என் மலர்
விளையாட்டு
- 5-வது டெஸ்டில் மெதுவாக ஓவர் வீசியதால் இந்திய வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
- மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இரண்டு புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.
பர்மிங்காம்:
இங்கிலாந்து, இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்றது.
கடைசி நாளான நேற்று, 378 ரன்கள் என்ற இமாலய இலக்கை வெற்றிகரமாக துரத்தி இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடர் 2-2 என சமனில் முடிந்ததால் இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொண்டன.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் கொடுக்கப்பட்ட நேரத்தில் இருந்து மெதுவாக ஓவர் வீசியதற்காக இந்திய வீரர்களின் போட்டி ஊதியத்தில் இருந்து 40 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
மேலும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலிலும் 2 புள்ளிகளை இந்திய அணி இழக்கும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
- சானியா மிர்சா - மேட் பாவிக் ஜோடி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
- விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் முறையாக சானியா அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் சானியா மிர்சா - மேட் பாவிக் ஜோடி, ஜான் பீர்ஸ் - கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது.
இதில் சானியா மிர்சா - மேட் பாவிக் ஜோடி 6-4, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இதன்மூலம் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் முறையாக சானியா அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
- முதலில் விளையாடிய நெல்லை அணி 209 ரன்கள் அடித்தது.
- நெல்லை வீரர் சஞ்சய் யாதவ் 70 ரன்கள் குவித்தார்.
6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 10-வது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்-நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களம் இறங்கிய பேட்டிங் செய்த நெல்லை அணியில் தொடக்க வீரர் நிரஞ்சன் 47 ரன்கள் அடித்தார். பாபா அபரஞ்சித் 34 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.பின்னர் ஜோடி சேர்ந்த சஞ்சய் யாதவும், கேப்டன் பாபா இந்திரஜித்தும், அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.42 பந்துகளை சந்தித்த சஞ்சய் யாதவ் 70 ரன்கள் குவித்தார்.
இந்திரஜித் 34 ரன்கள் எடுத்தார். இருவரும் கடைசி வரை களத்தில் இருந்தனர். நெல்லை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் அடித்தது. இதையடுத்து 210 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணியின் தொடக்க வீரர் பாலச்சந்தர் அனிருத் ஒரு ரன்னுடன் வெளியேறினார்.
மற்றொரு தொடக்க வீரர் அருண் கார்த்திக் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 57 பந்துகளில் 106 ரன்கள் குவித்தார். கேப்டன் சதுர்வேதி 27 ரன்னுக்கு அவுட்டானார்.
ஜெகதீசன் கவுசிக் 21 ரன்கள் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் மதுரை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் அடித்தது. இதையடுத்து 26 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை அணி வெற்றி பெற்றது. இது நெல்லை அணி பெறும் நான்காவது வெற்றியாகும்.
- டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
- சஞ்சய் யாதவ் 42 பந்துகளில் 70 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.
6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்-நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி முதலில் களம் இறங்கிய பேட்டிங் செய்த நெல்லை அணியில் தொடக்க வீரர் நிரஞ்சன் 47 ரன்கள் அடித்தார். பாபா அபரஞ்சித் 34 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த சஞ்சய் யாதவும், கேப்டன் பாபா இந்திரஜித்தும், அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.42 பந்துகளை சந்தித்த சஞ்சய் யாதவ் 70 ரன்கள் குவித்தார். இந்திரஜித் 34 ரன்கள் எடுத்தார்.
இருவரும் கடைசி வரை களத்தில் இருந்தனர். நெல்லை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் அடித்தது. இதையடுத்து 210 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மதுரை பாந்தர்ஸ் அணி விளையாட உள்ளது.
- இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது.
- தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பேர்ஸ்டோவ்-ஜோரூட் சதம் அடித்து அசத்தினார்.
