என் மலர்
விளையாட்டு
- உலகின் முன்னணி வீரரான ரபேல் நடால் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- முன்னணி வீரரான கிரீஸ் நாட்டின் சிட்சிபாஸ் 3-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் உலகின் முன்னணி வீரரான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரபேல் நடால், இத்தாலி வீரர் சொனேகோவுடன் மோதினார். இதில் 6-1, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற நடால் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு சுற்றில் கிரீஸ் நாட்டின் சிட்சிபாஸ், ஆஸ்திரேலியாவின் கிர்கியோசுடன் மோதினார். இதில் 6-7, 6-4, 6-3, 7-6 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார் கிர்கியோஸ். இதன்மூலம் விம்பிள்டன் தொடரில் இருந்து சிட்சிபாஸ் வெளியேறினார்.
- கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய பும்ரா ஒரே ஓவரில் 29 ரன்கள் எடுத்தார்.
- இதன்மூலம் லாராவின் 19 ஆண்டு கால சாதனையை பும்ரா முறியடித்தார்.
பர்மிங்காம்:
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா சதமடித்து அசத்தினர்.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்தியாவின் பும்ரா 83வது ஓவரில் 35 ரன்கள் எடுத்து அசத்தினார். ஸ்டூவர்ட் பிராட் வீசிய 83 ஓவரில் இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்திக் காட்டினார் பும்ரா.
பிராட் ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி விளாச, அடுத்து வீசப்பட்ட பந்து 'வைடு' முறையில் 5 ரன்களை பெற்றுத் தந்தது. நோ பாலாக வீசப்பட்ட அடுத்த பந்தை பும்ரா சிக்சர் விளாசினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பும்ரா, அடுத்த பந்துகளை ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார். 5வது பந்தை மீண்டும் சிக்சருக்கு விளாசிய பும்ரா, கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தார். இதன்மூலம் அந்த ஒரு ஓவரில் மட்டும் 35 ரன்கள் விளாசப்பட்டது. பும்ரா மட்டும் 29 ரன் (4,6,4,4,4,6,1) விளாசினார்.
இதன்மூலம் கடந்த 2003-ம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில் தென் ஆப்ரிக்க வீரர் ராபின் பீட்டர்சன் பந்துவீச்சில் ஒரே ஓவரில் 28 ரன்கள் விளாசிய லெஜண்ட் வீரர் பிரையன் லாராவின் சாதனையை கேப்டனாக தான் பதவியேற்ற முதல் போட்டியிலேயே பும்ரா முறியடித்துள்ளார்.
- விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஸ்வியாடெக்கின் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்தது.
- சர்வதேச டென்னிசில் ஸ்வியாடெக் தொடர்ச்சியாக 37 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக், பிரான்ஸ் வீராங்கனையான அலிஸ் கார்னெட்டுடன் மோதினார்.
இதில், 6-4, 6-2 என்ற நேர் செட்களில் அலிஸ் கார்னெட் வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
இந்த தோல்வியின் மூலம் சர்வதேச டென்னிசில் 37 வெற்றிகள் பெற்ற ஸ்வியாடெக்கின் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்தது.
- இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்தியாவின் ரிஷப் பண்ட், ஜடேஜா ஆகியோர் சதமடித்தனர்.
- இங்கிலாந்துக்கு எதிரான முதல் இன்னிங்சில் இந்தியாவின் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார்.
பர்மிங்காம்:
இந்தியா, இங்கிலாந்து மோதும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரிஷப் பண்ட் 146 ரன்களும், ஜடேஜா 104 ரன்களும், பும்ரா 31 ரன்களும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டும், மேட்டி பாட்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் லீஸ் 6 ரன்னிலும், ஜாக் கிராலி 9 ரன்னிலும், ஒல்லி போப் 10 ரன்னிலும் வெளியேறினர். இங்கிலாந்து இன்னிங்சின்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது பாதிக்கப்பட்டது.
அடுத்து இறங்கிய ஜோ ரூட், பேர்ஸ்டோவ் ஜோடி பொறுமையுடன் ஆடியது. ஜோ ரூட் 31 ரன்னில் ஆட்டமிழந்தார், ஜாக் லீச் டக் அவுட்டானார்.
இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்திருந்தது. பேர்ஸ்டோவ் 12 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதையடுத்து அந்த அணி இந்தியாவை விட 332 ரன்கள் பின்தங்கியுள்ளது.
இந்தியா சார்பில் பும்ரா 3 விக்கெட்டும், சிராஜ், ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
- இந்தியா முதல் இன்னிங்சில் 416 ரன்கள் எடுத்தது
- இங்கிலாந்து 2 ஆம் நாள் தேநீர் இடைவெளியின்போது 356 ரன்கள் பின் தங்கியிருந்தது.
பர்மிங்காம்:
இந்தியா-இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் பர்கிம்காம் நகரில் நடைபெற்று வருகிறது. 2-வது நாளான இன்று முதல் இன்னிங்சில் இந்திய அணி 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 146 ரன்களும் ஜடேஜா 104 ரன்களும், பும்ரா 31 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி தொடக்க வீரர் அலெக்ஸ் லீஸ் 6 ரன்னும், சாக் கிராலி 9 ரன்னுக்கும் விக்கெட்டை பறிகொடுத்தனர். உல்லிபாபு 10 ரன்னுடன் வெளியேறினார். இங்கிலாந்து 31 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
2 நாள் தேநீர் இடைவேளையின்போது 15.1 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து அந்த அணி இந்தியாவை விட 356 ரன்கள் பின் தங்கியிருந்தது. மூன்று விக்கெட்களையும் பும்ரா கைப்பற்றினார்.
- ஸ்டூவர்ட் பிராட் வீசிய 84 ஓவரில் 35 ரன்கள் விட்டு கொடுத்தார்.
- டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் விட்டு கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை பிராட் படைத்துள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 338 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இன்று 2-நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி 416 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
இந்த டெஸ்டில் பல்வேறு சாதனைகள் அரங்கேறியது. ஜடேஜா-பண்ட் ஆகியோர் சாதனைகள் படைத்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் பும்ராவும் தனது பங்கிற்கு பேட்டிங்கில் ஒரு சாதனையை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை எட்டினார்.
ஸ்டூவர்ட் பிராட் வீசிய 84 ஓவரில் 35 ரன்கள் விட்டு கொடுத்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் விட்டு கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை பிராட் படைத்துள்ளார்.
இதேபோல் 2007-ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையில் பிராட் வீசிய ஓவரில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் 36 ரன்கள் குவித்தார். இந்த பந்து வீச்சு டி20 வரலாற்றில் மோசமான சாதனையாக பதிவு செய்யப்பட்டது. அதே பாணியில் தற்போது டெஸ்ட் போட்டியிலும் பிராட் அதிக ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார்.
- பும்ரா 16 பந்தில் 31 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்தியா-இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 7விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் எடுத்திருந்தது. ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். ஜடேஜா 83 ரன்னுடனும் சமி ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் 2-வது நாளான இன்று தொடங்கியது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் ரிஷப் பண்ட்-ஜடேஜா ஜோடி மேலும் ஒரு சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளாது. இந்திய அணி வீரர்களில் ஒரு இன்னிங்சில் இரண்டு இடது கை பேட்ஸ்மேன்கள் சதம் அடித்த பட்டியலில் பண்ட்-ஜடேஜா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.

ஜடேஜா
தொடர்ந்து ஆடிய ஜடேஜா 104 ரன்னில் ஆண்டர்சன் பந்து வீச்சில் போல்ட் ஆனார். அதனைத் தொடர்ந்து பும்ரா அதிரடியாக விளையாடினார். ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் 4 பவுண்டரி 2 சிக்சர் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மறுமனையில் இருந்த சிராஜ் 2 ரன்னில் ஆண்டர்சன் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
பும்ரா 16 பந்தில் 31 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- டோனியின் 17 ஆண்டு சாதனையை ரிஷப் பண்ட் தகர்த்துள்ளார்.
- இளம் வயதில் 100 சிக்சர் அடித்தவர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் சுரேஷ் ரெய்னா உள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் சதம் அடித்து அசத்தினார்.
