில் பதித்து வருவதாக குற்றம் எழுந்தது. இந்த நிலையில், உரிய அனுமதியின்றி உலகக்கோப்பை லோகோவை கார் நம்பர் பிளேட்டில் வைத்திருக்கக்கூடாது என்று கத்தார் பொதுமக்களை எச்சர்க்கை விடுத்துள்ளது.

    இந்த லோகோவானது சர்வதேச கால்பந்து சம்மேளனத்தால் (பிபா) அங்கீகரிக்கப்பட்ட பிராண்டட் நம்பர் பிளேட்டுகளில் சிறப்பு பதிப்புகள் ஏலம் விடப்பட்டு பதிவு செய்யப்பட்டவை என்று கத்தார் கூறுகிறது.

    பதிவு செய்யப்படாத வாகனங்களில் லோகோவை நகலெடுத்து அமைப்பது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. மீறினால் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு அந்நாட்டு அமைச்சகம் கடுமையாக எச்சரித்துள்ளது.

    ×