பர்மிங்கம்:
இங்கிலாந்து-இந்தியா இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இந்த டெஸ்ட் தொடரில் முன்னிலையில் இருந்த நிலையில் தொடரை வெல்லும் முனைப்பில் இந்த போட்டியில் இந்திய அணி களமிறங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 416 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 146 ரன்களையும், ரவிந்திர ஜடேஜா 104 ரன்களையும் குவித்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்கள் சேர்த்தது. பேர்ஸ்டோவ் அதிகபட்சமாக 106 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து 132 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. 2-வது இன்னிங்சில் 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து வெற்றிபெற இந்திய அணி 378 ரன்கள் நிர்ணயித்தது. இதனை தொடர்ந்து 378 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக அலெக்ஸ் லீஸ் மற்றும் ஜாக் க்ரூவ்லி களமிறங்கினர்.
இரு வீரர்களும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜாக் க்ரூவ்லி 46 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்துவந்த ஒலிவ் போப் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்ஸ் 56 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். ஒரு கட்டத்தில் 109 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறியது. அந்த சூழ்நிலையில் இந்தியாவுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருந்தது.
ஆனால், அடுத்து வந்த ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் பொறுப்பான மற்றும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் கடந்தனர். 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 259 ரன்கள் சேர்த்தது. ஜோ ரூட் 76 ரன்னுடனும், பேர்ஸ்டோவ் 72 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 5-வது நாள் ஆட்டம் தொடங்கியது.
ஜோ ரூட் - பேர்ஸ்டோவ் ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பேர்ஸ்டோவ்-ஜோரூட் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 378 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2-2 என்ற கணக்கில் இந்த தொடரை சமன் செய்துள்ளது.
- லாங் ஆன், லாங் ஆஃப் திசைகளில் ஃபீல்டர்களை பும்ரா நிற்கவைத்திருந்தார்.
- கடைசி 15 - 20 ஓவர்களில் கூட ஃபீல்டர்களை முன்பு வரவைத்திருந்தால் பேர்ஸ்டோவுக்கு சிரமமாக இருந்து இருக்கும்.
பர்மிங்கம்:
இங்கிலாந்து-இந்தியா இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் பர்மிங்கம் மைதானத்தில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 416 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 284 ரன்கள் சேர்த்தது.
132 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து வெற்றிபெற இந்திய அணி 378 ரன்கள் நிர்ணயித்தது.
இந்த நிலையில் நேற்றைய 4-வது நாள் போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் பும்ரா சரியாக கேப்டன்சி செய்யவில்லை என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது-: பும்ரா தனது யோசனைகளை சரியாகப் பயன்படுத்தவில்லை.
பேட்ஸ்மேன்களால் சுலபமாக கணிக்க முடியும்படி பந்துவீசிவிட்டனர். அதுமட்டுமின்றி ஃபீல்டிங்கிலும் இந்தியா சரியான வியூகங்களை வகுக்கவில்லை. இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடிய போதும், தொடர்ச்சியாக லாங் ஆன், லாங் ஆஃப் திசைகளில் ஃபீல்டர்களை பும்ரா நிற்கவைத்திருந்தார். அது பெரிய முட்டாள்தனம். கடைசி 15 - 20 ஓவர்களில் கூட ஃபீல்டர்களை முன்பு வரவைத்திருந்தால் பேர்ஸ்டோவுக்கு சிரமமாக இருந்து இருக்கும். அதையும் அவர்கள் செய்யவில்லை.
இவ்வாறு பீட்டர்சன் தெரிவித்தார்.
- ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி சாதனை படைத்துள்ளது.
- தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக விக்கெட் இழப்பின்றி 164 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.
இலங்கை அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக காஞ்சனா 46 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ரேனுகா சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகளாக ஷவாலி வர்மா-மந்தானா ஆடினர். 25.4 ஓவரில் இந்திய அணி விக்கெட் ஏதும் விட்டுக் கொடுக்காமல் 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷவாலி வர்மா 71 ரன்னிலும் மந்தனா 94 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதன் மூலம் ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி சாதனை படைத்துள்ளது. விக்கெட் இழப்பின்றி அதிக ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் சாதனையை இந்திய பெண்கள் அணி தகர்த்தி உள்ளது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக விக்கெட் இழப்பின்றி 164 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அதனை இந்திய பெண்கள் அணி முறியடித்துள்ளனர்.

