என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • மைதானத்தில் இங்கிலாந்து ரசிகர்கள் இனவெறியுடன் திட்டியதாக சில இந்திய ரசிகர்கள் புகார் அளித்துள்ளனர்.
    • இனவெறி குற்றச்சாட்டு குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்துள்ளது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி எட்ஜ்பஸ்டனில் நடந்து வருகிறது. இங்கிலாந்து அணிக்கு 378 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி சிறப்பான தொடக்கம் கொடுத்தது.

    4-வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 259 ரன்கள் குவித்துள்ளது. கைவசம் 4 விக்கெட்டுகள் உள்ளன. இதனால் இங்கிலாந்து அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.

    இந்நிலையில் 4-வது நாள் ஆட்டத்தின் போது இந்திய ரசிகர்கள் மீது இனவெறி தாக்குதல் நடந்துள்ளது. மைதானத்தில் இங்கிலாந்து ரசிகர்கள் இனவெறியுடன் திட்டியதாக சில இந்திய ரசிகர்கள் புகார் அளித்துள்ளனர்.

    இந்த இனவெறி குற்றச்சாட்டு குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்துள்ளது.

    • 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன.
    • சீனா அணியை பொறுத்தமட்டில் தனது முதல் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்துடன் (2-2) டிரா செய்தது.

    ஆம்ஸ்டெல்வீன்:

    15-வது பெண்கள் உலக கோப்பை ஹாக்கி போட்டி நெதர்லாந்து மற்றும் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. இதில் 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இங்கிலாந்துடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா கண்டது.

    இந்த நிலையில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) 13-வது இடத்தில் உள்ள சீனாவை எதிர்கொள்கிறது. சவிதா பூனியா தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது போட்டியில் தடுப்பு ஆட்டத்தில் அருமையாக செயல்பட்டது. ஆனால் இந்திய அணியின் முன்கள வீராங்கனைகள் கோல் அடிக்க கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை.

    அத்துடன் இந்திய அணி 7 பெனால்டி கார்னர் வாய்ப்பில் ஒன்றை மட்டுமே கோலாக மாற்றியது. எனவே இந்திய அணியின் முன்கள வீராங்கனைகள் இன்னும் துடிப்புடன் செயல்பட வேண்டியது அவசியமானதாகும். சீனா அணியை பொறுத்தமட்டில் தனது முதல் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்துடன் (2-2) டிரா செய்தது. சமீபத்தில் நடந்த புரோ ஹாக்கி லீக் போட்டியின் இரண்டு ஆட்டங்களிலும் இந்திய அணி, சீனாவை துவம்சம் செய்து இருந்தது.

    இதனால் இந்திய அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். முதல் வெற்றியை ருசிக்க இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, 3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • உலகின் முன்னணி வீரரான ரபேல் நடால் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
    • ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோஸ் 4வது சுற்றில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் உலகின் முன்னணி வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், நெதர்லாந்தின் வான் டெ சாண்ட்சல்புடன் மோதினார். இதில் 6-4, 6-2, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற நடால் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோஸ், அமெரிக்காவின் பிராண்டன் நகஷிமாவுடன் மோதினார். இதில் 4-6, 6-4, 7-6, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் கிர்கியோஸ்.

    • பர்மிங்காம் டெஸ்டின் இரு இன்னிங்சிலும் சேர்த்து ரிஷப் பண்ட் 203 ரன்கள் எடுத்துள்ளார்.
    • இதில் ஒரு சதமும், ஒரு அரை சதமும் அடங்கும்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரிஷப் பண்ட் 146 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 104 ரன்களையும் குவித்தனர்.

    இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 245 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. புஜாரா 66 ரன்னும், ரிஷப் பண்ட் 57 ரன்னும் எடுத்தனர்.

    இந்த டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் முதல் இன்னிங்சில் 146 ரன்னும், 2-வது இன்னிங்சில் 57 ரன்னும் எடுத்துள்ளார். இதன்மூலம் வெளிநாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்களை குவித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை பண்ட் படைத்துள்ளார்.

    இதற்கு முன் 1953-ம் ஆண்டு விஜய் மஞ்சரேக்கர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கிங்ஸ்டன் டெஸ்ட் போட்டியில் 161 ரன்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது.

    இந்த டெஸ்டில் மொத்தமாக 203 ரன்கள் எடுத்துள்ள ரிஷப் பண்ட், 69 ஆண்டுக்குப் பிறகு இந்த சாதனையை முறியடித்துள்ளார்.

    • விம்பிள்டன் டென்னிசின் 4வது சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா தோல்வி அடைந்தார்.
    • முன்னணி வீராங்கனை சிமோனா ஹாலெப் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்றில் ரோமானியா நாட்டின் சிமோனா ஹாலெப், ஸ்பெயின் வீராங்கனையான பவுலா படோசாவுடன் மோதினார்.

    இதில், 6-1, 6-2 என்ற நேர் செட்களில் ஹாலெப் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, குரோஷியாவின் பெட்ரா மார்டிக்குடன் மோதினார். இதில் 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வென்ற ரிபாகினா காலிறுதிக்கு முன்னேறினார்.

    • இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • 2வது இன்னிங்சில் புஜாரா 66 ரன்னும், ரிஷப் பண்ட் 57 ரன்னும் எடுத்தனர்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது.

    முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்தது. ரிஷப் பண்ட் 146 ரன்னும், ரவீந்திர ஜடேஜா 104 ரன்னும் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டும், மேட்டி பாட்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜானி பேர்ஸ்டோவ் சதமடித்து 106 ரன்னில் அவுட்டானார்.

    இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும், ஷமி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    132 ரன்கள் முன்னிலை வகித்த இந்தியா, இரண்டாவது இன்னிங்சில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. புஜாரா 66 ரன்னும், ரிஷப் பண்ட் 57 ரன்னும் அடித்தனர்.

    இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டும், மேட்டி பாட்ஸ், பிராட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 378 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் அலெக்ஸ் லீஸ், ஜாக் கிராலி பொறுப்புடன் ஆடினர். லீஸ் அரை சதமடித்தார்.

    அணியின் எண்ணிக்கை 107 ஆக இருந்தபோது கிராலி 46 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஒல்லி போப் டக் அவுட்டானார். தொடர்ந்து லீஸ் 57 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து 109 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்தது.

    ஆனால் அடுத்து இறங்கிய ஜோ ரூட், பேர்ஸ்டோவ் ஜோடி முதலில் நிதானமாக ஆடியது. தொடர்ந்து அதிரடியிலும் மிரட்டியது. இருவரும் அரை சதமடித்து அசத்தினர்.

    நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 76 ரன்னும், பேர்ஸ்டோவ் 72 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இங்கிலாந்து வெற்றி பெற இன்னும் 119 ரன்கள் தேவை என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • முதலில் விளையாடிய திருப்பூர் அணி 145 ரன்கள் எடுத்தது.
    • திண்டுக்கல் வீரர் விஷால் வைத்யா 84 ரன்கள் குவித்தார்.

    நத்தம்:

    6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரின் தொடக்க சுற்று ஆட்டங்கள் நெல்லையில் நடைபெற்று முடிந்தன. அடுத்த கட்ட லீக் ஆட்டங்கள் தற்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

    இன்று நடைபெற்ற 9-வது லீக் ஆட்டத்தில் அனிருதா தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி, ஹரி நிஷாந்த் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சை எதிர் கொண்டது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதையடுத்து களம் இறங்கிய திருப்பூர் அணியில் தொடக்க வீரரும் கேப்டனுமான ஸ்ரீகாந்த் அனிருத்தா 8 ரன் எடுத்திருந்த நிலையில் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் சித்தார்த் டக் அவுட்டானார். அதிகபட்சமாக அந்த அணி வீரர் அரவிந்த் 32 ரன்கள் அடித்தார்.

    மான் பாப்னா 21 ரன்களும், துஷார் ரஹேஜா 20 ரன்னும் அடித்தனர். முகமது 27 ரன்களும், அஸ்வின் 20 ரன்னும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் திருப்பூர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்துள்ளது.

    திண்டுக்கல் அணியில் சிலம்பரசன் 3 விக்கெட்களும், ஹரி நிசாந்த் 2 விக்கெட்களும்,ரங்கராஜ் சுதேஷ் 2 விக்கெட்களும் கைப்பற்றினர்.

    இதையடுத்து 146 ரன்கள் என்ற இலக்கை நோக்கி திண்டுக்கல் அணி விளையாடியது. அதிரடி காட்டிய அந்த அணியின் தொடக்க வீரர் விஷால் வைத்யா 57 பந்துகளில் 84 ரன்கள் குவித்ததுடன் கடைசிவரை களத்தில் இருந்தார்.

    கேப்டன் ஹரி நிஷாந்த் 25 ரன்கள் அடித்தார். மணி பாரதி 38 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். இதையடுத்து திண்டுக்கல் அணி 18.1 ஓவர் முடிவில் 148 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றது. 

    • முதலில் விளையாடிய திருப்பூர் அணியில் அரவிந்த் 32 ரன்கள் அடித்தார்.
    • திண்டுக்கல் வீரர் சிலம்பரசன் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

    நத்தம்:

    6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரின் தொடக்க சுற்று ஆட்டங்கள் நெல்லையில் நடைபெற்று முடிந்தன.அடுத்த கட்ட லீக் ஆட்டங்கள் தற்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

    இன்று நடைபெறும் 9-வது லீக் ஆட்டத்தில் அனிருதா தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி, ஹரி நிஷாந்த் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சை எதிர் கொண்டுள்ளது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதையடுத்து களம் இறங்கிய திருப்பூர் அணி தொடக்க வீரரும் கேப்டனுமான ஸ்ரீகாந்த் அனிருத்தா 8 ரன் எடுத்திருந்த நிலையில் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் சித்தார்த் டக் அவுட்டானார்.

    அதிகபட்சமாக அந்த அணி வீரர் அரவிந்த் 32 ரன்கள் அடித்தார். மான் பாப்னா 21 ரன்களும், துஷார் ரஹேஜா 20 ரன்னும் அடித்தனர். முகமது 27 ரன்களும், அஸ்வின் 20 ரன்னும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் திருப்பூர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்துள்ளது.