அவர் 111 பந்தில் 146 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதன் மூலம் அவர் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். டோனியின் 17 ஆண்டு சாதனையை அவர் தகர்த்துள்ளார். இந்திய விக்கெட் கீப்பரில் அதிவேக சதம் அடித்து டோனியின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
மேலும் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் சாதனையையும் பண்ட் முறியடித்துள்ளார். இளம் வயதில் 100 சிக்சர் அடித்தவர்களில் ரிஷப் பண்ட் முதல் இடத்தை பிடித்துள்ளார். 24 வயதில் அவர் 100 சிக்சர் அடித்துள்ளார். சச்சின் 25 வயதில் 100 சிக்சர் அடித்தார். 3-வது இடத்தில் சுரேஷ் ரெய்னா உள்ளார். அவர் 25 வயதில் 100 சிக்சர் விளாசியுள்ளார்.
- ஆண்களுக்கு 13 எடை பிரிவிலும், பெண்களுக்கு 12 வகையான உடல் எடைப்பிரிவிலும் போட்டிகள் நடத்தப்படுகிறது.
- 33 மாநிலங்களை சேர்ந்த 800 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கம் சார்பில் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகம் ஆதரவுடன் 5-வது தேசிய இளையோர் குத்துச்சண்டை போட்டி நடத்தப்படுகிறது.
இந்த போட்டி சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக உள் விளையாட்டு அரங்கில் வருகிற 6-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடக்கிறது.
ஆண்களுக்கு 13 எடை பிரிவிலும், பெண்களுக்கு 12 வகையான உடல் எடைப்பிரிவிலும் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் 33 மாநிலங்களை சேர்ந்த 800 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய இளையோர் குத்துச்சண்டை போட்டிக்கான தமிழக அணிகளை தமிழ்நாடு குத்துச்சண்டை சங்க செயலாளர் (பொறுப்பு) எம்.எஸ். நாகராஜன் இன்று அறிவித்துள்ளார். அதன் விபரம்:-
ஆண்கள்: யுவேஸ்வரன் (மினிமம் வெயிட் 46-48 உடல் எடை) நவீன் குமார் (பாந்தம் வெயிட்), திருநாவுக் கரசு (லைட் வெயிட்), சுபாஷ் வசந்த் (லைட் வெல்டர்), டில்லி பாபு (வெல்டர் வெயிட்), கபிலன் (லைட் மிடில்), பூபாலன் (மிடில் வெயிட்), லோஷன் (கிரைசர் வெயிட்-அனை வரும் சென்னை), விஷ்வா ஜித் (பிளை வெயிட்-கோவை), காவியன் (பெதர் வெயிட்), தியாகராஜன் (லைட் ஹெவி வெயிட்) சாம்பால்ராஜ் (சூப்பர் ஹெவி வெயிட்-மூவரும் திருவள்ளூர்), ஸ்ரீவெங்கடேஷ் (ஹெவி வெயிட்-கடலூர்)
பெண்கள்: லோஷினி (மினிமம் வெயிட்), எச். மதுமிதா (பாந்தம் வெயிட்), ஸ்ரீநிதி (லைட் மிடில்-சென்னை), பூவிதா (பிளை வெயிட்) ஜீவா (பெதர் வெயிட்) மாலதி (லைட் வெல்டர்-புதுக் கோட்டை), சினேகா (லைட் வெயிட்-திருச்சி), அனுசுயா (வெல்டர் வெயிட்-காஞ்சீ புரம்), எம்.மதுமிதா (மிடில் வெயிட்), ஜெயஸ்ரீ (லைட் ஹெவி), அபினயா சரஸ்வதி (கிரைசர் வெயிட்-திருவள்ளூர்), பிரிஸ்கிலா (ஹெவி வெயிட்-கன்னியா குமரி)
- பும்ரா எப்போதும் தனது பந்து வீச்சில் கவனமாக இருப்பார்.
- கேப்டனாக இருப்பதை காட்டிலும் பும்ரா ஒரு பந்து வீச்சாளராக எங்களுக்கு அதிகம் தேவை.
எட்ஜ்பஸ்டன்:
இங்கிலாந்துக்கு எதிராக நேற்று தொடங்கிய 5-வது டெஸ்டில் இந்திய அணிக்கு கேப்டனாக வேகப்பந்து வீரர் பும்ரா பணியாற்றினார்.
ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அவருக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைத்தது. கபில்தேவுக்கு பிறகு கேப்டன் பொறுப்பை வகித்த வேகப்பந்து வீரர் என்ற பெருமையை பும்ரா பெற்றார்.