இதற்கு முன்பு 2006-ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக இந்திய பெண்கள் அணி விக்கெட் இழப்பின்றி 146 ரன்கள் எடுத்ததே அதிக ரன்னாக இருந்தது.
- நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்து இருந்தது.
- ஜோரூட் 76 ரன்னிலும், பேர்ஸ்டோவ் 72 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.
பர்மிங்காம்:
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டனில் நடைபெற்று வருகிறது.
இந்தியா முதல் இன்னிங்சில் 416 ரன் குவித்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 284 ரன் எடுத்தது. 132 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 125 ரன் எடுத்து இருந்தது.
நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா 245 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்துக்கு 378 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. புஜாரா 66 ரன்னும், ரிஷப்பண்ட் 57 ரன்னும் எடுத்தனர். பென்ஸ்டோக்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.
378 ரன் இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி 109 ரன்னில் 3 விக்கெட்டை இழந்தது. தொடக்க வீரர் கிராவ்லி 46 ரன்னிலும், ஆலி போப் ரன் எதுவும் எடுக்காமலும் பும்ரா பந்தில் ஆட்டம் இழந்தனர். மற்றொரு தொடக்க வீரரான அலெக்ஸ் லீஸ் 56 ரன்னில் ரன்அவுட் ஆனார்.
4-வது விக்கெட்டான ஜோரூட்-பேர்ஸ்டோவ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை மீட்டதோடு வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றது.
நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்து இருந்தது. ஜோரூட் 76 ரன்னிலும், பேர்ஸ்டோவ் 72 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.
இங்கிலாந்து அணி வெற்றிக்கு மேலும் 119 ரன்கள் தேவை. கைவசம் 7 விக்கெட் உள்ளது. வெற்றிப் பாதையில் அந்த அணி இருக்கிறது.
இன்றைய 5-வது மற்றும் கடைசிநாள் ஆட்டத்தில் 119 ரன்னுக்குள் இங்கிலாந்தின் எஞ்சிய 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா வெற்றி பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். ஒரு வேளை மழையால் பாதிக்கப்பட்டாலும் டெஸ்ட் டிராவில் முடிய வாய்ப்பு இருக்கிறது.
இங்கிலாந்து வெற்றி பெற்றால் தொடர் சமநிலையில் முடியும். இந்தியா வெற்றி பெற்றாலோ அல்லது 'டிரா' ஆனாலோ தொடரை வென்று விடும்.
- இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்-ன் 40 ஆண்டு கால சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.
- இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கபில் தேவ் 22 விக்கெட்டுகள் எடுத்திருந்தார்.
இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 378 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது இந்தியா.
இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 259 ரன்கள் எடுத்துள்ளது. இதில் பும்ரா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்-ன் 40 ஆண்டு கால சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர்கள் பட்டியலில் கபில் தேவ்வை பின்னுக்கு தள்ளி பும்ரா முன்னேறி உள்ளார். 1981-1982-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கபில் தேவ் 22 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். அந்த சாதனை தற்போது பும்ரா (23 விக்கெட்டுகள்) முறியத்துள்ளார். அதற்கு அடுத்தப்படியாக புவனேஸ்வர் குமார் உள்ளார். அவர் 2014-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 19 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதனை தொடர்ந்து ஜாகீர் கான்(2007), இஷாந்த சர்மா(2018) 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
மேலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா (SENA) ஆகிய நாடுகளில் 100 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த 6-வது இந்திய வீரர் என்ற சாதனையையும் பும்ரா படைத்துள்ளார். இந்திய வீரர்களில் அனில் கும்ளே (141), இஷாந்த் சர்மா (130), ஜாகீர் கான் (119), முகமது சமி (119) கபில் தே (119) ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர்.