    திண்டுக்கல் அணியில் சிலம்பரசன் 3 விக்கெட்களும், ஹரி நிசாந்த் 2 விக்கெட்களும்,ரங்கராஜ் சுதேஷ் 2 விக்கெட்களும் கைப்பற்றினர். இதையடுத்து 146 ரன்கள் என்ற இலக்கை நோக்கி திண்டுக்கல் அணி விளையாட உள்ளது.

    • இந்திய அணி 2-வது இன்னிங்சில் 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
    • ரிஷப் பண்ட் 2-வது இன்னிங்சில் 57 ரன்கள் அடித்தார்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 416 ரன்கள் எடுத்தது.

    இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 146 ரன்களையும், ரவிந்திர ஜடேஜா 104 ரன்களையும் குவித்தனர். தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் ஜானி பேர்ஸ்டோவ் சதம் அடித்தார்.

    இதை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி நேற்றைய 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்து இருந்தது.

    இன்று நடைபெற்ற 4-வது நாள் ஆட்டத்தில் புஜாரா 66 ரன்கள் எடுத்த நிலையிலும், ஷ்ரேயஸ் ஐயர் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்சில் சதம் அடித்த பண்ட் 2-வது இன்னிங்சிலும் அரைசதம் கடந்து 57 ரன்கள் அடித்தார்.

    ரவீந்திர ஜடேஜா 23 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். பும்ரா 7 ரன்னுடன் வெளியேற, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

    இதையடுதது இங்கிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெற 378 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி நிர்ணயித்துள்ளது.

    • இந்திய அணி 361 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
    • ஜடேஜா 17 ரன்னிலும் முகமது சமி 13 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

    இங்கிலாந்து அணிக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா விளையாடி வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 416 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆடியது. பேர்ஸ்டோவின் சதத்தால் இங்கிலாந்து அணி 284 ரன்கள் எடுத்தது.

    2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி நேற்றைய 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா-ரிஷப் பண்ட் அரை சதம் அடித்தனர்.

    புஜாரா 66, ஷ்ரேயாஸ் ஐயர் 19, ரிஷப் பண்ட் 57, சர்துல் தாகூர் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ஜடேஜா-முகமது சமி ஜோடி நிதானமாக ஆடினர். 4-வது நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் இந்திய அணி 361 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. ஜடேஜா 17 ரன்னிலும் முகமது சமி 13 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

    • ரிஷப் பண்டின் பலவீனமான பகுதிகளில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் பந்து வீசவில்லை.
    • இங்கிலாந்து வீரர்கள் நிறைய தவறுகளை செய்தனர்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 146 ரன்களையும், ரவிந்திர ஜடேஜா 104 ரன்களையும் குவித்தனர். தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் ஜானி பேர்ஸ்டோவ் சதம் அடித்து அசத்தினார்.

    இன்று 4-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 2-வது இன்னிங்சை விளையாடி வருகிறது. இந்த நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் சதம் அடித்தது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது ஆசிப் கருத்து தெரிவித்துள்ளார்.

    பண்ட் குறித்து அவர் பேசியதாவது:-

    முகமது ஆசிப்

    முகமது ஆசிப்

    பண்ட் சதம் அடித்தது முற்றிலும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் தவறு. பண்ட் எந்த அதிசயமும் செய்யவில்லை. அவரது பேட்டிங்கில் தொழில்நுட்ப குறைபாடு உள்ளது. ஆனாலும் அவர் சதம் அடிக்க முடிந்தது. ஏனெனில் அவரது பலவீனமான பகுதிகளில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அவருக்கு பந்து வீசவில்லை.

    நான் தனிநபர்களை பெயரிட மாட்டேன். ஆனால் இங்கிலாந்து வீரர்கள் நிறைய தவறுகளை செய்தனர். ஜடேஜா மற்றும் பண்ட் பேட்டிங் செய்யும் போது இங்கிலாந்து இடது கை சுழற்பந்து வீச்சாளரைக் பந்து வீச அழைத்தனர். அவர் அந்த நேரத்தில் பந்து வீச வந்தது தவறான முடிவாகும்.

    நான் பண்டுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் எதிரணியின் இத்தகைய தவறான முடிவுகளால் நீங்கள் பெரிய ஸ்கோரைப் பெற முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஷவாலி வர்மா 71 ரன்னிலும் மந்தனா 94 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    • 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இலங்கை அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக காஞ்சனா 46 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ரேனுகா சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகளாக ஷவாலி வர்மா-மந்தானா ஆடினர். இலங்கை அணியின் பந்து வீச்சை சிறப்பான முறையில் எதிர் கொண்டு ரன்களை குவித்தனர்.

    25.4 ஓவரில் இந்திய அணி விக்கெட் ஏதும் விட்டுக் கொடுக்காமல் 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷவாலி வர்மா 71 ரன்னிலும் மந்தனா 94 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜூலை 7-ந் தேதி நடக்கிறது.

    ×