இந்த நிலையில் வேகப்பந்து வீரரான பும்ரா கேப்டனாக பணியாற்றுவது எளிது அல்ல என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பும்ரா எப்போதும் தனது பந்து வீச்சில் கவனமாக இருப்பார். ஆட்டத்தின் போக்கை கணிப்பதில் வல்லவர். ஆட்டத்தின் தன்மைக்கு ஏற்றவாறு திறமையுடன் பந்து வீசக்கூடியவர்.
பும்ரா இதுவரை கேப்டனாக இருந்தது இல்லை. இதனால் புதிய பொறுப்பு அவருக்கு சவாலானதாக இருக்கும். ஆனாலும் நாங்கள் அவருக்கு எங்களது ஆதரவை தொடர்ந்து அளிப்போம்.
ஒரு வேகப்பந்து வீச்சாளர் கேப்டனாக செயல்படுவது சாதாரணமான காரியம் அல்ல. தனது பந்து வீச்சிலும் கவனம் செலுத்த வேண்டும். கேப்டனாக இருப்பதை காட்டிலும் பும்ரா ஒரு பந்து வீச்சாளராக எங்களுக்கு அதிகம் தேவை.
இவ்வாறு ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
- அல்காரஸ் 6-3, 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- 5-ம் நிலை வீராங்கனையான ஷக்காரி (கிரீஸ்) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.
லண்டன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 15-வது வரிசையில் உள்ள கெர்பர் (ஜெர்மனி) அதிர்ச்சிகரமாக தோற்றார். 24-ம் நிலை வீராங்கனையான எலிஸ் மெர்டன்ஸ் (பெல்ஜியம்) 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் அவரை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற 3-வது சுற்று போட்டிகளில் 3-வது வரிசையில் இருக்கும் ஜபேர் (துனிசியா), கார்சியா (பிரான்ஸ்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
5-ம் நிலை வீராங்கனையான ஷக்காரி (கிரீஸ்) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 5-ம் நிலை வீரரான கார்லோஸ், அல்காரஸ் (ஸ்பெயின்) 3-வது சுற்றில் ஜெர்மனியை சேர்ந்த ஆஸ்கர் ஒட்டேவை எதிர் கொண்டார்.
இதில் அல்காரஸ் 6-3, 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
20-வது வரிசையில் உள்ள ஜான் இஸ்னெர் (அமெரிக்கா) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக வெளியேறினார்.
- ஒருநாள் போட்டிக்கான அணியில் ஜோரூட், பென் ஸ்டோக்ஸ் இடம் பெற்றுள்ளனர்.
- டி20, ஒருநாள் தொடரில் பேர்ஸ்டோவ் இடம் பெறவில்லை.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒத்திவைக்கப்பட்ட கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழந்து 338 ரன்கள் எடுத்துள்ளது.
டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு 3 டி20, ஒருநாள் போட்டியிலும் விளையாடுகிறது. இந்திய அணிக்கு எதிராக டி20, ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மோர்கன் ஓய்வு அறிவித்த நிலையில் இங்கிலாந்து அணியின் புதிய கேப்டனாக பட்லர் பதவியேற்றுள்ளார்.
ஒருநாள் போட்டிக்கான அணியில் ஜோரூட், பென் ஸ்டோக்ஸ் இடம் பெற்றுள்ளனர். டி20 அணியில் பேர்ஸ்டோவ் இடம் பெறவில்லை.
டி20 போட்டிக்கான இங்கிலாந்து அணி வீரர்கள் விவரம்:
ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, ஹாரி புரூக், சாம் குர்ரன், ரிச்சர்ட் க்ளீசன், கிறிஸ் ஜோர்டன், லிவிங்ஸ்டன், டேவிட் மலான், டைமல் மில்ஸ், மேத்யூ பார்கின்சன், ஜேசன் ராய், பில் சால்ட், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி
ஒருநாள் போட்டிக்கான வீரர்கள் விவரம்:-
பட்லர் (கேப்டன்), மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோவ், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், சாம் கர்ரன், லிவிங்ஸ்டன், கிரேக் ஓவர்டன், மேத்யூ பார்கின்சன், ஜோ ரூட், ஜேசன் ராய், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி






