search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    எங்களது பலம் பற்றி தெரியும்: இங்கிலாந்து அணி மீது கவனம் செலுத்தவில்லை- கேப்டன் பும்ரா
    X

    பும்ரா

    எங்களது பலம் பற்றி தெரியும்: இங்கிலாந்து அணி மீது கவனம் செலுத்தவில்லை- கேப்டன் பும்ரா

    • டோனி இந்திய அணியை முதன் முறையாக வழி நடத்துவதற்கு முன்பு எந்த அணிக்கும் கேப்டனாக இருந்ததில்லை என்று என்னிடம் தெரிவித்தார்.
    • கடந்த கால வெற்றிகளை பார்க்க மாட்டோம். ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெறவே விரும்புவோம்.

    பர்மிங்காம்:

    கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த போது கொரோனா காரணமாக 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தள்ளி வைக்கப்பட்டது.

    இந்த டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஸ்பஸ்டனில் இந்திய நேரடிப்படி இன்று மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது.

    சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி பலம் வாய்ந்து காணப்படுகிறது. இதனால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா தொற்று குணமாகததால் இந்த டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து தற்காலிக கேப்டனாக வேகப்பந்து வீச்சாளரான பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் பும்ரா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    இங்கிலாந்து அணி எப்படி விளையாடுகிறது என்பதில் நான் கவனம் செலுத்தவில்லை. எங்கள் பலம் பற்றி எங்களுக்கு தெரியும். எங்களது பணியை சிறப்பாக செய்தால், எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையிலும் வெற்றி பெற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

    எனவே எங்கள் அணி மீது அதிக கவனம் செலுத்த விரும்புகிறோம். மற்ற அணி என்ன செய்கிறது என்பதை பற்றி வீரர்களுக்கு மன ரீதியாக அழுத்தம் கொடுக்க விரும்புவில்லை.

    நம் பணியை நன்றாக செய்தால் அதற்கான பலன் நம் இடத்தில் வந்து விழும். சரியான மனநிலையில் எங்களை வெல்வது மிகவும் கடினம்.

    கடந்த கால வெற்றிகளை பார்க்க மாட்டோம். ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெறவே விரும்புவோம். இந்த தருணத்தில் வெற்றி பெற முயற்சிக்கிறோம்.

    அழுத்தம் இருக்கும் போது பெறப்படும் வெற்றி மிகவும் நன்றாக இருக்கும். நான் எப்போதும் பொறுப்புகளுக்கு தயாராக இருக்கிறேன். கடினமான சாவல்களை எதிர்கொள்ள விரும்புகிறேன்.

    நான் பல கிரிக்கெட் வீரர்களிடம் பேசி இருக்கிறேன். டோனியிடம் பேசியது எனக்கு நினைவிருக்கிறது. அவர் இந்திய அணியை முதன் முறையாக வழி நடத்துவதற்கு முன்பு எந்த அணிக்கும் கேப்டனாக இருந்ததில்லை என்று என்னிடம் தெரிவித்தார். தற்போது அவர் எல்லா காலத்திலும் மிகவும் வெற்றி கரமான கேப்டன்களில் ஒருவராக திகழ்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×