என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இங்கிலாந்து அணி வீரர்கள்
5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி- இங்கிலாந்துக்கு 378 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா
- இந்திய அணி 2-வது இன்னிங்சில் 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
- ரிஷப் பண்ட் 2-வது இன்னிங்சில் 57 ரன்கள் அடித்தார்.
பர்மிங்காம்:
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 416 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 146 ரன்களையும், ரவிந்திர ஜடேஜா 104 ரன்களையும் குவித்தனர். தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் ஜானி பேர்ஸ்டோவ் சதம் அடித்தார்.
இதை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி நேற்றைய 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்து இருந்தது.
இன்று நடைபெற்ற 4-வது நாள் ஆட்டத்தில் புஜாரா 66 ரன்கள் எடுத்த நிலையிலும், ஷ்ரேயஸ் ஐயர் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்சில் சதம் அடித்த பண்ட் 2-வது இன்னிங்சிலும் அரைசதம் கடந்து 57 ரன்கள் அடித்தார்.
ரவீந்திர ஜடேஜா 23 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். பும்ரா 7 ரன்னுடன் வெளியேற, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இதையடுதது இங்கிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெற 378 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி நிர்ணயித்துள்ளது.






