என் மலர்

  கிரிக்கெட்

  டி.என்.பி.எல். கிரிக்கெட்: திருச்சி வாரியர்ஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் இன்று மோதல்
  X

  டி.என்.பி.எல். கிரிக்கெட்: திருச்சி வாரியர்ஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் இன்று மோதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தொடக்க ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி சூப்பர் ஓவரில் சேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்தது.
  • திருப்பூர் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் வேட்கையில் இருக்கிறது.

  நெல்லை:

  6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை சங்கர் நகர் மைதானத்தில் நடந்து வருகிறது.

  இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி வாரியர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

  ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

  தொடக்க ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி சூப்பர் ஓவரில் சேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்தது. 2-வது போட்டியில் திருச்சி வாரியர்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தியது.

  3-வது ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் 4 விக்கெட்டில் சேப்பாக் சூப்பர் கில்லீசையும் , 4-வது போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் 5 விக்கெட்டில் சேலத்தையும் தோற்கடித் தன.

  நேற்று நடந்த 5-வது ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் கோவையை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. முதலில் ஆடிய கோவை கிங்ஸ் 8 விக்கெட் இழப்புக்கு 188 ரன் குவித் தது. பின்னர் விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்தது.

  இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 6-வது லீக் ஆட்டத்தில் ரஹில்ஷா தலைமையிலான திருச்சி வாரியர்ஸ்-அணிருதா தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

  திருச்சி அணி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. திருப்பூர் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் வேட்கையில் இருக்கிறது.

  Next Story
  ×