என் மலர்
விளையாட்டு
- ரஞ்சி கோப்பையை வென்றது தனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தருணம் என மத்தியபிரதேச அணியின் கேப்டன் கூறினார்.
- 41 முறை சாம்பியனான மும்பையை தோற்கடித்ததால் இந்த வெற்றியை அவர்கள் திருவிழா போல் கொண்டாடுகிறார்கள்.
பெங்களூரு:
87-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை- மத்தியபிரதேச அணிகள் இடையிலான இறுதி ஆட்டம் கடந்த 22-ந்தேதி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே மும்பை 374 ரன்களும், மத்தியபிரதேசம் 536 ரன்களும் குவித்தன. 162 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய மும்பை அணி 4-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் மும்பை அணி 57.3 ஓவர்களில் 269 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் மத்தியபிரதேச அணிக்கு 108 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய பிரதேச அணி 2-வது இன்னிங்சில் 29.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 108 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று மகுடம் சூடியது.
1934-35-ம் ஆண்டு முதல் நடந்து வரும் ரஞ்சி கிரிக்கெட்டில் மத்தியபிரதேச அணி கோப்பையை உச்சிமுகர்வது இதுவே முதல்முறையாகும். அதுவும் பலம் வாய்ந்த 41 முறை சாம்பியனான மும்பையை தோற்கடித்ததால் இந்த வெற்றியை அவர்கள் திருவிழா போல் கொண்டாடுகிறார்கள். முதல் இன்னிங்சில் சதம் அடித்த மத்திய பிரதேச வீரர் சுபம் ஷர்மா ஆட்டநாயகன் விருதையும், 6 ஆட்டத்தில் 4 சதம் உள்பட 982 ரன்கள் குவித்த மும்பை வீரர் சர்ப்ராஸ்கான் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.
இந்த வெற்றி குறித்து மத்தியபிரதேச கேப்டன் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா கூறியதாவது;- "எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைக்கிறோம். அனைவரும் பரவசத்துடன் உணர்ச்சி மயமாக இருக்கிறோம். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தருணம் இது. மத்தியபிரதேச அணி ரஞ்சி கோப்பையை முதல்முறையாக வென்றதன் மூலம் காலம் காலமாக ஒரு குறிப்பிட்ட அணி தான் வெல்லும் என்ற நிலைமை போய் விட்டது. கேப்டனாக இது தான் எனது முதல் ரஞ்சி தொடர். பயிற்சியாளர் சந்திரகாந்திடம் நிறைய கற்று இருக்கிறேன். இந்த கூட்டணி தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்" என்றார்.
- விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடக்கிறது.
- செரீனா வில்லியம்ஸ் ஓராண்டுக்கு பிறகு களம் திரும்புகிறார்.
லண்டன்:
ஆண்டுதோறும் 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடக்கிறது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, அவர்களுக்கு ஆதரவு தந்த பெலாரஸ் ஆகிய இரு நாட்டு வீரர், வீராங்கனைகள் விம்பிள்டனில் பங்கேற்க போட்டி அமைப்பு குழு தடை விதித்து விட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் வெற்றிக்கு தரவரிசை புள்ளிகள் வழங்கப்படாது என்று அறிவித்தது. இந்த சலசலப்புக்கு மத்தியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் அங்கு முகாமிட்டு தங்களை தயார்படுத்தி வருகிறார்கள்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச்சுக்கும் (செர்பியா), முன்னாள் சாம்பியன் ரபெல் நடாலுக்கும் (ஸ்பெயின்) இடையே கடும் போட்டி நிலவுகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் 'நம்பர் ஒன்' வீராங்கனையும், சமீபத்தில் பிரெஞ்சு ஓபனை வென்றவருமான இகா ஸ்வியாடெக் (போலந்து) பட்டம் வெல்லபிரகாசமான வாய்ப்புள்ளது.
ஆனால் இந்த முறை அதிக கவனத்தை ஈர்த்துள்ள செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) ஓராண்டுக்கு பிறகு களம் திரும்புகிறார். 40 வயதான செரீனா 7 முறை விம்பிள்டன் உள்பட 23 கிராண்ட்ஸ்லாம் வென்ற அனுபவசாலி. இன்னும் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் கைப்பற்றினால் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவரான ஆஸ்திரேலியாவின் மார்கரேட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்து விடுவார்.
இந்த விம்பிள்டன் போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.387 கோடியாகும். இதில் ஒற்றையர் பிரிவில் கோப்பையை ஏந்தும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.19¼ கோடி கிடைக்கும். 2-வது இடத்தை பெறுவோருக்கு ரூ.10 கோடி வழங்கப்படும். இரட்டையர் பிரிவில் வெல்லும் ஜோடி ரூ.5¼ கோடியை பரிசாக பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- தொடக்க ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி சூப்பர் ஓவரில் சேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்தது.
- திருப்பூர் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் வேட்கையில் இருக்கிறது.
நெல்லை:
6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை சங்கர் நகர் மைதானத்தில் நடந்து வருகிறது.
இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி வாரியர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.
தொடக்க ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி சூப்பர் ஓவரில் சேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்தது. 2-வது போட்டியில் திருச்சி வாரியர்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தியது.
3-வது ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் 4 விக்கெட்டில் சேப்பாக் சூப்பர் கில்லீசையும் , 4-வது போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் 5 விக்கெட்டில் சேலத்தையும் தோற்கடித் தன.
நேற்று நடந்த 5-வது ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் கோவையை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. முதலில் ஆடிய கோவை கிங்ஸ் 8 விக்கெட் இழப்புக்கு 188 ரன் குவித் தது. பின்னர் விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்தது.
இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 6-வது லீக் ஆட்டத்தில் ரஹில்ஷா தலைமையிலான திருச்சி வாரியர்ஸ்-அணிருதா தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.
திருச்சி அணி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. திருப்பூர் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் வேட்கையில் இருக்கிறது.
- இந்திய அணி முதல் இன்னிங்சில், 8 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்தது.
- நான்கு இந்திய வீரர்கள் லீசெஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடினார்கள்.
லீசெஸ்டர்:
கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, அந்நாட்டின் லீசெஸ்டர்ஷைர் அணிக்கு எதிராக 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றது.
இதில் இந்திய வீரர்கள் ரிஷப்பண்ட், புஜாரா, பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் லீசெஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடினார்கள். முதல் இன்னிங்சில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதிபட்சமாக ஸ்ரீகர் பாரத் 70 ரன்கள் குவித்தார்.
பின்னர் களமிறங்கிய லீசெஸ்டர்ஷைர் அணி 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 364 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதில் முன்னாள் கேப்டன் விராட் கோலி 67 ரன்கள் எடுத்தார். ரவீந்திர ஜடேஜா 56 ரன் அடித்தார். நேற்று நடைபெற்ற கடைசி நாள் ஆட்டத்தில் லீசெஸ்டர்ஷைர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்திருந்த போது போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஜூலை 1 ஆம் தேதி தொடங்குகிறது.
- மழையால் தாமதமாக தொடங்கிய ஆட்டம் 12 ஓவராக குறைக்கப்பட்டது.
- முதலில் விளையாடிய அயர்லாந்து அணியில் ஹாரி டெக்டர் 64 ரன்கள் குவித்தார்.
டப்ளின்:
ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட்கோலி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெறவில்லை.
இந்தியா, அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி டப்ளினில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய இருந்த நிலையில் மழை பெய்ததால், தாமதமாக தொடங்கிய ஆட்டம் 12 ஓவராக குறைக்கப்பட்டது.
முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணி வீரர் ஹாரி டெக்டர் 33 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார்.
பின்னர் 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் தீபக் ஹுடா 29 பந்துகளில் 47 ரன்களை எடுத்ததுடன், கடைசிவரை களத்தில் இருந்தார். மற்றொரு வீரர் இஷான் கிஷன் 26 ரன்களும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 24 ரன்களும் அடித்தனர்.
