என் மலர்
விளையாட்டு
- 5-வது டெஸ்ட்டில் இந்திய அணியின் கேப்டன் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- 2014-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 19 விக்கெட்டுகளை புவனேஸ்வர் குமார் கைப்பற்றினார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில் 5-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. 3-ம் நாள் ஆட்டம் முடிவடைந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் இன்று 3 மணிக்கு தொடங்கும்.
3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்துள்ளது. இந்த டெஸ்ட்டில் இந்திய அணியின் கேப்டன் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர்கள் பட்டியலில் பும்ரா முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இவர் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதற்கு அடுத்தப்படியாக புவனேஸ்வர் குமார் உள்ளார். அவர் 2014-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 19 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
3-வது இடத்தில் ஜாகீர் கான்(2007), இஷாந்த சர்மா(2018) 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
- இலங்கை அணியில் காஞ்சனா 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் இந்திய பெண்கள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஒருநாள் போட்டி இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இலங்கை அணி பேட்டிங் செய்தது. ஹசினி பெரேரா 0, விஷ்மி குணரத்னே 3, மாதவி 0 என 11 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறியது. இதனையடுத்து கேப்டன் அதபத்து-அனுஷ்கா ஜோடி நிதானமாக ஆடி ரன்களை கணிசமாக உயர்த்தினர்.
நிதானமாக ஆடிய கேப்டன் அதபத்து 27 ரன்னிலும் அனுஷ்கா சஞ்சீவனி 25 ரன்னிலும் கவிஷா தில்ஹாரி 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அப்போது இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்நிலையில் 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நிலாக்ஷி டி சில்வா-காஞ்சனா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
நிலாக்ஷி டி சில்வா 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மேக்னா சிங் ஓவரில் வெளியேறினார். அடுத்து வந்த ஓஷதி ரணசிங்கே 10 ரன்னில் அவுட் ஆனார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த காஞ்சனா 47 ரன்கள் எடுத்தார்.
இதனால் 50 ஓவர் முடிவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- அனிருதா தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி, ஹரி நிஷாந்த் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சை எதிர்கொள்கிறது.
- திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இந்த போட்டி நடைபெறும்.
அனிருதா தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி, ஹரி நிஷாந்த் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சை எதிர்கொள்கிறது. 6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் நடந்தது.
அடுத்தகட்ட லீக் ஆட்டங்கள் தற்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. மூன்று நாள் இடைவெளிக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) நடக்கும் 9-வது லீக் ஆட்டத்தில் அனிருதா தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி, ஹரி நிஷாந்த் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சை எதிர்கொள்கிறது.
இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- வெஸ்ட் இண்டீசை சேர்ந்த சந்தர்பால் அமெரிக்க பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களுக்கு மேல் எடுத்த 14 கிரிக்கெட் வீரர்களில் சந்தர்பால் ஒருவராவார்.
வாஷிங்டன்:
வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறந்த பேட்ஸ்மேனான சிவனரைன் சந்தர்பால், அமெரிக்காவின் சீனியர் பெண்கள் மற்றும் யு-19 அணிகளின் தலைமைப் பயிற்சியாளராக 18 மாத காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.
தேசிய பெண்கள் மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணிகளின் தலைமைப் பயிற்சியாளராக சிவநரைன் சந்தர்பால் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை யுஎஸ்ஏ கிரிக்கெட் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது" என்று யுஎஸ்ஏ கிரிக்கெட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சந்தர்பால் கூறுகையில், "அமெரிக்க தேசிய மகளிர் அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
அமெரிக்க தேசிய மகளிர் அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணியை சிறந்த அணியாக முன்னெடுத்துச்செல்ல அனைத்து வகையிலும் பக்கபலமாக இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
வெஸ்ட் இண்டீசின் இடதுகை பேட்ஸ்மேனான சந்தர்பால், டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களுக்கு மேல் எடுத்த 14 கிரிக்கெட் வீரர்களில் ஒருவராவார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 164 டெஸ்ட் மற்றும் 268 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
- ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற சாதனையாளரான பிவி சிந்து ஒரு சிறந்த டான்சர் என்பது எல்லோருக்கும் தெரியும்.
- சிந்து ரீமிக்ஸ் பாடலுக்கு நடனமாடி உள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவின் 'நம்பர் ஒன்' பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து. ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற சாதனையாளரான அவர் ஒரு சிறந்த டான்சர் என்பது எல்லோருக்கும் தெரியும்.
இந்த நிலையில் இந்த நடன வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி உள்ளது.
ஏற்கனவே அவர் கச்சா பாதம், மாயகிரியே பாடல்களுக்கு நடனமாடி லட்சக்கணக்கானவர்களின் இதயங்களை கவர்ந்து இருந்தார் என்பது குறிப் பிடத்தக்கது
- கொரோனா பாதிக்கப்பட்ட ரோகித் சர்மா தனிமைபடுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்தார்.
- இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரோகித் சர்மா களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பர்மிங்கம்:
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி உள்ளூர் அணியுடன் இணைந்து கடந்த 23-ம் தேதி பயிற்சி கிரிக்கெட்டில் விளையாடியது.
அப்போது, இந்திய அணியின் கேட்பன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக இந்தியா - இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்டில் ரோகித் சர்மா விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டார்.
கொரோனா பாதிக்கப்பட்ட ரோகித் சர்மா தனிமைபடுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், ரோகித் சர்மா வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று குணமடைந்துள்ளார். கொரோனா பரிசோதனையின்போது 'நெகட்டிவ்' என முடிவு வந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்ததையடுத்து இந்தியா - இங்கிலாந்து இடையே நடைபெற உள்ள முதல் டி20 போட்டியில் ரோகித் சர்மா களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஜபீர் 7-6 (11-9), 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
- கால் இறுதியில் ஒன்ஸ் ஜபீர் செக்குடியரசுவை சேர்ந்த மரியா பவுஸ்கோவை சந்திக்கிறார்.