- முதல் டெஸ்ட் போட்டியின் போது மேத்யூஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
- இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜூலை 8-ந் தேதி தொடங்குகிறது.
ஆஸ்திரேலியா அணிகள் மூன்று வடிவிலான தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கை சென்று விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜூலை 8-ந் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் மேலும் ஒரு இலங்கை வீரருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியின் போது மேத்யூஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரை தொடர்ந்து இடது கை சுழற்பந்து வீச்சாளரான பிரவீன் ஜெயவிக்ரமாவுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
- அனைத்து உடல் எடை பிரிவிலும் தமிழக வீரர், வீராங்கனைகள் களம் காண்கிறார்கள்.
- ஆண்களுக்கு 13 வகையான எடை பிரிவிலும், பெண்களுக்கு 12 வகையான உடல் எடைப் பிரிவிலும் போட்டிகள் நடத்தப்படுகிறது.
சென்னை:
இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் மற்றும் தமிழ் நாடு குத்துச்சண்டை சங்கம் சார்பில் எஸ்.ஆர். எம். பல்கலைக் கழகம் ஆதரவுடன் 5-வது தேசிய இளையோர் குத்துச்சண்டை போட்டி நடத்தப்படுகிறது.
இந்த போட்டி சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக உள் விளை யாட்டு அரங்கில் நாளை (புதன்கிழமை) தொடங்கு கிறது. வருகிற 11-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.
ஆண்களுக்கு 13 வகையான எடை பிரிவிலும், பெண்களுக்கு 12 வகையான உடல் எடைப் பிரிவிலும் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் 33 மாநிலங்களை சேர்ந்த 600 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். 150 பயிற்சியாளர்கள், 50 மானேஜர்களும் பங்கேற்கிறார்கள்.
அனைத்து உடல் எடை பிரிவிலும் தமிழக வீரர், வீராங்கனைகள் களம் காண்கிறார்கள்.
நாளை காலை 10.30 மணிக்கு இந்தப் போட்டியை தாம்பரம் போலீஸ் கமிஷனர் ஏ.அமல்ராஜ் தொடங்கி வைக்கிறார். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டேவிதார், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக பதிவாளர் பொன்னுசாமி, துணை பதிவாளர் அந்தோணி அசோக்குமார், தமிழ்நாடு குத்துசண்டை சங்க தலைவர் பொன்.பாஸ்கரன், செயலாளர் எம்.எஸ்.நாகராஜன் உள்பட பலர் தொடக்க விழாவில் கலந்து கொள்கி றார்கள்.
- நேற்று நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்சை வீழ்த்தியது.
- இரு அணிகளும் இதுவரை தோற்கவில்லை. இதனால் எந்த அணிக்கு முதல் தோல்வி கிடைக்க போகிறது என்று எதிர் பார்க்கப்படுகிறது.
திண்டுக்கல்:
6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 23-ந்தேதி நெல்லையில் தொடங்கியது.
8 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியும் , மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
நேற்று நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்சை வீழ்த்தியது. திண்டுக்கல் அணி 2-வது வெற்றியை பெற்றது. திருப்பூர் அணி முதல் தோல்வியை தழுவியது.
திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 10-வது ஆட்டத்தில் சதுர்வேத் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ்-பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் இதுவரை தோற்கவில்லை. இதனால் எந்த அணிக்கு முதல் தோல்வி கிடைக்க போகிறது என்று எதிர் பார்க்கப்படுகிறது. மதுரை அணி தான் மோதிய 2 ஆட்டங்களிலும் (சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ்) வெற்றி பெற்று இருந்தது. ஹாட்ரிக் வெற்றிக்காக அந்த அணி காத்திருக்கிறது.
நெல்லை அணி தான் மோதிய 3 போட்டிகளிலும (சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ்) வெற்றி பெற்றது. 4-வது வெற்றி ஆர்வத்தில் அந்த அணி இருக்கிறது.