9.2 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து 111 ரன்களை குவித்தது. இதையடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
- மழையால் தாமதமாக தொடங்கிய ஆட்டம் 12 ஓவராக குறைக்கப்பட்டது.
- முதலில் விளையாடிய அயர்லாந்து அணியில் ஹாரி டெக்டர் 64 ரன்கள் குவித்தார்.
டப்ளின்:
ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக இரண்டு டி 20 போட்டிகளில் விளையாடுகிறது.
இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட்கோலி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெறவில்லை.
இந்தியா, அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி டப்ளினில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய இருந்த நிலையில் மழை பெய்ததால், ஆட்டம் தாமதமாக தொடங்கியது. இதையடுத்து 12 ஓவர் என்ற அளவில் ஆட்டம் குறைக்கப்பட்டது.
பின்னர் விளையாடிய அயர்லாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணி வீரர் ஹாரி டெக்டர் 33 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். இதையடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கி விளையாடியது.
- திண்டுக்கல் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தனர்.
- அதிரடியாக ஆடிய ஹரி நிஷாந்த் 36 பந்தில் 2 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 60 ரன்கள் குவித்தார்.
நெல்லை:
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நெல்லை சங்கர் நகர் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை எடுத்தது. பொறுப்புடன் ஆடிய முகிலேஷ் 25 பந்தில் 49 ரன்கள் எடுத்தார். சுரேஷ் குமார் 37 ரன்னும், கங்கா ஸ்ரீதர் ராஜு 33 ரன்னும், ஷிஜித் 30 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 189 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். அணியின் எண்ணிக்கை 100 ஆக இருந்தபோது ஹரி நிஷாந்த் 60 ரன்னில் அவுட்டானார். விஷால் வைத்யா 49 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய விவேக் 10 பந்தில் 3 சிக்சர் உள்பட 22 ரன் எடுத்து வெளியேறினார்.
இறுதியில், திண்டுக்கல் அணி 5 விக்கெட் இழப்புக்கு 190 ரன்களை எடுத்து முதல் வெற்றியைப் பதிவு செய்தது. பிரதீப் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
- இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 2 டி 20 போட்டியில் ஆடுகிறது.
- இந்திய அணியில் இன்று அறிமுக வீரராக இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் களம் இறங்குகிறார்.
டப்ளின்:
ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக இரண்டு டி 20 போட்டியில் ஆடுகிறது.
இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட்கோலி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெறவில்லை.
இந்தியா, அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி டப்ளினில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்திய அணியில் அறிமுக வீரராக இன்று உம்ரான் மாலிக் களம் இறங்குகிறார்.
இந்நிலையில், மழை பெய்ததால் ஆட்டம் தாமதமாக தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- லைகா கோவை கிங்ஸ் பவர் பிளேயில் விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் எடுத்தது.
- அதிரடியாக ஆடிய முகிலேஷ் 25 பந்தில் 4 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 49 ரன்னில் வெளியேறினார்.
நெல்லை:
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நெல்லை சங்கர் நகர் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, லைகா கோவை கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான கங்கா ஸ்ரீதர் ராஜு, சுரேஷ் குமார் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.
அணியின் எண்ணிக்கை 67 ஆக இருக்கும்போது சுரேஷ் குமார் 37 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து கங்கா ஸ்ரீதர் ராஜு 33 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய சாய் சுதர்சன் 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து இறங்கிய ஷிஜித் சந்திரன், முகிலேஷ் அதிரடியாக ஆடினர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்தது. ஷிஜித் 30 ரன்னில் அவுட்டானார்.
முகிலேஷ் 25 பந்தில் 4 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 49 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 189 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்குகிறது.
- வெஸ்ட் இண்டீசின் கைல் மேயர்ஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.
- வெஸ்ட் இண்டீஸ் அணி 2ம் நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 340 ரன்கள் எடுத்தது.
செயிண்ட் லூசியா:
வங்காளதேச அணி டெஸ்ட், ஒருநாள், டி20 தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்று விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய வங்களாதேச அணி முதல் இன்னிங்சில் 234 ரன்களில் ஆல் அவுட் ஆனது. லிட்டன் தாஸ் 53 ரன்னிலும், தமிம் இக்பால் 46 ரன்னிலும் வெளியேறினர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ், அல்ஜாரி ஜோசப் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 67 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் பிராத்வெய்ட் அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். கேம்பெல் 45 ரன்னும், பிளாக்வுட் 40 ரன்னும் எடுத்தனர். அடுத்து இறங்கிய கைல் மேயர்ஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.
இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றுள்ளது. கைல் மேயர்ஸ் 126 ரன்னும், ஜோஷ்வா டா சில்வா 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
- சீனா 2014 மற்றும் 2018 -ம் ஆண்டுகளில் செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவில் தங்கம் வென்றுள்ளது.
- உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ஏற்கனவே ரஷியாவுக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
பீஜிங்:
சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக சீன அணி அறிவித்துள்ளது. ஆனால்,அதற்கான காரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இதற்கு முன்னதாக, 2014, 2018-ம் ஆண்டுகளில் செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவின் தங்கம் வென்றுள்ளது. குறிப்பாக, சீன மகளிர் அணியினர் இதற்கு முன் நடந்த இரண்டு தொடர்களிலும் தங்கம் வென்றிருந்தனர்.
உக்ரைன் மீது போர் தொடுத்ததன் காரணமாக ஏற்கனவே ரஷியா அணிக்கு செஸ் ஒலிம்பியாட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவுக்கு தங்க பதக்க வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.
- மத்திய பிரதேச அணியில் 3 வீரர்கள் சதம் அடித்து முத்திரை பதித்தனர்.
- 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி மத்திய பிரதேசம் முதல் முறையாக ரஞ்சிக் கோப்பையை வென்றது.
பெங்களூரு:
பெங்களூரில் நடைபெற்று வரும் ரஞ்சிக் கோப்பை இறுதிப்போட்டியில் மும்பை, மத்திய பிரதேச அணிகள் மோதின.
மும்பை அணி முதல் இன்னிங்சில் 374 ரன் குவித்தது. சர்பிராஸ் கான் சதமடித்து 134 ரன் எடுத்தார்.
மத்திய பிரதேசம் சார்பில் கவுரவ் யாதவ் 4 விக்கெட், அகர்வால் 3 விக்கெட், சரன்ஷ்ஜ் ஜெயின் 2 விக்கெட் வீழ்த்தினர்.
அதன்பின், முதல் இன்னிங்சை ஆடிய மத்திய பிரதேசம் முதல் இன்னிங்சில் 536 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ரஜத் படிதார், யாஷ் துபே 133 ரன்னும், ரஜத் படிதார் 122 ரன்னும், சுபம் சர்மா 116 ரன்னும் குவித்தனர். சரன்ஷ் ஜெயின் 57 ரன்கள் எடுத்தார்.
மும்பை அணி சார்பில் ஷாம்ஸ் முலானி 5 விக்கெட்டும், துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டும், மோஹித் அவஸ்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய மும்பை 2வது இன்னிங்சில் 269 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சுவேத் பார்கர் 51 ரன்னும், சர்ப்ராஸ் கான் 45 ரன்னும், பிரித்வி ஷா 44 ரன்னும் எடுத்தனர்.
மத்திய பிரதேசம் சார்பில் குமார் கார்த்திகேயா 4 விக்கெட்டும், கவுரவ் யாதவ், சஹானி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மத்திய பிரதேசம் களமிறங்கியது. 29.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் வலுவான மும்பை அணியை வீழ்த்தி முதல் முறையாக ரஞ்சிக் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
மத்திய பிரதேச வீரர் சுபம் சர்மா ஆட்ட நாயகன் விருதும், மும்பையை சேர்ந்த சர்ப்ராஸ் கான் தொடர் நாயகன் விருதும் வென்றனர்.