லண்டன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 3-வது வரிசையில் உள்ள ஒன்ஸ் ஜபீர் (துனிசியா) 24-வது நிலை வீராங்கனை எலிஸ் மெர்டன்ஸ் (பெல்ஜியம்) மோதினார்கள்.
இதில் ஜபீர் 7-6 (11-9), 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். கால் இறுதியில் அவர் செக்குடியரசுவை சேர்ந்த மரியா பவுஸ்கோவை சந்திக்கிறார்.
மற்ற ஆட்டங்களில் தஜ்னா மரியா, ஜூலி நீமையர் (ஜெர்மனி) வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.
- உலகின் முன்னணி வீரரான ஜோகோவிச் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் 4வது சுற்றில் தோல்வி அடைந்தார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் உலகின் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், நெதர்லாந்தின் ரிஜ்தோவெனுடன் மோதினார். இதில் 6-2, 4-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற ஜோகோவிச் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு சுற்றில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார். இதில் 6-1, 6-4, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் சின்னர்.
நாளை நடைபெறும் காலிறுதியில் ஜோகோவிச், சின்னரை எதிர்கொள்கிறார்.
- வெஸ்ட் இண்டீசின் ரோவ்மென் பாவெல் அதிரடியாக ஆடி 28 பந்தில் 61 ரன்கள் குவித்தார்.
- வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் தனி ஆளாகப் போராடி 68 ரன்கள் எடுத்தார்.
டொமினிகா:
வங்காளதேசம் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 2-0 என தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி டொமினிகாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங் அரை சதமடித்து 57 ரன்னி அவுட்டானார். கடைசி கட்டத்தில் இறங்கிய ரோவ்மென் பாவெல் அதிரடியில் மிரட்டினார். அவர் 28 பந்துகளில் 6 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 61 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். நிகோலஸ் பூரன் 34 ரன் எடுத்தார்.
இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வங்காளதேசம் அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர்.
ஷகிப் அல் ஹசன் ஓரளவு தாக்குப் பிடித்து அரை சதம் கடந்தார். அபிப் ஹொசைன் 34 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், வங்காளதேசம் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஷகிப் அல் ஹசன் 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
- இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இங்கிலாந்து சார்பில் ஜானி பேர்ஸ்டோவ் அதிரடியாக ஆடி சதமடித்து 106 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பர்மிங்காம்:
இந்தியா, இங்கிலாந்து மோதும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரிஷப் பண்ட் 146 ரன்களும், ஜடேஜா 104 ரன்களும், பும்ரா 31 ரன்களும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டும், மேட்டி பாட்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பேர்ஸ்டோவ் அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் 106 ரன்னில் அவுட்டானார். சாம் பில்லிங்ஸ் 36 ரன்னிலும், ஜோ ரூட் 31 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து அந்த அணி இந்தியாவை விட 132 ரன்கள் பின்தங்கியுள்ளது.
இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும், ஷமி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து, இந்தியா இரண்டாவது இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் 4 ரன்னில் அவுட்டானார். ஹனுமா விஹாரி 11 ரன்னிலும், விராட் கோலி 20 ரன்னிலும் அவுட்டாகினர். அப்போது இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்தது.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் புஜாரா நிதானமாக ஆடினார். அவருக்கு விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஒத்துழைப்பு கொடுத்தார். 4-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி இதுவரை 50 ரன்கள் சேர்த்துள்ளது.
மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 50 ரன்னுடனும், ரிஷப் பண்ட் 30 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். தற்போது வரை இந்தியா 257 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
- சானியா மிர்சா - மேட் பாவிக் ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
- எதிர் ஜோடி கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகியது.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் (இந்தியா ) சானியா மிர்சா - மேட் பாவிக் (குரோஷியா ) ஜோடி, இவான் டாடிக் (குரேஷியா) - லதிஷா சான் (சீன தைபே) ஜோடியுடன் மோத இருந்தது.
இந்நிலையில், கடைசி கட்டத்தில் இவான் டாடிக், லதிஷா சான் ஜோடி போட்டியில் இருந்து விலகியதால், சானியா மிர்சா, மேட் பாவிக் ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
- இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
- இங்கிலாந்து சார்பில் ஜானி பேர்ஸ்டோ 106 ரன்கள் குவித்தார்.
பர்மிங்காம்:
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. முதலில் களம் இறங்கிய விளையாடிய இந்தியா முதல் இன்னிங்சில் 416 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 146 ரன்களையும், ரவிந்திர ஜடேஜா 104 ரன்களையும் குவித்தனர்.
இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணியில் கேப்டன் பென்ஸ்டோக் 25 ரன்கள் அடித்தார். சாம் பில்லிங்ஸ் 36 ரன்கள் எடுத்தார். போட்ஸ் 19 ரன்னுடன் வெளியேறினார்.
எனினும் அந்த அணியின் ஜானி பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடி 106 ரன்கள் குவித்த நிலையில் ஷமி பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இங்கிலாந்து அணி 284 ரன்களுக்கு முதல் இன்னிங்சை இழந்தது. இதனால் இந்திய அணி 132 ரன்கள் முன்னிலை பெற்றது.
இந்திய அணி தரப்பில் சிராஜ் 4 விக்கெட்களும், பும்ரா 3 விக்கெட்களும் ,ஷமி 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 9 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் அடித்திருந்தது.






