என் மலர்

  கிரிக்கெட்

  வேகப்பந்து வீரர் கேப்டனாக பணியாற்றுவது எளிது அல்ல- டிராவிட்
  X

  ராகுல் டிராவிட் - பும்ரா 

  வேகப்பந்து வீரர் கேப்டனாக பணியாற்றுவது எளிது அல்ல- டிராவிட்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பும்ரா எப்போதும் தனது பந்து வீச்சில் கவனமாக இருப்பார்.
  • கேப்டனாக இருப்பதை காட்டிலும் பும்ரா ஒரு பந்து வீச்சாளராக எங்களுக்கு அதிகம் தேவை.

  எட்ஜ்பஸ்டன்:

  இங்கிலாந்துக்கு எதிராக நேற்று தொடங்கிய 5-வது டெஸ்டில் இந்திய அணிக்கு கேப்டனாக வேகப்பந்து வீரர் பும்ரா பணியாற்றினார்.

  ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அவருக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைத்தது. கபில்தேவுக்கு பிறகு கேப்டன் பொறுப்பை வகித்த வேகப்பந்து வீரர் என்ற பெருமையை பும்ரா பெற்றார்.

  இந்த நிலையில் வேகப்பந்து வீரரான பும்ரா கேப்டனாக பணியாற்றுவது எளிது அல்ல என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

  பும்ரா எப்போதும் தனது பந்து வீச்சில் கவனமாக இருப்பார். ஆட்டத்தின் போக்கை கணிப்பதில் வல்லவர். ஆட்டத்தின் தன்மைக்கு ஏற்றவாறு திறமையுடன் பந்து வீசக்கூடியவர்.

  பும்ரா இதுவரை கேப்டனாக இருந்தது இல்லை. இதனால் புதிய பொறுப்பு அவருக்கு சவாலானதாக இருக்கும். ஆனாலும் நாங்கள் அவருக்கு எங்களது ஆதரவை தொடர்ந்து அளிப்போம்.

  ஒரு வேகப்பந்து வீச்சாளர் கேப்டனாக செயல்படுவது சாதாரணமான காரியம் அல்ல. தனது பந்து வீச்சிலும் கவனம் செலுத்த வேண்டும். கேப்டனாக இருப்பதை காட்டிலும் பும்ரா ஒரு பந்து வீச்சாளராக எங்களுக்கு அதிகம் தேவை.

  இவ்வாறு ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

  Next Story
  ×