என் மலர்
விளையாட்டு
- இலங்கை அணியில் நிலாஷி டி சில்வா 43 ரன்கள் எடுத்தார்.
- இந்திய அணி தரப்பில் தீப்தி வர்மா 3, பூஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்திய மகளிர் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்திய மகளிர் அணி கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன் படி இலங்கை அணி வீராங்கனை களமிறங்கினார். கேப்டன் சமாரி அதபத்து 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹன்சிமா கருரத்ணே 0 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து ஹசினி பேரேரா-மாதவி ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடியை தீப்தி வர்மா பிரித்தார். இலங்கை அணி 63 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹசினி எல்பிடபிள்யூ முறையில் வெளியேற சிறிது நேரத்தில் கவிஷா தில்ஹாரி கவூர் பந்து வீச்சில் அவுட் ஆனார்.
அடுத்ததாக நிலாக்ஷி டி சில்வா பொறுப்புடன் விளையாடினார். ஒரு முனையில் இவர் நிலைத்து ஆட மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன. மாதவி 28, அனுஷ்கா சஞ்சீவனி 18, ஓஷதி ரணசிங்கே 8, ராஷ்மி 7, ரணவீரா 12 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க இலங்கை அணி 48.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக நிலாஷி டி சில்வா 43 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி தரப்பில் தீப்தி வர்மா 3, பூஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி விளையாடி வருகிறது.
- டோனி இந்திய அணியை முதன் முறையாக வழி நடத்துவதற்கு முன்பு எந்த அணிக்கும் கேப்டனாக இருந்ததில்லை என்று என்னிடம் தெரிவித்தார்.
- கடந்த கால வெற்றிகளை பார்க்க மாட்டோம். ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெறவே விரும்புவோம்.
பர்மிங்காம்:
கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த போது கொரோனா காரணமாக 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தள்ளி வைக்கப்பட்டது.
இந்த டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஸ்பஸ்டனில் இந்திய நேரடிப்படி இன்று மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது.
சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி பலம் வாய்ந்து காணப்படுகிறது. இதனால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா தொற்று குணமாகததால் இந்த டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து தற்காலிக கேப்டனாக வேகப்பந்து வீச்சாளரான பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் பும்ரா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
இங்கிலாந்து அணி எப்படி விளையாடுகிறது என்பதில் நான் கவனம் செலுத்தவில்லை. எங்கள் பலம் பற்றி எங்களுக்கு தெரியும். எங்களது பணியை சிறப்பாக செய்தால், எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையிலும் வெற்றி பெற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
எனவே எங்கள் அணி மீது அதிக கவனம் செலுத்த விரும்புகிறோம். மற்ற அணி என்ன செய்கிறது என்பதை பற்றி வீரர்களுக்கு மன ரீதியாக அழுத்தம் கொடுக்க விரும்புவில்லை.
நம் பணியை நன்றாக செய்தால் அதற்கான பலன் நம் இடத்தில் வந்து விழும். சரியான மனநிலையில் எங்களை வெல்வது மிகவும் கடினம்.
கடந்த கால வெற்றிகளை பார்க்க மாட்டோம். ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெறவே விரும்புவோம். இந்த தருணத்தில் வெற்றி பெற முயற்சிக்கிறோம்.
அழுத்தம் இருக்கும் போது பெறப்படும் வெற்றி மிகவும் நன்றாக இருக்கும். நான் எப்போதும் பொறுப்புகளுக்கு தயாராக இருக்கிறேன். கடினமான சாவல்களை எதிர்கொள்ள விரும்புகிறேன்.
நான் பல கிரிக்கெட் வீரர்களிடம் பேசி இருக்கிறேன். டோனியிடம் பேசியது எனக்கு நினைவிருக்கிறது. அவர் இந்திய அணியை முதன் முறையாக வழி நடத்துவதற்கு முன்பு எந்த அணிக்கும் கேப்டனாக இருந்ததில்லை என்று என்னிடம் தெரிவித்தார். தற்போது அவர் எல்லா காலத்திலும் மிகவும் வெற்றி கரமான கேப்டன்களில் ஒருவராக திகழ்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்திய வீராங்கனையிடம் தவறாக நடக்க முயன்ற பயிற்சியாளர் பயிற்சியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
- சர்ச்சையில் சிக்கி இருக்கும் பயிற்சியாளரின் பெயர் வெளியிடப்படவில்லை.
புதுடெல்லி:
17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் உள்ள புவனேஸ்வர், கோவா, நவி மும்பையில் அக்டோபர் 11-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய ஜூனியர் பெண்கள் கால்பந்து அணி ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள அணிகளுடன் மோதுகிறது.
தற்போது இந்திய அணியினர் நார்வேயில் தங்கி இருந்து விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய அணியின் இளம் வீராங்கனையிடம் பயிற்சியாளர் ஒருவர் தவறாக நடக்க முயன்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தை நிர்வகித்து வரும் நிர்வாக கமிட்டி அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
சம்பந்தப்பட்ட பயிற்சியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அவர் நார்வேயில் இருந்து உடனடியாக நாடு திரும்பி, மேல்விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சர்ச்சையில் சிக்கி இருக்கும் பயிற்சியாளரின் பெயர் வெளியிடப்படவில்லை. இருப்பினும் அது உதவி பயிற்சியாளர் அலெக்ஸ் அம்புரோஸ் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
- ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 70.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 321 ரன்கள் எடுத்தது.
- இரண்டும் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.
ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் முதல் டெஸ்ட்டில் விளையாடி வருகின்றனர். டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்சில் 59 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆஸ்திரேலியா தொடங்கியது.
ஆஸ்திரேலியா அணி 70.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 321 ரன்கள் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 109 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்நிலையில் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. நாதன் லயன் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி 113 ரன்னில் சுருண்டது. இதனால் 4 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது.
5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி ஆடியது. 4 பந்துகள் மட்டுமே சந்தித்த ஆஸ்திரேலியா 10 ரன்கள் எடுத்தது. இதில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் அடங்கும். இதனால் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டும் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.
- சர்வதேச டென்னிசில் அவர் தொடர்ச்சியாக பெற்ற 37-வது வெற்றி இதுவாகும்.
- முன்னணி வீரர் பாடிஸ்டா அகுத் (ஸ்பெயின்) கொரோனா பாதிப்பு காரணமாக கடைசி நேரத்தில் விலகினார்.
லண்டன்:
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்றில் 5-ம் நிலை வீரர் சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-2,6-3,6-7 என்ற நேர் செட்டில் ஜோர்டான் தாம்சனை (ஆஸ்திரேலியா) வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
முன்னணி வீரர் பாடிஸ்டா அகுத் (ஸ்பெயின்) கொரோனா பாதிப்பு காரணமாக கடைசி நேரத்தில் விலகியதால் அவரை எதிர்த்து ஆட இருந்த டேனியல் காலன் (கொலம்பியா) களம் இறங்காமலேயே 3-வது சுற்றை எட்டினார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் போராடி பட்டினாமா கெர்கோவை (நெதர்லாந்து) வெளியேற்றி 3-வது சுற்றுக்குள் கால்பதித்தார். சர்வதேச டென்னிசில் அவர் தொடர்ச்சியாக பெற்ற 37-வது வெற்றி இதுவாகும்.
- நீரஜ் சோப்ராவின் முந்தைய சாதனையை தற்போது அவரே முறியடித்துள்ளார்.
- ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.94 மீட்டர் தூரம் எறிந்து புதிய தேசிய சாதனை படைத்தார்.
ஸ்டாக்ஹோம்:
ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.94 மீட்டர் தூரம் எறிந்து புதிய தேசிய சாதனை படைத்தார். இதன் மூலம் இந்த போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 90.31 மீட்டர் தூரம் எறிந்து முதல் இடத்தைப் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.
பின்லாந்தில் நடைபெற்ற பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டியில் 89.30 மீட்டர் தூரம் எறிந்து தேசிய சாதனை படைத்திருந்தார். நீரஜ் சோப்ராவின் முந்தைய சாதனையை தற்போது அவரே முறியடித்துள்ளார்.
- டெஸ்டில் வெற்றி பெற்றால் அது புதிய வரலாறாக பதிவாகும்.
- இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் தொடர் ஒன்றில் 3 டெஸ்டுகளில் வெற்றி பெற்றது கிடையாது.
பர்மிங்காம்:
இந்திய கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட், மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இந்த ஒரே டெஸ்ட் 2021-ம் ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட போட்டியாகும். கடந்த ஆண்டு ஆகஸ்டு- செப்டம்பரில் இந்திய அணி இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது.
இதில் முதல் 4 டெஸ்டுகளில் 2-ல் இந்தியாவும், ஒன்றில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. மற்றொரு போட்டி 'டிரா'வில் முடிந்ததால் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய பயிற்சியாளர்கள் மட்டத்தில் கொரோனா ஊடுருவியதால் கலக்கமடைந்த இந்திய வீரர்கள் இறுதி டெஸ்டில் விளையாட மறுத்தனர்.
இதனால் தள்ளிவைக்கப்பட்ட அந்த டெஸ்ட் தான் தற்போது நடக்க உள்ளது. இதன்படி இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்திய அணி கடைசியாக 2007-ம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையில் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது.
15 ஆண்டுக்கு பிறகு மீண்டும் அங்கு டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பு கனிந்துள்ளது. மேலும், இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் தொடர் ஒன்றில் 3 டெஸ்டுகளில் வெற்றி பெற்றது கிடையாது. எனவே இந்த டெஸ்டில் வெற்றி பெற்றால் அது புதிய வரலாறாக பதிவாகும்.
இந்த போட்டிக்கான இரு அணி வீரர்கள் பட்டியல் வருமாறு:-
இந்தியா: சுப்மான் கில், ஹனுமா விஹாரி அல்லது மயங்க் அகர்வால், புஜாரா, ஸ்ரேயாஸ் அய்யர், விராட் கோலி, ரிஷப் பண்ட், ஷர்துல் தாக்குர் அல்லது அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), முகமது ஷமி, முகமது சிராஜ் அல்லது உமேஷ் யாதவ்.
இங்கிலாந்து: அலெக்ஸ் லீஸ், ஜாக் கிராவ்லி, ஆலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ், மேத்யூ போட்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜாக் லீச். போட்டியின் போது முதல் இரு நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடைசி 3 நாட்கள் வெயில் அடிக்கும் என்று அங்குள்ள வானிலை மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன
- இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் ஜூலை 7-ம் தேதி தொடங்குகிறது.
- இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் ஜூலை 12-ம் தேதி தொடங்குகிறது.
லண்டன்:
இந்திய கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.
கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட இந்தியா, இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டனில் இன்று தொடங்குகிறது.
3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூலை 7, 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 12, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.
இங்கிலாந்து அணியுடனான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (கீப்பர்), ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் பட்டேல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்
2வது மற்றும் 3வது டி20 போட்டிக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக் (கீப்பர்), ரிஷப் பண்ட்(கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக்
இங்கிலாந்து அணியுடனான 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், ஜே.பிரசித் கிருஷ்ணா, முகமது ஷமி, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.
- உலகின் நம்பர் 1 வீரரான நோவக் ஜோகோவிச் 3வது சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறியுள்ளார்.
- முன்னணி வீரரான ஆன்டி முர்ரே 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், லிதுவேனியா வீரர் பெரான்கிசை எதிர்கொண்டார். இதில் 6-4, 6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற நடால் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு சுற்றில் 5-ம் நிலை கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சனுடன் மோதினார். இதில் 6-2, 6-3, 7-5 என்ற நேர்செட்டில் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்.
- ரோகித் சர்மாவுக்கு நேற்று மீண்டும் கொரோனா பரிசோதனை நடைபெற்றது.
- ரோகித் சர்மா இன்னும் முழுமையாக குணமடையவில்லை.
பர்மிங்காம்:
கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் ஜூலை 1-ம் தேதி தொடங்குகிறது
இதற்கிடையே, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
இந்நிலையில் கேப்டன் ரோகித் சர்மா இன்னும் முழுமையாக குணமடையாததால், இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார். அவர் இந்தப் போட்டியிலிருந்து விலகியுள்ளார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பு வேகப்பந்து வீச்சாளரான பும்ராவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் பும்ரா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.
28 வயதான பும்ரா இதற்கு முன்பு எந்த அணிக்கும் கேப்டனாக இருந்ததில்லை. மேலும், 1987-ம் ஆண்டு கபில்தேவுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்தும் வேகப்பந்து வீச்சாளர் என்ற சிறப்பையும் அவர் பெற உள்ளார்.
- மதுரை அணியின் கேப்டன் சதுர்வேத் அதிரடியாக ஆடி 45 பந்துகளில் 4 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 75 ரன்கள் குவித்தார்.
- கோவை அணிக்கு எதிராக மதுரை அணியின் சிலம்பரசன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
திண்டுக்கல்:
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கலில் நடைபெற்ற 2வது ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ், சீசம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி கேப்டன் பீல்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்தது. முகிலேஷ் அபாரமாக ஆடி 38 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 50 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சுரேஷ் குமார் 22 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 46 ரன்கள் குவித்தார்.
மதுரை அணி சார்பில் சிலம்பரசன் 3 விக்கெட்டும், சன்னி சந்து, கிரன் ஆகாஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்.
இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஆதித்யா, பால்சந்ஹர் அனிருத் ஆகியோர் டக் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய விக்கெட் கீப்பர் அருண் கார்த்திக் நிதானமாக ஆடினார்.
கேப்டன் சதுர்வேத் பொறுப்புடன் ஆடினார். இவர் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தார். கார்த்திக் 38 ரன்னில் அவுட்டானார்.
அபாரமாக ஆடிய சதுர்வேத் அரை சதமடித்து, 75 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், மதுரை பாந்தர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜெகதீசன் கவுசிக் 27 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். மதுரை அணி பெறும் 2வது வெற்றி இதுவாகும்.
- கோவை அணியில் அதிரடியாக ஆடிய முகிலேஷ், 38 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 50 ரன்கள் குவித்தார்.
- மதுரை அணி தரப்பில் சிலம்பரசன் 3 விக்கெட், சன்னி சந்து, கிரன் ஆகாஷ் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்
திண்டுக்கல்:
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கலில் நடைபெறும் 2வது ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ், சீசம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி கேப்டன், பீல்டிங்கைத் தேர்வு செய்ய, கோவை அணி முதலில் பேட்டிங் செய்தது.
கோவை அணியின் துவக்க வீரர் கங்கா ஸ்ரீதர் ராஜு, சாய் சுதர்சன் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் ஏமாற்றம் அளித்தனர். சஜித் சந்திரன் 9 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம், மறுமுனையில் சுரேஷ் குமார் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆறுதல் அளித்தார். அவர் 22 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 46 ரன்கள் குவித்தார்.
அதன்பிறகு முகிலேஷ் அபாரமாக ஆடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. தொடர்ந்து அதிரடி காட்டிய முகிலேஷ், 38 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 50 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் கோவை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்தது.
மதுரை அணி தரப்பில் சிலம்பரசன் 3 விக்கெட் கைப்பற்றினார். சன்னி சந்து, கிரன் ஆகாஷ் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். வருண் சக்கரவர்த்தி ஒரு விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.






